குண்டை தூக்கி போட்ட ஹூ.. டிச.1-ம் தேதிக்குள் மேலும் இரண்டரை லட்சம் மரணங்கள்.. கதிகலங்கும் நாடுகள்
கொரோனா குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது
நியூயார்க்: ஐரோப்பிய கண்டத்தில் வரும் டிசம்பர் 1-ம் தேதிக்குள் மேலும் 2 லட்சத்து 36 ஆயிரம் பேர் கொரோனா தாக்கி உயிரிழக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலில் இருந்து பல ஐரோப்பிய நாடுகள் மீண்டுவிட்டன.. ஆனாலும், தற்போது இரண்டாவது அலை பரவல் காரணமாக, மறுபடியும் பெருந்தொற்று தீவிரமாகி கொண்டிருக்கிறது..
அதனால் பல நாடுகளில் கட்டுப்பாடுகள் படிப்படியாக கடுமையாக்கப்பட்டு வருகின்றன. மற்றொரு புறம் தடுப்பூசிகளும் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன..

பாதிப்பு
இப்படிப்பட்ட சூழலில்தான், வரும் டிசம்பர் 1-ம்தேதிக்குள் மேலும் 2 லட்சத்து 36 ஆயிரம் கொரோனா மரணங்கள் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.. இப்போது பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளில் டெல்டா வைரஸ் தாக்கம் அதிகமாக பரவி வருவதால், இப்படி ஒரு தகவலும் வெளியாகி உள்ளது.

மரண விகிதம்
குறிப்பாக, பால்கன்ஸ், கக்காசஸ், மத்திய ஆசியா ஆகிய பகுதிகளில் டெல்டா ரகத்தின் தாக்கம் அதிகரித்து வந்தது.. இதன்காரணமாக மரண எண்ணிக்கையும் தினம் தினம் அதிகரித்து கொண்டே வந்தது.. கடந்த வாரத்தை மட்டும் பார்த்தால், மேற்கண்ட பகுதிகளில் இந்த மரண எண்ணிக்கையானது 11 சதவீதம் அதிகரித்துள்ளது.. இப்படியே போனால், வரும் டிசம்பர் துவக்கத்தில் 2 லட்சத்து 36 ஆயிரம் பேர் மரணம் அடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழப்புகள்
ஐரோப்பிய கண்டத்தில் மட்டும் இதுவரை 13 லட்சம் பேர் இந்த கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.. இந்த கண்டத்தில் உள்ள 53 உறுப்பினர் நாடுகளில் 33 நாடுகளில், கடந்த 2 வாரங்களில் மரண எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது... குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில்தான் இந்த மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது... இதற்கும் காரணம் தடுப்பூசி பற்றாக்குறைதான்.. இந்த நாடுகளில் தடுப்புமருந்து பற்றாக்குறையாக இருந்துள்ளது.. அதனாலேயே உயிரிழப்பும் அதிகமாகி உள்ளது....

சுற்றுலா பயணிகள்
அதுமட்டுமல்ல, இப்போது கோடைகாலம் துவங்கி விட்டதால், சுற்றுலா பயணிகள் வருடந்தோறும் வந்துபோவது இயல்பு.. அதை மனதில் வைத்தே, சுற்றுலாவுக்காக ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஐரோப்பிய கண்டத்தில் நிறைய தளர்த்தப்பட்டும் உள்ளது.. உயிரிழப்புகள் ஏற்பட இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்.. பொருளாதாரத்தில் பின்தங்கிய ஐரோப்பிய நாடுகளில் சராசரியாக 6 சதவீத மக்களுக்கு 2 தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டு விட்டன..

பள்ளிகள்
எனினும் இந்த தொற்றுக்கு அதிகமாக பாதிக்கப்படுவது ஸ்கூல் பிள்ளைகளும், ஆசிரியர்களும்தான்.. அதனால்தான், நிறைய நாடுகளில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்டாலும்கூட, மூடப்பட்ட சிறிய ரூம்களில் வகுப்புகள் நடத்தத்கூடாது என்பது உட்பட நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications