பணம் அழியும்.. மிடில் கிளாஸுக்கு சிக்கல்.. பலர் வேலை இழப்பார்கள்.. மீண்டும் மீண்டும் எச்சரித்த மஸ்க்
சென்னை: எலான் மஸ்க் வெளியிட்ட கணிப்பு ஒன்றுதான் உலக அளவில் தற்போது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. உலகில் உள்ள பணியாளர்கள் எல்லோருக்கும் முக்கியமாக மிடில் கிளாஸ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை அவர் வெளியிட்டு உள்ளார்.
செயற்கை நுண்ணறிவும், ரோபோக்களும் கட்டுக்கடங்காத வளர்ச்சி அடையும்போது, மனிதர்கள் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை கேட்க வியப்பாக இருக்கிறதா? ஆனால்.. எலான் மஸ்க் இது கண்டிப்பாக நடக்கும் என்று அடித்து சொல்கிறார். பணம் தனது மதிப்பை இழந்து, AI மற்றும் ரோபோக்களால் இயங்கும் புதிய காலம் உருவாகும் என்பதே அவரது கணிப்பு.

மஸ்க் விடுக்கும் எச்சரிக்கை
ஒருவேளை, 20 வருடங்களுக்குள்ளாக, வேலை செய்வது விருப்பமானதாக மாறும். இப்போது பலர் பார்ட் டைம் வேலை செய்கிறார்கள். இனி அது இருக்காது. இனி முழுநேர வேலையும் விருப்பமானதாக மாறி, ஒரு பொழுதுபோக்காகவே இருக்கும். இந்த மாற்றம் இன்னும் விரைவாக, 10 அல்லது 15 ஆண்டுகளில் கூட நிகழலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உங்கள் தோட்டத்தில் காய்கறிகளை விளைவிப்பது அல்லது கடையில் வாங்குவது போல, வேலையும் விருப்பமானதாக மாறும் என்று அவர் விளக்கி உள்ளார். AI மற்றும் ரோபோக்களின் வளர்ச்சி, உழைப்பின் தேவையை நீக்கி,"நீங்கள் எதை நினைக்கிறீர்களோ, அதை அடைய முடியும் என்ற எதிர்காலத்தை உருவாக்கும் என அவர் நம்புகிறார்.
மீண்டும் மீண்டும் சொல்லும் மஸ்க்
இதை ஒருமுறை அல்ல மீண்டும் மீண்டும் டிரம்ப் பல மேடைகளில் கூறி வருகிறார். AI மற்றும் ரோபோக்கள் அனைத்து வேலைகளையும் மாற்றியமைக்கும் என்றும், வேலை செய்வது, பொழுதுபோக்கிற்காக காய்கறி வளர்ப்பது போல ஒரு விருப்பமான செயலாக மாறும் என்றும் எச்சரித்து வருகிறார். .
பில்லியன் கணக்கான மனிதவடிவ ரோபோக்கள் உலகை நிரப்பும். அனைத்து ஓட்டுநர் பணிகளில் 90 சதவீதம் தானியங்கி மயமாக்கப்படும். பொருட்கள் மற்றும் சேவைகள் கிட்டத்தட்ட இலவசமாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
அதாவது உங்களுக்கு வேலை இருக்காது. உங்கள் வேலையை ரோபோ செய்துவிடும். முக்கியமாக கடினமான வேலைகளை ரோபோ செய்துவிடும். அந்த ரோபோக்களை கையாள்வது கூட உங்களுக்கு தேவையாக இருக்காது. ஏனென்றால் அந்த வேலையை கூட கணினி செய்துவிடும். இதை எல்லாம் தொடக்க காலங்களில் ப்ரோகிராம் செய்தவர்கள், வடிவமைத்தவர்களுக்கு வேண்டும் என்றால் தொடக்கத்தில் வேலைகள் இருக்கும். அதன்பின் அவர்கள் உருவாக்கிய ரோபோக்கள் மூலம் அவர்களுக்கே பணி போகும் வாய்ப்புகள் ஏற்படும்.
எலான் மஸ்க் வெளியிட்ட இந்த கணிப்பு உலக அளவில் தற்போது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. உலகில் பணம் என்பது மதிப்பை இழக்கும் என்றும் அவர் கூறி உள்ளார். ஆனால் இதனால் மக்கள் கஷ்டப்பட மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் தேவைகளை ரோபோக்கள் பூர்த்தி செய்யும். அவர்களுக்கு தேவையான பணிகளை ரோபோக்கள் பூர்த்தி செய்யும். மக்கள் வீட்டில் ஜாலியாக இருந்தால் போதும் மற்றதை ரோபோக்கள் பார்த்துக்கொள்ளும் என்று எலான் மஸ்க் எச்சரித்து உள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications