கருவையும் குழந்தையாக கன்ஸிடர் பண்ணுங்க.. "கார்பூலில்" கலாட்டா செய்த கர்ப்பிணி பெண்.. நூதன கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் ஒரு பயணிக்கும் அதிகமானோர் பயணிக்கும் சாலையின் பிரத்யேக பாதையில் கார் ஓட்டிச் சென்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தான் கருவுற்று இருப்பதால் தன்னுடைய குழந்தையையும் மற்றொரு பயணியாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என அப்பெண் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் அந்நாட்டில் பேசு பொருளாகியுள்ளது.

அமெரிக்காவின் சாலைகளுக்கு என தனி போக்குவரத்து சட்டங்கள் அமலில் உள்ளன. அதன்படி அங்குள்ள சாலைகளில் ஒரு வழி மட்டும் எப்போதும் காலியாக இருக்கும். இது கார்பூல்(Carpool) என்று அழைக்கப்படுகிறது. இந்த பாதையில் பயணிக்க விரும்பும் வாகன ஓட்டிகள், ஓட்டுநர் தவிர்த்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பயணிகளை கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு பயணிப்பதன் மூலம் கரியமில வாயு உமிழ்வை தவிர்க்க முடியும். மட்டுமல்லாது தேவையற்ற வாகன நெரிசல்களை குறைக்க முடியும்.

Consider the fetus as a child too, US pregnant womans new demand to avoid tropic fine

இப்படியாக இருக்க டெக்ஸாஸில் கர்ப்பிணி ஒருவர் இந்த கார்பூல் பாதையில் தனியாக கார் ஓட்டி வந்துள்ளார். இதனை கண்ட போக்குவரத்து காவல் அதிகாரிகள் அப்பெண்மணிக்கு அபராதம் விதித்துள்ளனர். சரி இதுவரை எல்லாம் சரிதானே என்று நமக்கு தோன்றலாம். ஆனால் அப்பெண்மணி இந்த விசயத்தை அவ்வளவு எளிதாக விடவில்லை.

ஏனெனில் டெக்ஸாஸ் மாகாணம் பல பழமையான கருத்துக்களை சட்டமாக ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி வயிற்றில் இருக்கும் கருவை ஒரு நபராக அங்கீகரிக்கிறது. ஆகவே இங்கிருந்துதான் பிரச்னை தொடங்குகிறது. இந்த அபராதம் குறித்து செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், தான் அந்த பிரத்யேக பாதையில் தனியாக பயணிக்கவில்லை என்றும் தனது வயிற்றில் உள்ள கருவை மற்றொரு பயணியாக கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இந்த சட்டத்தை அந்நாட்டு நீதிமன்றம் தடை செய்தது. இதனையடுத்து பெரும் போராட்டங்கள் நடந்தன. இந்த பிரச்னையின் அடிப்படையிலேயே தற்போது கார்பூல் சர்ச்சையும் மேலெழுந்துள்ளது.

எது எப்படியாயினும், டெக்ஸாஸ் மாகாணத்தில் அமலில் உள்ள பழைய சட்டங்கள் வயிற்றில் உள்ள கருவை ஒரு நபராக கருதினாலும், அது போக்குவரத்து சட்டங்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+