நடுவானில் திடீரென மாயமான 'மேட்டர்'.. ஐயோ பாதியை காணோமாமே.. பதறிப்போன விமான பயணி.. என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தான் கொண்டு வந்த விலையுயர்ந்த விஸ்கியில் பாதி பாட்டில் காலி செய்யப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்த விஸ்கியை அவர் தனது பையில் வைத்திருந்ததாகவும், அந்த பையை மீண்டும் பிரித்து பார்த்தபோது விஸ்கி பாட்டிலின் சீல் உடைக்கப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.

விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகள் பிரித்து பார்க்கப்படுவதாகவும், சில பொருட்கள் அதிலிருந்து திருடப்படுவதாகவும் தொடர் புகார்கள் அடிக்கடி வந்துக்கொண்டுதான் இருக்கின்றன. இதுபோன்ற புகார்கள் வரும்போது மட்டும் பெயருக்கு சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆனால், தற்போது கிளம்பியுள்ள புகார் 'வெரி சீரியஸ்' புகாராக பார்க்கப்படுகிறது. அதாவது கிறிஸ்டோபர் ஆம்ப்லர் எனும் பயணி யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று முன்தினம் பயணித்துள்ளார்.

பயணத்திற்காக அவர் சில பொருட்களை தன்னுடன் கொண்டு சென்றுள்ளார். துணிமணிகளுடன் வேறு ஒரு சமாசாரத்தையும் அவர் கொண்டு சென்றுள்ளார். க்ளென்மோராஞ்சி 'எ டேல் ஆஃப் கேக்' விஸ்கிதான் அந்த சமாச்சாரம். சரி இதில் என்ன ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா? இந்த விஸ்கிதான் ஸ்பெஷல். இந்த விஸ்கியின் விலை மட்டும் 45 ஆயிரம் ரூபாய். இந்த விஸ்கி கிடைப்பதும் கொஞ்சம் 'ரேர்தான்'. இப்படி இருக்கையில் கஷ்டப்பட்டு வாங்கி அதை வீட்டில் வந்து குடிக்கலாம் என்று இருந்திருக்கிறார்.

விஸ்கி

விஸ்கி

ஆனால் ஊருக்கு வந்து இறங்கி வீடு சேர்ந்த பின்னர் பாட்டிலை ஆசை ஆசையாக எடுத்து பார்த்திருக்கிறார். அப்போதுதான் அந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அதாவது பாட்டிலில் பாதி விஸ்கிதான் இருந்திருக்கிறது. "ஏன்டா இவ்ளோ ரிஸ்க் எடுத்து இந்த சரக்கை வாங்கி வந்தா இப்படி பாதி சரக்கை காலி பண்ணிட்டிங்களேடா" என்று ஆம்ப்லர் புமல்பியுள்ளார். இந்த விவகாரத்தை இத்துடன் விட்டுவிடக்கூடாது என்று அவர் யோசித்துக்கொண்டே ட்விட்டரில் சம்பவத்தை பதிவிட்டுள்ளார். அதில், "யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் என்னுடைய பேக்கில் சீலிட்டவாறு வைக்கப்பட்டிருந்த 'எ டேல் ஆஃப் கேக்' எனும் விஸ்கி பாட்டிலின் சீல் உடைக்கப்பட்டுள்ளது.

 விலையுயர்ந்த விஸ்கி

விலையுயர்ந்த விஸ்கி

1 லிட்டர் பாட்டிலில் இருந்த சரக்கு பாதி காலி செய்யப்பட்டுள்ளது. இந்த செயலை செய்தவர்கள் நிச்சயம் திருடர்களாகதான் இருக்க வேண்டும். ஆம் விமான நிலைய ஊழியர்கள் திருடர்கள்தான். அவர்கள் உங்கள் அனைவரின் பைகளையும் சோதனையிட்டு திருடுகிறார்கள்" என்று கூறியுள்ளார். இந்த ட்வீட் தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது. வழக்கமாக விலையுயர்ந்த பொருட்கள் மட்டும் காணாமல் போய் வந்த நிலையில், தற்போது பாட்டிலுக்குள் இருந்த சரக்கு காணாமல் போயிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஏர்லைன்ஸ் சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

 ட்வீட்

ட்வீட்

1 லிட்டர் பாட்டிலில் இருந்த சரக்கு பாதி காலி செய்யப்பட்டுள்ளது. இந்த செயலை செய்தவர்கள் நிச்சயம் திருடர்களாகதான் இருக்க வேண்டும். ஆம் விமான நிலைய ஊழியர்கள் திருடர்கள்தான். அவர்கள் உங்கள் அனைவரின் பைகளையும் சோதனையிட்டு திருடுகிறார்கள்" என்று கூறியுள்ளார். இந்த ட்வீட் தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது. வழக்கமாக விலையுயர்ந்த பொருட்கள் மட்டும் காணாமல் போய் வந்த நிலையில், தற்போது பாட்டிலுக்குள் இருந்த சரக்கு காணாமல் போயிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஏர்லைன்ஸ் சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இதேபோல

இதேபோல

ஆனால் சிலர் ஆம்ப்லரின் புகாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். "நீங்கள் சொல்வது சரிதான். என்னுடைய பையிலிருந்தும் சில பொருட்கள் இப்படி காணாமல் போயுள்ளன. ஆனால் இது குறித்து கேட்டதற்கு யாரும் உரிய விளக்கம் கொடுக்கவில்லை" என்று கூறியுள்ளனர். இதேபோல சமீபத்தில் இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் தனது பையுடன் மற்றொருவரின் பையையும் எடுத்து சென்றிருக்கிறார். இதனையடுத்து வீடியோவை வைத்து அந்த நபரை கண்டுபிடித்து பையை மீட்டுள்ளார். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும் நிலையில், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+