அமெரிக்காவில் கொரோனா வைரஸின் 2-வது அலை... ப்ளூ காய்ச்சலும் கை கோர்த்து ருத்ர தாண்டவம் ஆடுமாம்!
நியூயார்க்: கொரோனா வைரஸ் தாக்குதலின் 2-வது அலையானது அமெரிக்காவில் மிகப் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா சுகாதாரத் துறை மூத்த அதிகாரி ராபர்ட் ரெட்பீல்ட் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு இயக்குநரான ராபர்ட் ரெட்பீல்ட் கூறியதாவது:
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலின் 2-வது அலை என்பது மிக மோசமானதாக இருக்கும். அமெரிக்கர்கள் வரும் மாதங்களில் இதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

குளிர்காலத்தில் அமெரிக்காவை கொரோனா வைரஸின் 2-வது அலை தாக்கும். அப்போது ப்ளூ காய்ச்சலும் தாக்க தொடங்கி இருக்கும்.
இந்த இரண்டையும் ஒருசேர நாம் எதிர்கொள்ளவும் வேண்டும். இது மிக மிக மிக கொடுமையான ஒன்று. கடினமான ஒன்று. இதுதான் யதார்த்தம். உண்மையும் கூட.
இதனை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். நீங்கள் ப்ளூ காய்ச்சலால் உங்களது குடும்பத்தில் வயதான ஒருவரை மருத்துவமனையில் அனுமதித்தால் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு ராபர்ட் ரெட்பீல்ட் கூறினார்.
அமெரிக்காவில்தான் கொரோனா மரணங்கள் உச்சத்தை தொட்டுள்ளன. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அமெரிக்காவில் மட்டும் 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications