நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அட சூப்பர்.. ஓமிக்ரான் முதலில் கண்டறியப்பட்டதே தென்னாப்பிரிக்கா.. அங்கிருந்து வந்த நல்ல செய்தி!

Google Oneindia Tamil News

நியூயார்க்: தென்னாபிரிக்காவில்தான் முதன் முதலாக ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்டது. B.1.1529 வகை கொரோனாவான ஓமிக்ரான் அங்கு போட்ஸ்வானாவில் கண்டறியப்பட்டது. நவம்பர் மாதத்தில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் அங்கு வேகமாக பரவியது.

வெகு சில நாட்களில் அங்கு ஓமிக்ரான் கேஸ்கள் 1 லட்சத்தை தாண்டியது. இந்த நிலையில் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. இந்த நிலையில் தற்போது அங்கு ஆக்டிவ் கேஸ்கள் 193,104 என்ற அளவில் உள்ளது.

கடந்த வாரம் 227,753 என்ற அளவில் ஆக்டிவ் கேஸ்கள் இருந்தது. இந்த நிலையில் ஆக்டிவ் குறைந்துள்ள நிலையில்தான் தற்போது தென்னாப்பிரிக்காவில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

எட்டி எட்டி கையை அசைத்த விஜயகாந்த்.. ரூபாய் நோட்டுடன் நின்ற பிரேமலதா.. துள்ளி குதித்த தொண்டர்கள்எட்டி எட்டி கையை அசைத்த விஜயகாந்த்.. ரூபாய் நோட்டுடன் நின்ற பிரேமலதா.. துள்ளி குதித்த தொண்டர்கள்

இரவு லாக்டவுன் நீக்கம்

இரவு லாக்டவுன் நீக்கம்

ஆம் ஓமிக்ரான் கேஸ்கள் எங்கு கண்டறியப்பட்டதோ அதே தென்னாப்பிரிக்காவில் தற்போது லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடத்தில் இருந்ததில் மிக குறைவான லாக்டவுன் கட்டுப்பாடுகள் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது லெவல் 1 எனப்படும் மிக குறைந்த அளவிலான லாக்டவுனாக அங்கு தளர்வு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

தளர்வு

தளர்வு

அதன்படி அங்கு இரவு நேர லாக்டவுன் நீக்கப்பட்டுள்ளது. இனி அங்கு இரவு முழுக்க மக்கள் வெளியே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் கடைகளை திறக்க எந்த விதமான கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. அதேபோல் உணவகங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த 50 சதவிகித கூட்டத்திற்கான கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டுள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆக்டிவ் நபர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அதேபோல் பலி எண்ணிக்கையும் அதிகமாக இல்லை. இதுவரை மைல்ட் கேஸ்கள் மட்டுமே பதிவாகி வருகிறது. எங்கள் நாட்டில் ஓமிக்ரான் உச்சம் தாண்டிவிட்டது.

கேஸ்கள் பரவினாலும் முடிவு

கேஸ்கள் பரவினாலும் முடிவு

ஓமிக்ரான் கேஸ்கள் உச்சத்தை கடந்துவிட்டதாகவே கருதுகிறோம். கிராப் வேகமாக சரிந்து வருகிறது. இதனால்தான் லாக்டவுன் கட்டுப்பாட்டில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் வெளியே செல்ல தளர்வுகள் வந்துள்ளது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பள்ளிகள் திறப்பு

பள்ளிகள் திறப்பு

அதேபோல் அங்கு இன்னும் 2 வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2 வாரத்திற்குள் சிறார்களுக்கு வேக்சின் போடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்ற கல்வி நிறுவனங்களும் இரண்டு வாரங்களில் திறக்கப்படும் என்று தென்னாப்பிரிக்காவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நல்ல செய்தி

நல்ல செய்தி

ஓமிக்ரான் கேஸ்கள் முதலில் பரவியதே அதே தென்னாப்பிரிக்காவில் இப்படி கேஸ்கள் வேகமாக குறைந்து, லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டு இருப்பது பெரிய நல்ல செய்தியாக வந்துள்ளது. உலக நாடுகளுக்கு இது ஒரு நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது. மற்ற நாடுகளிலும் விரைவில் இது எதிரொலிக்கலாம். இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி பவுச்சி அளித்த பேட்டியில், தென்னாப்பிரிக்காவில் வேகமாக கேஸ்கள் குறைந்துள்ளது.

பவுச்சி என்ன சொல்கிறார்

பவுச்சி என்ன சொல்கிறார்

திடீரென கிராப் மேலே சென்றுவிட்டு சட்டென கேஸ்கள் சரிந்துள்ளது. இதேபோல் மற்ற நாடுகளிலும் நடந்தால் நன்றாக இருக்கும். அமெரிக்காவின் அளவோடு ஒப்பிடும் போது இதே கணக்குப்படி பார்த்தால் ஜனவரி இறுதிக்குள் ஓமிக்ரான் கேஸ்கள் உச்சம் கடந்து மொத்தமாக கேஸ்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Coronavirus: World see the new hope as South Africa passes peak and lifts curfew suddenly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X