வந்தது புது ரிப்போர்ட்.. "பூஸ்டர்" தடுப்பூசி போட்டுக் கொண்டால் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா..?
பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது
நியூயார்க்: பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டால், அதனால் பக்கவிளைவுகள் ஏற்படுமா என்பது குறித்த புது ஆய்வு ஒன்று வெளியாகி உள்ளது.
Recommended Video
பல்வேறு வடிவங்கள் எடுத்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது.. இதுவரை இந்த வைரஸை போக்க எந்த மருத்துவமும் கண்டுபிடிக்கப்படவில்லை...
முறையான சிகிச்சை முறைகள் இல்லாமல், இப்போதைக்கு தடுப்பூசியை மட்டுமே நம்பி உள்ள சூழல் ஏற்பட்டுள்ளது.

2 தடுப்பூசிகள்
2 தடுப்பூசிகள் கட்டாயம் போட்டால்தான், தொற்று தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும் என்ற நிலை உருவானது.. அதன்படியே உலக மக்களும் 2 தடுப்பூசிகளையும் போட்டு வருகின்றனர்.. சில நாடுகளில் 2 தடுப்பூசிகள் போட்டு முடிக்கப்பட்டுவிட்டது..

இந்தியா
சில நாடுகளில் ஒரு தடுப்பூசி முற்றிலும் போடப்பட்டு விட்டது. மேலும் சில நாடுகளில் 3வது தடுப்பூசி அதாவது பூஸ்டர் டோஸ் போட துவங்கி உள்ளனர்.. இதில் இஸ்ரேலும் ஒன்று.. 2 தடுப்பூசிகள் போடப்பட்டும் அந்த நாட்டில் தொற்று குறையவில்லை.. அதேபோல, உலகிலேயே தொற்று பாதிப்பில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள அமெரிக்காவிலும் 2 தடுப்பூசி செலுத்தியும் தொற்று குறையாததால், பூஸ்டர் தடுப்பூசி பக்கம் கவனத்தை திருப்பி உள்ளனர்.

புது ஆய்வு
ஆனால், இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி பற்றி எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை.. இன்னும் 2 தடுப்பூசிகளே பல்வேறு மாநிலங்களில் செலுத்தி முடிக்கப்படவில்லை.. இப்படிப்பட்ட சூழலில்தான், பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்படுமா என்ற ஆய்வினை அமெரிக்கா மேற்கொண்டது.. அதன்படியே, அமெரிக்க நோய் தடுப்பு மையம் ஒன்று ஆய்வு செய்து, அந்த அறிக்கையையும் வெளியிட்டுள்ளது...

விளைவுகள்
அந்த அறிக்கையில், "2வது தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு எந்த மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படுமோ, அதே மாதிரியான மிதமான பக்க விளைவுகளே பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் ஏற்படுகிறது.. பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 71 சதவீதம் பேருக்கு ஊசி போட்ட இடத்தில் வலி ஏற்படுகிறது.. 56 சதவீதம் பேர் களைப்பாக உணர்கிறார்கள், 43 சதவீதம் பேருக்கு தலைவலி பாதிப்பு உள்ளது,

செயல்பாடுகள்
28% பேருக்கு தங்களது அன்றாட செயல்பாடுகளில் மந்த நிலை ஏற்படுகிறது... இருந்தாலும் அதெல்லாம் மிதமான பக்க விளைவுகள்தான்... இதில் 0.1 சதவீதம் பேர் மட்டுமே பக்கவிளைவு அதிகமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்" என்று அறிக்கையில் கூறியுள்ளது. உலகம் முழுவதும் 23 கோடி பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றாலும், 21 கோடி பேர் தொற்றில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications