இந்தியாவுக்கு அதிகரித்த ஆதரவு.. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவாதத்தை வாபஸ் பெற்ற சீனா
நியூயார்க்: ஜம்மு-காஷ்மீரின் நிலைமை குறித்து விவாதிக்க வேண்டும் என்ற சீனாவின் கோரிக்கைக்கு முக்கிய உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கவுன்சிலில் தனது கோரிக்கையை சீனா அமைதியாக வாபஸ் பெற்றுக்கொண்டது.
370 வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. அத்துடன் இரு யூனியன் பிரதேசங்களாக அந்த மாநிலங்கள் பிரிக்கப்பபட்டன.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், சீனாவின் ஆதரவுடன் ஆகஸ்ட் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் முறையிட்டது. இதன் காரணமாக அப்போது காஷ்மீர் விவகாரம் விவாதிக்கப்பட்டது.

பாகிஸ்தான் முறையீடு
அதன்பிறகு தற்போது பாகிஸ்தான் மற்றும் அதன் நட்பு நாடான சீனாவின் கோரிக்கையை ஏற்று முதல் தடவையாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியானது.

ஐநாவுக்கு கடிதம்
டிசம்பர் 12 ம் தேதி ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு எழுதிய கடிதத்தில், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி. ஜம்மு காஷ்மீரில் மேலும் பதற்றம் அதிகரிப்பதாக கூறி கவலை தெரிவித்தார்.

விளக்கம் கேட்டது
இதேபோல் நிலைமையின் தீவிரத்தன்மை மற்றும் அதிகரிக்கும் அபாயம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாகிஸ்தானின் கோரிக்கைக்கு ஆதரவு அளிப்பதாக சீனாவும் தெரிவித்தது. மேலும் ஜம்மு காஷ்மீரின்நிலைமை குறித்து ஐநா சபைக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சீனா கேட்டிருந்தது.

சீனா வாபஸ்
சீனாவின் கோரிக்கையை ஏற்று முதல்முறையாக மூடப்பட்ட அறைக்குள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட இருந்தது. இந்நிலையில் இந்திய நேரப்படி நேற்று இரவு கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீனாவின் கோரிக்கைக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் முக்கிய உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தனது கோரிக்கையை சீனா வாபஸ் பெற்றுக்கொண்டது.

இந்தியா அதிரடி
இதற்கான காரணங்கள் வெளியாகி உள்ளது. காஷ்மீர் குறித்து சீனா கோரிக்கை வைத்த போது, இந்தியா தரப்பில், நாங்கள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர்களாக இல்லை. எனவே விவாதத்திற்கு நாங்கள் வர இயலாது என்று தெரிவிக்கப்பட்டது. பிரான்ஸ் அதிகாரிகள், இந்தியா பாகிஸ்தான் என இரு தரப்பு ரீதியாக தீர்க்கப்பட வேண்டும் என்பதில் தங்கள் நாடு தெளிவாக இருப்பதாக கூறியதுடன், காஷ்மீர் விவகாரம் இங்கு விவாதிக்கப்படாது என்று தெரிவித்தனர். இதனால் சீனா தனது கோரிக்கையை வாபஸ் பெற்றது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications