ஃபியூசேரியம் கிராமினியரம்.. தொடங்கிய பயோ யுத்தம்.. அமெரிக்காவிற்குள் சீனா அனுப்பிய பொல்லாத கிருமி!
நியூயார்க்: அமெரிக்காவிற்குள் அபாயகரமான பயோ ஆயுதம்.. அதாவது பயோ வைரஸ் கிருமியை கடத்தியதாக கூறப்படும் சீன நாட்டவர் ஒருவரை FBI கைது செய்துள்ளது. இது தொடர்பாக FBI இயக்குனர் காஸ் பட்டேல் கடுமையான புகார்களை வைத்துள்ளார்.
உலக அளவில் போர் செய்யும் முறைகள் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. கையடக்க டிரோன் வைத்து ரஷ்யா மீது உக்ரைன் படுபயங்கர தாக்குதல்கள் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் அஸ்திவாரத்தை ஆட்டி உள்ளது. இன்னொரு பக்கம் சீனா பயோ போர் தொடுக்கும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது அமெரிக்காவின் உணவு சங்கிலியை குறி வைத்து சீனா தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஃபியூசேரியம் கிராமினியரம் என்ற கிருமியை சீனா அமெரிக்கா உள்ளே கொண்டு வந்ததாக FBI இயக்குனர் காஸ் பட்டேல் கடுமையான புகார்களை வைத்துள்ளார்.
உயிரியல் கிருமி கடத்தல் - எஃப்.பி.ஐயின் அதிரடி நடவடிக்கை
யுன்கிங் ஜியான் என்ற அந்த நபர், "ஃபியூசேரியம் கிராமினியரம்" எனப்படும் ஆபத்தான பூஞ்சையை அமெரிக்காவிற்குள் கடத்தியதாக கூறப்படுகிறது. இது ஒரு விவசாய பயங்கரவாத கிருமி ஆகும். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வைத்து அதை ஆராய்ச்சி செய்வதற்காக அவர் இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பூஞ்சையினால் கோதுமை, பார்லி, சோளம் மற்றும் அரிசி போன்ற பயிர்களுக்கு "ஹெட் பிளைட்" என்ற நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இது மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் கடுமையான உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கும். மேலும், ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் பில்லியன் கணக்கான பொருளாதார இழப்புகளுக்கு இது காரணமாகிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கைக்கூலி
ஜியான் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசமாக இருந்ததாகவும், சீனாவில் இந்த நோய்க்கிருமி தொடர்பான பணிகளுக்காக சீன அரசாங்கத்திடம் இருந்து நிதி பெற்றதாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜியானின் காதலி சுன்யோங் லியுவும் இந்த புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர் ஒரு சீன பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். அங்கு அவர் அதே நோய்க்கிருமி குறித்து ஆராய்ச்சி செய்கிறார். லியு முதலில் பொய் சொன்னதாகவும், பின்னர் ஃபியூசேரியம் கிராமினியத்தை அமெரிக்காவிற்குள் கடத்தியதை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. டெட்ராய்ட் மெட்ரோபொலிட்டன் விமான நிலையம் வழியாக அவர் அமெரிக்காவிற்குள் நுழைந்து மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டிருந்தார்.
இரு நபர்கள் மீதும் சதி, பொருட்களை அமெரிக்காவிற்குள் கடத்துதல், பொய்யான தகவல்களை அளித்தல் மற்றும் விசா மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து எஃப்.பி.ஐ தரப்பில் கூறுகையில், "அமெரிக்க நிறுவனங்களுக்குள் ஊடுருவி, நமது உணவு விநியோகத்தை குறிவைத்து தாக்குதல் CCP தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இது அமெரிக்க மக்களின் உயிருக்கும், பொருளாதாரத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும் ஒரு செயலாகும். இதனை தடுக்க எங்களின் எஃப்.பி.ஐ தொடர்ந்து அயராது உழைக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட @FBIDetroit குழுவினருக்கும், @CBPக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நீதியின் மூலம் சரியான தீர்வு கிடைக்கும் என்றும் எஃப்.பி.ஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆபத்தான திட்டங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அமெரிக்காவின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இது வலியுறுத்துகிறது.












Click it and Unblock the Notifications