இந்தியாவை விட்டுட்டாங்களே.. டீம் போட்ட சீனா, ஜப்பான், தென்கொரியா.. அமெரிக்காவிற்கு ஆப்படிக்க முடிவு!
சென்னை: சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் ஒன்றாக கரம் கோர்க்க முடிவு செய்துள்ளன. அமெரிக்க கட்டணங்களுக்கு கூட்டாக பதிலளிக்க முடிவு செய்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்க உள்ள பதிலடி வரிகள் நாளை முதல் தொடங்க உள்ளது. இதற்கு பதிலடி தர மேற்கண்ட நாடுகள் முடிவு செய்துள்ளன. சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் ஒன்றாக கரம் கோர்க்க முடிவு செய்துள்ளன. ஆனால் இந்த குழுவில் இந்தியா சேர்க்கப்படவில்லை. சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் முழுமையான இலவச வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளனர். அதாவது இந்த 3 நாடுகள் தங்களுக்குள் வரி இல்லாமல் வர்த்தகம் மேற்கொள்ளும். இதனால் அவர்கள் அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொள்வதை குறைத்துக்கொள்வார்கள். இது அமெரிக்காவிற்கு சிக்கல் ஆகும்.

ஜப்பான் மற்றும் தென் கொரியா சீனாவில் இருந்து செமி கண்டக்டர் மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளன, மேலும் ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் இருந்து சிப் பொருட்களை வாங்க சீனா முடிவு செய்துள்ளது. இவர்கள் இது தொடர்பாக வர்த்தகத்தை அமெரிக்காவுடன் மேற்கொள்ளாமல் குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
சீனா மீது அமெரிக்கா மேற்கொண்டு உள்ள வர்த்தக போருக்கு சீனா பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. மற்ற நாடுகள் போல அமெரிக்காவை சமாளிக்க வரியை குறைக்காமல்.. சீனா பதிலடி ஆக்சன்களை எடுக்க தொடங்கி உள்ளது. அதன்படி அமெரிக்காவிற்கு எதிராக சர்வதேச வர்த்தக மையத்தில் சீனா வழக்கு தொடுத்து உள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கைகள் உலக வர்த்தக போரை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறி சீனா வழக்கு தொடுத்து உள்ளது.
வர்த்தக போர்
சீனாவிற்கு எதிராக அமெரிக்கா இன்று வர்த்தக போரை அறிவித்த நிலையில் அமெரிக்காவின் முடிவிற்கு பதிலடியாக சீனா பதில் வரியை விதித்து உள்ளது. அதன்படி இன்று டிரம்புக்கு பதிலடி கொடுத்தது சீனா. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி, கோதுமை, சோளம் மற்றும் பருத்திக்கு கூடுதல் 15% வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வர்த்தக போரை
அதிகாரபூர்வமாக டிரம்ப் தொடங்கி உள்ளார்.
அதன்படி மெக்சிகோ மற்றும் கனடா மீது 25 சதவீத வரிகளையும், சீனா மீது 10 சதவீத வரிகளையும் விதித்து அவர் உத்தரவிட்டு உள்ளார் சீனா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகியவை அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையில் முதலிடம் வகிக்கின்றன, சீனா அதிகப்பட்சமாக 30.2 சதவிகிதம், மெக்ஸிகோ 19 சதவிகிதம் மற்றும் கனடா 14 சதவிகிதம் வரி பற்றாக்குறையில் பங்கு வகிக்கின்றன. தற்போது ஏப்ரல் 2ம் தேதி.. அதாவது நாளை முதல் தொடங்க உள்ள பதிலடி வரிக்கும் கடுமையான பதில்களை வழங்க சீனா, ஜப்பான், தென்கொரியா முடிவு செய்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்க உள்ள வர்த்தக போர் அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்க உள்ளது. இன்று நள்ளிரவில் இந்த வர்த்தக போர் அமலுக்கு வர உள்ளது. இந்த வர்த்தக போர் இந்தியா மீதும் தொடுக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் கணித்து உள்ளது. Reciprocal tariffs என்று அழைக்கப்படும் பரஸ்பர கட்டணங்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இதன் மூலம் இந்தியா நேரடியாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நெதன்யாகு-க்கு வேற சாய்ஸே இல்லை.. நெருக்கும் டிரம்ப்! ஈரான் தாக்குதலால் மீண்டும் ஹை டென்ஷன் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications