டிரம்ப் அடிச்சு தூக்குறாரே! எஃப்பிஐ தலைவராகும் "இந்திய" மாஸ்டர்மைண்ட்.. ஏன் முக்கியம் தெரியுமா?
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஆட்சிக்கு கீழ் அமைய உள்ள அரசாங்கம் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில்தான் அமைச்சரவை தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றால்.. வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்பு கொடுக்க மாட்டார். முக்கியமாக அரசு பதவிகளில் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு வாய்ப்பு தரமாட்டார் என்று கருதப்பட்டது. ஆனால் டிரம்ப் அந்நாட்டின் உயரிய பதவிகளில் ஒன்றான எஃப்பிஐ பதவிக்கே.. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை கொண்டு வர உள்ளாராம்.

கடந்த முறை அவரின் ஆட்சியில் அவருக்கும் எஃப்பிஐ தலைவருக்கும் இடையே கருத்து வேறுபாடு மோதல்கள் நிலவி வந்தன. அந்த மோதல்களை சரி செய்யும் விதமாக இந்த முறை தனக்கு நெருக்கமான.. இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ்யப் காஸ் பட்டேலை அந்த பதவிக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளாராம்.
அமெரிக்காவின் அமைச்சர்கள் யார் யார் என்று விரைவில் டிரம்ப் தேர்வு செய்வார். அந்த வகையில் எஃப்பிஐ இயக்குனர் பதவிக்கு குஜராத் பின்புலத்தை கொண்ட காஷ்யப் காஸ் பட்டேல் நியமிக்கப்படவுள்ளாராம். இவர் டிரம்பிற்கு மிக நெருக்கம். கடந்த டிரம்ப் ஆட்சியில்.. அவர் வெற்றிபெற ரஷ்யா காரணம் என்று புகார் வைக்கப்பட்டது. இந்த விசாரணையில் டிரம்பிற்கு பெரிய உதவியாக இருந்தது காஷ்யப் காஸ் பட்டேல்தான்.
அதேபோல் டிரம்பின் முந்தைய ஆட்சியில் பல முக்கியமான உளவு தகவல்கள்.. உளவு ரீதியான முடிவுகளை எடுக்க காஷ்யப் காஸ் பட்டேல் டிரம்பிற்கு காரணமாக இருந்தார். காஷ்யப் காஸ் பட்டேல் எஃப்பிஐ தலைவராகும் முடிவை டிரம்ப் முன்பே எடுத்துவிட்டார். ஆனால் இதற்கு செனட் சபை அனுமதி அளிக்க வேண்டும். இரண்டு அவையிலும் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். செனட் சபையை கைப்பற்றிவிட்டார்.
இதன் காரணமாக காஷ்யப் காஸ் பட்டேல் எஃப்பிஐ இயக்குனர் ஆவதில் சிக்கலே இருக்காது என்கிறார்கள். காஷ்யப் காஸ் பட்டேல் எஃப்பிஐ தலைவராக முடியாத பட்சத்தில் அவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
குஜராத் பின்புலத்தை சேர்ந்த காஷ்யப் காஸ் பட்டேல் நியூயார்க்கில் பிறந்து வளர்ந்தவர். அமெரிக்காவில் பல அரசு ரீதியான பணிகளை செய்துள்ளார். முக்கியமாக வழக்கறிஞரான இவர்.. பல அரசு தொடர்பான வழக்குகளில் வாதாடி உள்ளார்.
வெற்றி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டு அரசியலில் மிக முக்கியமான வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் அதிபராகி உள்ளார். டொனால்ட் டிரம்ப் மெஜாரிட்டிக்கு தேவையான 270க்கும் அதிகமான எலக்ட்ரல் வாக்குகளை பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளார். தற்போது வரை 295 எலக்ட்ரல் வாக்குகளை வென்றுள்ளார். இதன் மூலம் டிரம்ப் வெற்றி உறுதியாகி உள்ளது. கமலா ஹாரிஸ் 224 வாக்குகளை வென்றுள்ளார்.
மொத்தமாக 538 எலக்ட்ரல் வாக்குகளில் 270 யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார். அவரின் வருகை உலக அரசியலில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரிசோனா , நவேடா ஆகிய இரண்டு மாகாணங்களில் முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் டிரம்ப் 300 எலக்ட்ரல் வாக்குகள் தாண்டும் வாய்ப்புகள் உள்ளன. தற்போது இந்த இரண்டு மாகாணங்களிலும் டிரம்ப்தான் முன்னிலை வகிக்கிறார்.
அமெரிக்கா ஆட்சி முறை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்க உள்ள நிலையில்.. தனது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களை அறிவித்து வருகிறார்.அமெரிக்காவில் இந்தியா, யு.கே போன்ற ஆட்சி முறை கிடையாது. இதனால் அமைச்சர் பதவி என்ற பெயரில் பொறுப்புகள் வழங்கப்படாது. மாறாக அதே மத்திய அமைச்சரின் அதே பொறுப்புகளோடு அதிகாரத்தோடு செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் அதிபர் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு.. செனட் தரும் அடையாள ஒப்புதலுடன் செயலாளர்கள் ஆவார்கள்.
வெளியேறவுத்துறை அமைச்சர்: அமெரிக்காவில் மிக முக்கிய அமைச்சரவை பொறுப்பான வெளியுறவுத்துறை செயலாளர் பதவிக்கு டிரம்ப் தனக்கு நெருக்கமான செனட்டர் மார்கோ ரூபியோவை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமியை டிரம்ப் கொண்டு வர இருப்பதாக செய்திகள் வந்தன.
ஆனால் விவேக் ராமசாமியை புறக்கணித்து, செனட்டர் மார்கோ ரூபியோவை தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்சிக்கு.. வெளியுறவுத்துறை செயலாளராக தேர்வு செய்ய டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டிரம்பின் 2024 பிரச்சாரத்தின் போது அதில் முக்கிய பங்கு வகித்தவர் ரூபியோ. இவரின் தேர்வு பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ்: டிரம்ப் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றுமாறு மைக் வால்ட்ஸை அழைத்துள்ளார் என்கிறார்கள். இவர் முன்னாள் ராணுவவீரர் . கடுமையான சீன எதிர்ப்பாளர். சீனாவை கடுமையாக விமர்சனம் செய்ய கூடியவர் . ரஷ்யாவை உக்ரைன் இடையிலான போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் எதிர்பார்க்கும் நிலையில் இவரின் வருகை கவனம் பெற்றுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications