நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"எண்ட் கேம்".. எல்லா ஆதாரமும் இருக்கிறது.. கவனமாக இருங்கள்.. ஓமிக்ரான் பற்றி எச்சரிக்கும் ஹு!

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஓமிக்ரான் மிக வேகமாக பரவுகிறது.. டெல்டாவை விட ஓமிக்ரான் வேகமாக பரவுகிறது என்பதற்கு ஆதாரம் உள்ளது என்று உலக சுகாதார மைய இயக்குனர் டெட்ராஸ் ஆதானம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    பிரிட்டனை அச்சுறுத்தும் கொரோனா: ஒரே நாளில் 82,886 பேருக்கு தொற்று!

    ஓமிக்ரான் வகை கொரோனா உலகம் முழுக்க வேகமாக பரவ தொடங்கி உள்ளது. பல நாடுகளில் ஓமிக்ரான் காரணமாக கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் தற்போது ஆதிக்கம் செலுத்தும் கொரோனா வகையாக ஓமிக்ரான் உருவெடுத்துள்ளது.

    இந்த நிலையில் ஓமிக்ரான் வகை கொரோனா குறித்து உலக சுகாதார மைய இயக்குனர் டெட்ராஸ் ஆதானம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஒரே நாளில் டபுள்.. அமெரிக்காவில் </a> <a href=ஓமிக்ரான் பரவல்.. | உலகம் முழுக்க வேகம் எடுக்கும் கொரோனா.. மீண்டும் கேஸ்கள் அதிகரிப்பு.. அச்சம்! " title="ஒரே நாளில் டபுள்.. அமெரிக்காவில் ஓமிக்ரான் பரவல்.. | உலகம் முழுக்க வேகம் எடுக்கும் கொரோனா.. மீண்டும் கேஸ்கள் அதிகரிப்பு.. அச்சம்! " />ஒரே நாளில் டபுள்.. அமெரிக்காவில் ஓமிக்ரான் பரவல்.. | உலகம் முழுக்க வேகம் எடுக்கும் கொரோனா.. மீண்டும் கேஸ்கள் அதிகரிப்பு.. அச்சம்!

    பேட்டி

    பேட்டி

    அவர் அளித்துள்ள பேட்டியில், வேக்சின் போட்டவர்கள், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பாதிக்கப்படலாம். இவர்கள் மீண்டும் ஓமிக்ரான் பரவலால் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஓமிக்ரான் மிக வேகமாக பரவுகிறது.. டெல்டாவை விட ஓமிக்ரான் வேகமாக பரவுகிறது என்பதற்கு ஆதாரம் உள்ளது.

    கவனம் கொரோனா

    கவனம் கொரோனா

    மக்கள் இதனால் கவனமாக இருக்க வேண்டும். உலகம் முழுக்க மக்கள் அதிக அளவில் வெளியே செல்கிறார்கள். மக்கள் பெரிய கூட்டமாக வெளியே இருக்கிறார்கள். பல நாடுகளில் விடுமுறைகள் விடப்பட்டுள்ளன. இதன் காரணமாக உலக அளவில் கேஸ்கள் உயர்ந்து வருகிறது.

    பெருந்தொற்று

    பெருந்தொற்று

    இந்த பெருந்தொற்று எப்போது முடியும் என்று பலர் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் வாய்ப்பு கிடைக்கும் போது இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கிறார்கள். நாம் நம்மை பாதுகாக்க பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் கொரோனாவில் இருந்து விடுபட முடியும்.

    ரத்து செய்யுங்கள்

    ரத்து செய்யுங்கள்

    ஏதாவது விழா, நிகழ்ச்சிக்கு செல்வதாக இருந்தால் அதை உடனே ரத்து செய்யுங்கள். நிகழ்ச்சி, விழாக்களை விட உங்கள் வாழ்க்கை உங்களுக்கு மிக முக்கியம். கடந்த மாதம்தான் ஆப்ரிக்காவில் மிக குறைவான கேஸ்கள் பதிவானது. இப்போது அது அப்படியே தலைகீழாக மாறி, உலகிலேயே மிக அதிக அளவிலான கேஸ்கள் பரவ தொடங்கி உள்ளது.

     உலக சுகாதார மையம்

    உலக சுகாதார மையம்

    2022தான் நமக்கு எண்ட்கேம். இந்த வருடத்தில் நாம் எப்படியாவது கொரோனா பரவலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஆனால் உலக சுகாதார மையம் மட்டும் அதை தனியாக செய்துவிட முடியாது. உலக நாடுகள் எல்லாம் சேர்ந்துதான் அதை செய்ய வேண்டும்.

    ஒத்துழைப்பு

    ஒத்துழைப்பு

    மக்கள் எல்லோரும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். டெல்டாவை விட ஓமிக்ரான் வேகமாக பரவுகிறது. இதனால் முடிந்த அளவு பரவலை தடுக்க வேண்டும். அப்போதுதான் ஓமிக்ரான் மூலம் கேஸ்கள் உயர்வதை தடுக்க முடியும் என்று உலக சுகாதார மைய இயக்குனர் டெட்ராஸ் ஆதானம் தெரிவித்துள்ளார்.

    English summary
    Coronavirus; Omicron spreading faster than Delta, there are evidence for that says WHO director Tedros.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X