தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்ற குற்றச்சாட்டு.. டிரம்புக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணை
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இன்று நடைபெறுகிறது.
டொனால்ட் டிரம்ப் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக இருந்துள்ளார். இந்நிலையில் 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவர் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால் வெற்றிபெறவில்லை. இதனையடுத்து அவர் பதவி விலக கூடாது என அவரது ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கவும், புதிய அதிபர் பதவியேற்பு விழா நடப்பதை தடுக்கவும் ஆங்காங்கு டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டங்கள் வன்முறையாக வெடித்ததில் 5 பேர் வரை உயிரிழந்தனர். இது தொடர்பாக பல்வேறு மாகாணங்களில் டிரம்ப்க்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இப்படியாக ஜார்ஜியா மாகாணத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கு விசாரணை மாகாண நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போதே டிரம்புக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருந்ததால் அவர் கைது செய்யப்படலாம் என்று சொல்லப்பட்டது.
இதனையடுத்து கடந்த 24ம் தேதி வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து டிரம்ப் அட்லாண்டா சிறையில் சரணடைந்தார். அமெரிக்க வரலாறு எத்தனையோ அதிபர்களை பார்த்திருக்கிறது. ஆனால் இதுவரை அவர்கள் யார் மீதும் குற்றவியல் வழக்குகள் பதிவானது கிடையாது. ஆனால் முதல் முறையாக டிரம்ப் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. டிரம்ப் சிறையில் ஆஜரான நிலையில் சிறைத்துறை அதிகாரிகள் அவரது அடையாளங்களை குறித்துக்கொண்டனர்.
டிரம்ப் அட்லாண்டா சிறையில் சுமார் 20 நிமிடங்கள் வரை இருந்திருக்கிறார். இந்த 20 நிமிடங்களும் அட்லாண்டா பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து ரூ.1.6 கோடியை ஜாமீன் தொகையாக கொடுத்து சிறையிலிருந்து ஜாமீன் பெற்றிருக்கிறார். டிரம்ப் சிறைச்சாலைக்கு செல்வது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னர் கடந்த ஜூன் மாதம் தனது பிறந்தநாள் அன்று கூட சிறைக்கு சென்றிருந்தார். வெள்ளை மாளிகையிலிருந்த முக்கிய ஆவணங்களை தனது வீட்டிற்கு கொண்டு வந்ததாக தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டின் காரணமாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக வழக்கின் மறு விசாரணை இன்று நடைபெறுகிறது.
-
நெதன்யாகு-க்கு வேற சாய்ஸே இல்லை.. நெருக்கும் டிரம்ப்! ஈரான் தாக்குதலால் மீண்டும் ஹை டென்ஷன் -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications