"மோசமானது".. டெல்டா வகை குறித்து பயமுறுத்தும் அமெரிக்கா.. பிடனின் டாப் ஆலோசகர் சொல்வதை பாருங்க
நியூயார்க்: டெல்டா வகை கொரோனா வைரஸ் மிகவும் மோசமானது என்று அமெரிக்க அதிபர் பிடனின் மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஆண்டனி பவுச்சி தெரிவித்துள்ளார். ஆங்கிலத்தில் இதை "nasty variant" என்று கூறி பவுச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
உலகம் முழுக்க ஆல்பா வகை கொரோனாவிற்கு அடுத்தபடியாக டெல்டா வகை கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே கொரோனா தாக்கியவர்களை கூட டெல்டா வகை கொரோனா தாக்க தொடங்கி உள்ளது. உலகம் முழுக்க 80+ நாடுகளில் டெல்டா வகை கொரோனா பரவி உள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரிட்டிஷ், ஆஸ்திரேலியா, பல்வேறு ஆசிய நாடுகளில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க டெல்டா வகை கொரோனா மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.உலக சுகாதார மையமும் இந்த வைரஸ் ஆபத்தானது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

எச்சரிக்கை
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் பிடனின் மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஆண்டனி பவுச்சி ஆலோசகர் டெல்டா வகை கொரோனா குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், டெல்டா வகை கொரோனா மிக மோசமானது. இது அதிக திறன் கொண்டது. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு நினைத்ததை விட இது அதிக வேகமாக பரவுகிறது.

வேகம்
அமெரிக்காவிலும் கேஸ்கள் உயர இது ஒரு காரணமாக இருக்கிறது. அமெரிக்காவில் நாம் பயன்படுத்தும் வேக்சின்கள் டெல்டா வகைக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. எல்லோருக்கும் வேக்சின் போடுவதே ஒரே தேர்வு. மிக மோசமான வகை கொரோனாவான டெல்டா உலகம் முழுக்க கேஸ்கள் உயர காரணமாக அமைந்துள்ளது.

வலிமை
நம்மிடம் வலிமையான வேக்சின் இருப்பதே இப்போதைக்கு நல்ல செய்தி. குறைந்த வேக்சின் போட்ட நாடுகளில் இந்த டெல்டா வகை கொரோனா அதிகம் பரவுகிறது. உலக நாடுகள் வேக்சின் போடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். அது மட்டுமே டெல்டா வகை கொரோனாவின் பரவலை தடுக்கும்.

டெல்டா
டெல்டா வகை கொரோனா காரணமாக பல நாடுகளில் மருத்துவமனையில் மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் வேக்சின் போட்டவர்கள் இப்படி மருத்துவமனைக்கு செல்வது கிடையாது. டெல்டா வகை அச்ச மூட்ட கூடியதாக உள்ளது. மக்கள் இதில் இருந்து வேக்சின் மூலம் தங்களை பாதுகாக்க வேண்டும். இது மட்டுமே புதிய வகை கொரோனா பரவுவதை தடுக்கும், என்று பவுச்சி தெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications