இன்று விண்வெளிக்கு செல்லும் 2 நாசா வீரர்கள்.. விண்ணுக்கும் கொரோனா பரவுமா.. ஸ்பேஸ் எக்ஸ் சொன்ன பதில்!
நியூயார்க்: இன்று ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணுக்கு செல்லும் வீரர்கள் மூலம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருக்கும் மற்ற வீரர்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புள்ளதா என்று பலர் கேட்டு இருக்கிறார்கள்.
Recommended Video
நாசாவை சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் இன்று சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட உள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் இவர்கள் விண்ணுக்கு செல்கிறார்கள்.
ஃபல்கான் 9 ராக்கெட் அதிகாலை 2.30 மணிக்கு விண்ணுக்கு செல்கிறது. கணக்குப்படி தற்போது கவுண்டவுன் நடந்து வருகிறது. அமெரிக்காவில் புளோரிடாவில் இருக்கும் Kennedy Space Center's Complex 39A இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட உள்ளது.

யார் இவர்கள்
நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் இதில் செல்ல இருக்கிறார்கள். இவர்கள் இருவரும்தான் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ஆராய்ச்சி செய்ய செல்கிறார்கள். அதிக அனுபவம் கொண்டவர்கள். இதற்கு இவர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்ய இருக்கிறார்கள். அனுபவத்தின்படி இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு
இந்த நிலையில் இந்த வீரர்கள் மூலம் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருக்கும் வீரர்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புள்ளதா என்று பலர் கேட்டு இருக்கிறார்கள். அதாவது இந்த இரண்டு வீரர்களில் யாராவது ஒருவர் தங்கள் உடலில் கொரோனாவை சுமந்து கொண்டு சென்றால் என்ன நடக்கும் என்று பலர் கேட்டு இருக்கிறார்கள். இதற்கு ஸ்பேஸ் எக்ஸ் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை
அதன்படி, இந்த இரண்டு வீரர்களும் எப்போதோ தனிமைப்படுத்தப்பட்டுவிட்டனர்.பொதுவாக வீரர்கள் விண்ணுக்கு செல்லும் முன் அவர்களை தனிமைப்படுத்துவது அவசியம். கொரோனா காலம் என்று இல்லை. அதற்கு முன்பே அவர்களுக்கு வைரஸ் தாக்குதல் எதுவும் ஏற்பட கூடாது என்று சில நாட்கள் தனிமையில் வைத்து இருப்போம் . அவர்கள் திரும்பி வந்த பின்பும் தனிமையில் வைத்து இருப்போம் .

சோதனை ரிசல்ட்
வானில் இருந்து பூமிக்கு இவர்கள் நோயை கொண்டு வர கூடாது என்று தனிமையில் வைத்து இருப்பார்கள். அதேபோல் இவர்களை விண்ணுக்கு அனுப்பும் முன் தனிமையில் வைத்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது கொரோனா காலம் என்பதால் இவர்களுக்கு கொரோனா சோதனையும் செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் இருவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டு, அதில் முடிவுகள் நெகட்டிவ் என்று வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது .

கொரோனா வராது
இதனால் இவர்கள் மூலம் வானத்துக்கு கொரோனா பரவாது. சர்வதேச விண்வெளி மையத்தில் இவர்கள் மூலம் யாரும் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை. அதே சமயம் பாதுகாப்பு கருதி இந்த இரண்டு விண்வெளி வீரர்கள் யாரையும் பார்க்க கூடாது, உறவினர்களை சந்திக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் அதிகாரிகள் உடன் மட்டுமே இவர்கள் சந்திப்பு நடத்துவார்கள்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications