மாஸ்டர்மைண்ட்! டொனால்ட் டிரம்பை சுடுவதற்கு பின்.. சிஐஏவின் கைகள்? அமெரிக்காவை உலுக்கும் பூதம்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் சுடப்பட்ட சம்பவத்திற்கு பின் சிஐஏ இருக்கலாம் என்று ஒரு தியரி முன் வைக்கப்படுகிறது. பொதுவாக பெரும் தலைவர்கள் தாக்கப்பட்டால், கொல்லப்பட்டால் இது போன்ற கான்ஸ்பிரசி தியரிக்கள் வருவது வழக்கம். அப்படித்தான் டிரம்ப் அட்டாக்கிற்கு பின்பும் இதேபோன்ற ஒரு தியரி வைக்கப்பட்டு உள்ளது.
1963ல் அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடி கொலை செய்யப்பட்ட போதும் இதே போன்ற சர்ச்சைகள் எழுந்தன. கென்னடி சிஐஏவை அதிபராக இருந்த காலத்தில் தீவிரமாக எதிர்த்தார். CIA இயக்குனர் ஆலன் டல்லஸ் பதவி நீக்கம், கென்னடி பே ஆஃப் பிக்ஸ் படையெடுப்பிற்கு விமான ஆதரவை வழங்க மறுத்தமை, சிஐஏ ஏஜென்சியின் பட்ஜெட் 20 சதவீதம் குறைக்கப்பட்டது. அதோடு அந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கூட நினைத்தார் என்று கூறப்படுவது வழக்கம்.

அப்படி இருக்க அவரின் மரணத்திற்கு பின்.. அதாவது கொலைக்கு பின் சிஐஏ இருக்கலாம் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இப்போது வரை இந்த விவாதம் ஒரு தீர்க்கப்படாத புதிராகவே உள்ளது.
டிரம்ப் அட்டாக்: இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் சுடப்பட்ட சம்பவத்திற்கு பின் சிஐஏ இருக்கலாம் என்று ஒரு தியரி முன் வைக்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் நேற்று பென்சில்வேனியாவில் சுடப்பட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சுடப்பட்ட வீடியோக்கள் வைரலாகி அவர் சுடப்பட்ட பின் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் கவனத்தில் பெற்றுள்ளது. காதில் ரத்தம் வடிய அவர் முகம் சாய்த்து படுத்துக்கிடந்த புகைப்படம் கவனம் பெற்றுள்ளது.
டிரம்ப் காயமடைந்த நிலையில் சந்தேகத்திற்குரிய 2 பேர் பாதுகாப்பு வீரர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளனர். பென்சில்வேனியாவில் டிரம்ப் பிரச்சாரம் செய்யும் போது இந்த சம்பவம் நடந்து உள்ளது. அவர் பிடன் குறித்து பேசிக்கொண்டு இருக்கும் போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கி சூடு; டிரம்ப்பை சுட்டதாக நம்பப்படும் 2 நபர்கள் சீக்ரெட் சர்வீஸ் வீரர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளனர். துப்பாக்கி சூட்டிற்கு பின் டிரம்ப் மக்களிடம் கைகளை உயர்த்தி காட்டினார். அவரின் காதுகளில் ரத்த காயம் ஏற்பட்டு இருந்தது.அந்த ரத்த காயத்தோடு டிரம்ப் மக்கள் முன்னிலையில் ஜே போடுவது போல துணிச்சலாக சவால் விடுவது போல கைகளை உயர்த்தி காட்டியது கவனம் பெற்றது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிரம்ப் முழு உடல் நலத்துடன் உள்ளார்.
சிறிய ரக துப்பாக்கி ஒன்றின் மூலம் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடத்தப்பட்டு உள்ளது. டிரம்ப் காதுகளில் மட்டும் ரத்த காயம் ஏற்பட்டு உள்ளது. மற்றபடி அவருக்கு வேறு பாதிப்புகள் இல்லை.
என்ன சந்தேகம்: அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் சுடப்பட்ட சம்பவத்திற்கு பின் சிஐஏ இருக்கலாம் என்று ஒரு தியரி முன் வைக்கப்படுகிறது.
1. கூட்டம் நடக்கும் இடத்திற்கு மிக அருகே உள்ள கண்டெயினர் ஒன்றின் மீது இருந்துதான் தாக்கல் நடத்தப்பட்டு உள்ளது. துப்பாக்கியால் சுட்டவர் அங்கே எப்படி போனார்.
2. அந்த நபரை துப்பாக்கியோடு பார்த்ததும் போலீசிடம் மக்கள் சிலர் புகார் அளித்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன்?
3. சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்பு படையில் இருக்கும் ஸ்னைப்பர் ஏற்கனவே துப்பாக்கியால் சுட்ட நபரை நோக்கித்தான் குறி வைத்து இருந்தனர். ஆனால் அவர்கள் முன்கூட்டியே அந்த நபரை சுடாதது ஏன்?
4. டிரம்ப்பை நோக்கி சுடும் வரை காத்திருந்தது ஏன்?
5. பொதுவாக இது போன்ற கூட்டத்தில் அருகே உள்ள மாடிகள், உயர்ந்த இடங்களில் சோதனை செய்யப்பட்டு துப்பாக்கியால் சுடும் நபர்கள் இருக்கிறார்களா என்று பார்க்கப்படும். அதை சீக்ரெட் சர்வீஸ் செய்யாதது ஏன்?
6. இப்போது உள்ள சிஐஏ, எப்பிஐ இயக்குனர்களை டிரம்ப் கடுமையாக எதிர்க்கும் நிலையில்.. சீக்ரெட் சர்வீஸ் இந்த பாதுகாப்பு விவகாரத்தில் சொதப்பியது ஏன்?
7. இதற்கு பின் சிஐஏதான் இருக்கிறதா? டிரம்ப் அதிபர் ஆவதை சிஐஏ விரும்பவில்லையா? என்ற கேள்விகள், விவாதங்கள் எழுந்துள்ளன.
8. சிலர் இது டிரம்ப் செய்த செட்டப்.. தன் மீது பரிதாபம் ஏற்பட வேண்டும் என்று டிரம்ப் செய்த செட்டப் என்றும் ஒரு வாதம் வைக்கப்படுகிறது.
இப்படி அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் சுடப்பட்ட சம்பவத்திற்கு பின் சிஐஏ இருக்கலாம் என்று ஒரு தியரி முன் வைக்கப்படுகிறது. இந்த தியரி எல்லாம் நிரூபிக்கப்படாமலே கூட போகலாம். ஆனால் அமெரிக்காவை இந்த துப்பாக்கி சூடு பூதம் மிரட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications