நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா உதவிக்கு கைமாறு?.. ரூ.1000 கோடி மதிப்பு.. இந்தியாவிற்கு மாஸ் ஏவுகணைகளை அனுப்பும் அமெரிக்கா!

இந்தியாவிற்கு ரூபாய் ஆயிரம் கோடி மதிப்புள்ள ஏவுகணைகளை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: இந்தியாவிற்கு ரூபாய் ஆயிரம் கோடி மதிப்புள்ள ஏவுகணைகளை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. மிக முக்கியமான ஏவுகணைகள் சிலவற்றை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக உலக நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மிக மோசமாக சண்டை போட்டுகொண்டு இருந்த அமெரிக்காவும், ரஷ்யாவும் கொரோனா காரணமாக நட்பாகி உள்ளது. கொரோனாவை எதிர்க்க இரண்டு நாடுகளும் ஒன்றாக சேர்ந்து போராடலாம் என்று முடிவு செய்துள்ளது.

ஆனால் இன்னொரு பக்கம் இந்தியா மற்றும் அமெரிக்காவின் உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. சண்டை என்று சொல்வதை விட இந்தியா அமெரிக்கா உறவில் கொரோனா மருந்து காரணமாக முக்கியமான மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது.

நான் தவறு செய்யவில்லை... கொரோனா பரவ ஒபாமாதான் காரணம்.. பழியை தூக்கி போட்ட டிரம்ப்.. பகீர்! நான் தவறு செய்யவில்லை... கொரோனா பரவ ஒபாமாதான் காரணம்.. பழியை தூக்கி போட்ட டிரம்ப்.. பகீர்!

என்ன சண்டை

என்ன சண்டை

இந்தியா அமெரிக்கா இடையே ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துக்காக சண்டை நடந்தது. மலேரியா மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை உலகம் முழுக்க பல நாடுகள் கொரோனாவிற்கு எதிராக பயன்படுத்த முயன்று வருகிறது. இந்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து இந்தியாவில்தான் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மருந்தை அமெரிக்கா கேட்டு வந்தது. ஆனால் இந்தியா இந்த மருந்துக்கு ஏற்றுமதி தடை விதித்து இருந்தது.

ஏற்றுமதி செய்தது

ஏற்றுமதி செய்தது

ஆனால் இந்த மருந்தை ஏற்றுமதி செய்யவில்லை என்றால் இந்தியாவிற்கு பதிலடி கொடுப்போம் என்று டிரம்ப் குறிப்பிட்டு இருந்தார். மருந்தை ஏற்றுமதி செய்யவில்லை நடவடிக்கை எடுப்போம் என்பது போல டிரம்ப் மிரட்டி இருந்தார். இதனால் இந்தியா உடனே அமெரிக்காவிற்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்தது. மற்ற உலக நாடுகளுக்கும் இந்தியா இதேபோல் மருந்தை ஏற்றுமதி செய்துள்ளது. இதனால் இந்தியா - அமெரிக்கா உறவில் கொஞ்சம் விரிசல் ஏற்பட்டது.

சமாதானம்

சமாதானம்

இந்த நிலையில்தான் இந்தியாவிற்கு ரூபாய் ஆயிரம் கோடி மதிப்புள்ள ஏவுகணைகளை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. மிக முக்கியமான ஏவுகணைகள் சிலவற்றை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஆம் அதிபர் டிரம்ப் இதற்கான கடிதத்தை அந்நாட்டு காங்கிரஸ் அவைக்கு அனுப்பி உள்ளார். அவர்கள் ஒப்புதல் அளித்தவுடன் இந்த ஏவுகணைகள் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும். ஹார்பூன் பிளாக் 11 (Harpoon Block II ) மற்றும் டார்ப்பீடோஸ் (torpedoes) ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய உள்ளது.

இந்தியாவிற்கு கொடுக்கும்

இந்தியாவிற்கு கொடுக்கும்

அதன்படி 10 ''AGM-84L வகை ஹார்பூன் பிளாக் 11'' ஏவுகணை ஏற்றுமதி செய்யப்படும். இது வானத்தில் விமானத்தில் இருந்து ஏவப்பட்டு தாக்கி அளிக்கும் ஏவுகணை ஆகும். அதேபோல் 16 ''MK 54 வகை டார்ப்பீடோஸ் (Lightweight Torpedoes) ஏவுகணைகள்'' வழங்கப்படும். இது கடலுக்குள் இருந்து வெளியே வந்து தாக்கும், கடலுக்கு உள்ளே சென்று தாக்கும் அதிக சக்தி கொண்ட மாஸ் ஏவுகணைகள் ஆகும்.

உதவி

உதவி

இதைத்தான் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்திய விமானப்படையில், கடற்படையில் இந்த ஏவுகணைகள் சேர்க்கப்படும். இந்தியாவிடம் டார்ப்பீடோஸ் வகை ஏவுகணைகள் பெரிய அளவில் இல்லை. இந்தியா இதை பயன்படுத்தினால் அவர்களுக்கு பெரிய பாதுகாப்பாக இருக்கும். முக்கியமாக உள்நாட்டு பாதுகாப்பில் அதிக உதவும். இந்திய கடற்பகுதியில் ரோந்து பணிகளில் இதை செலுத்தலாம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

உதவிக்கு கைமாறு

உதவிக்கு கைமாறு

அமெரிக்கா தற்போது பெரிய அளவில் மருந்து தேவைகளை கொண்டு இருக்கிறது. மருந்துகள் தேவை தேவை என்று உலக நாடுகளிடம் உதவி கேட்கும் நிலைக்கு அமெரிக்கா சென்றுள்ளது. இந்த நிலையில்தான் அமெரிக்காவிற்கு மிக சரியான நேரத்தில் இந்தியா ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை கொடுத்தது. இந்தியாவின் இந்த உதவிக்கு ஒருவேளை கைமாறாக அமெரிக்கா இந்த ஏவுகணைகளை வழங்குகிறது என்று கூறுகிறார்கள்.

English summary
Coronavirus: Trump ordered to send Missile and Torpedoes worth 1 thousand crores to India after the Malaria drug deal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X