பிரபல ஆபாச நடிகைகள்.. புட்டு புட்டு வைத்த ரகசியங்கள்.. அசிங்கப்பட்ட "சிங்கம்".. டிரம்ப் கைதாகிறாரா?
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
நியூயார்க்: பிரபல நடிகை ஒருவருடன் முறையற்ற உறவு கொண்டதால் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.... என்ன நடந்தது?
அமெரிக்க அதிபர்கள் மீது பாலியல் புகார்கள் எழுவது வாடிக்கையாகி விட்டது.. இந்த லிஸ்ட்டில் டொனால்ட் டிரம்ப்பும் ஒருவர்.. 3-க்கும் மேற்பட்ட நடிகைகள் இவர்மீது பாலியல் புகார்களை பொதுவெளியிலேயே அம்பலப்படுத்தி உள்ளனர்.
ஆரம்ப காலத்தில் டிரம்ப் ஒரு தொழிலதிபர் ஆவார்.. இவர் மீது ஏற்கனவே பல பெண்கள் பாலியல் புகார்கள் தெரிவித்துள்ளனர். 10 அதிகமான பெண்கள், டொனால்டு டிரம்ப் மீது பாலியல் புகார் தெரிவித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்ட நிலையில், இந்நிலையில்தான் ஆபாச பட நடிகைகளின் புகார்கள் வெளிவர தொடங்கின.

ஹோட்டல் ரூம்
முதன்முதலாக, ஜெசிகா டிரேக் என்ற ஆபாச நடிகை, இந்த புகார் குறித்து கூறியிருந்தார்.. "கடந்த 2006ம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள லேக் தஹூவில் நடந்த கோல்ப் போட்டியின்போது நான் டொனால்டு டிரம்ப்பை முதல்முதலாக சந்தித்தேன். அவர் என்னுடன் கடலை போட்டார்... கோல்ப் மைதானத்தில் என்னுடன் சேர்ந்து நடந்து வருமாறு சொன்னார்.. பிறகு, என்னை அவருடைய ஹோட்டல் ரூமுக்கு அழைத்தார். நான் 2 பெண்களுடன் சென்றேன்... ஹோட்டல் அறையில் டிரம்ப் என்னையும் மற்ற இரண்டு பெண்களையும் இழுத்துப் பிடித்து கட்டிப்பிடித்தார். மேலும் எங்களின் அனுமதி இல்லாமலேயே எங்களை முத்தமிட்டார்.

பிரபல நடிகை
ஆபாசப் படங்களில் நடிப்பது எப்படி இருக்கும் என டிரம்ப் என்னிடம் கேட்டார். நான் என்னுடைய ரூமுக்கு வந்த பிறகு டிரம்ப் போன் செய்து தன்னுடைய அறைக்கு வருமாறு அழைத்தார். எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார். டிரம்ப் மறுபடியும் போன் செய்து தன்னுடன் பார்ட்டிக்கு வந்தால் 10 ஆயிரம் டாலர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள என்னுடைய வீட்டிற்கு அவரின் விமானத்தில் செல்லலாம் என்றார்" இப்படி பலப்பல புகார்களை ஜெசிகா கூறியிருந்தார்... டிரம்ப் நடத்தை குறித்து தொடர்ந்து மோசமான தகவல்கள் வெளியாகி கொண்டே இருந்ததால், அவருக்கான ஆதரவுகளும் மெல்ல மெல்ல சரிய துவங்கின.

பிரபல நடிகைகள்
கடந்த 2017ம் வருடக்கணக்குபடி, டிரம்ப் மீது மொத்தம் 19 பெண்கள் பாலியல் புகார் அளித்திருந்தனர்.. இதற்கு பிறகுதான், அடுத்த ஆபாச பட நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் பகீரை கிளப்பினார்.. தான் வெளியிட்ட 'புல் டிஸ்குளோசர்' என்ற புத்தகத்தில், அப்போதைய அதிபராக இருந்த டிரம்ப்புடன் உறவு குறித்து விளக்கமாக குறிப்பிட்டிருந்தார்.. அதாவது கடந்த 2006ல் டிரம்ப் மனைவி மெலினா குழந்தை பிறப்புகாக சென்றிருந்தபோது, டிரம்ப் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து இவ்வாறு நடந்து கொண்டதாக அந்த புத்தகத்தில் பதிவு செய்திருந்தார்.. இந்த குற்றச்சாட்டை எல்லாம் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தாலும், கடந்த 2016ம் ஆண்டு, அதிபர் தேர்தல் சமயத்தில், இந்த குற்றச்சாட்டு வெளியாகியிருந்தால், அதன் தாக்கம் தேர்தலில் அதிகமாக எதிரொலிக்கவே செய்தது..

பின்னடைவு
டிரம்பிற்கு மிகப்பெரிய பின்னடைவும் தேர்தலில் ஏற்பட்டது.. இதற்கு பிறகு, இந்த விவகாரம் தலைதூக்காமல் இருக்கவும், இதுகுறித்து பேசாமல் இருக்கவும் 1.30 லட்சம் அமெரிக்க டாலர்கள் நடிகைக்கு வழங்கப்பட்டதாக இன்னொரு குற்றச்சாட்டு எழுந்தது... இந்த பணம், பிரச்சார நிதியில் இருந்து சட்ட விரோதமாக வழங்கப்பட்டதாக டிரம்ப் மீது இன்னமும் வழக்குகள் உள்ளன.. எப்போதுமே லைம்லைட்டில் இருக்க விரும்பும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் சீனில் வந்துள்ளார்.. இதற்கான பரபரப்பை தானே 2 நாட்களுக்கு முன்பு கிளப்பியும் விட்டுள்ளார்.

ஆபாச படங்கள்
"முன்னணி குடியரசுக் கட்சி வேட்பாளர் மற்றும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் அடுத்த வாரம் செவ்வாய்கிழமை கைது செய்யப்படுவார்கள். போராட்டத்திற்கு தயாராகுங்கள்.." என்று ஒரு ட்வீட்டையும் பதிவிட்டிருந்தார்.. பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்ட தன்னுடைய பதிவில், "ஊழல் மற்றும் செல்வாக்கு மிக்க மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் இருந்து வந்த சட்டவிரோதமான கசிவுகள்" என்று டிரம்ப் அதில் குறிப்பிட்டிருந்தார்.. இந்த 2 நாட்களாகவே இந்த ட்வீட் பற்றின பரபரப்புதான் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது..

ஆபாச நடிகை
நடிகைக்கு $130,000 செலுத்திய விவகாரத்தில்தான், டிரம்ப் கைது செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.. ஆனால், இந்த வழக்கில் டிரம்ப் மீது குற்றம் சாட்டலாமா? என்று வழக்கறிஞர்கள் ஆலோசித்து வருகின்றனர்.. காரணம், டிரம்ப்புக்கு 76 வயதாகிறது.. இதனால் குற்றஞ்சாட்டப்பட்ட முதல் முன்னாள் அதிபராக மாறுவார்.. மன்ஹாட்டன் கிராண்ட் ஜூரியால் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டால், குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள டிரம்ப் சரணடைவார் என்று டிரம்பின் வழக்கறிஞர் CNBC மீடியாவிடம் விரிவாக கூறியிருந்தார். டிரம்ப் சொல்லியிருந்தது, இன்றைய தினம் அதாவது 21ம் தேதிதான் என்பதால், ஒருவேளை அவர் இன்று கைதாவாரா? என்ற எதிர்பார்ப்புகள் நிலவி கொண்டிருக்கின்றன..!!












Click it and Unblock the Notifications