பிளான் பி இருக்கு! வால் ஸ்டிரீட்டை ஸ்தம்பிக்க வைத்த எலான் மஸ்க்.. நடுக்கத்தில் ட்விட்டர்! என்னாச்சு?
நியூயார்க்: ட்விட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்க டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் தன்னிடம் பிளான் பி ஒன்று இருப்பதாக மஸ்க் தெரிவித்துள்ளார். அவரிடம் இருக்கும் அந்த சீக்ரெட் பிளான் பி தான்.. தற்போது வால் ஸ்ட்ரீட்டை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. என்ன நடந்தது என்று பார்க்கலாம்!
Recommended Video
ட்விட்டர் நிறுவனம் மீது நீண்ட காலமாகவே புகார் மழைகளை பொழிந்து வந்தவர் எலான் மஸ்க். அதன் நிறுவனர் ஜாக் வெளியேறிய பின் இந்த மோதல் இன்னும் பெரிதானது.
ட்விட்டர் நிறுவனம் வெளிப்படைத்தன்மையுடன் இல்லை. அங்கு கருத்து சுதந்திரம் இல்லை. ட்விட்டர் சிலருக்கு மட்டுமே கருத்து சுதந்திரம் வழங்குகிறது என்பதே மஸ்க் வைக்கும் புகார்.

புகார்
அதாவது எல்லா தரப்பிற்கும் கருத்து சொல்லும் சுதந்திரத்தை ட்விட்டர் வழங்க வேண்டும் என்பதே ட்விட்டர் மீது மஸ்க் வைக்கும் காஸ்ட்லி புகார். உதாரணமாக அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்ப் கணக்கு முடக்கப்பட்டது, பலரின் கணக்குகள் பல்வேறு காரணங்களுக்காக முடக்கப்பட்டது, சில நாடுகளில் அரசின் பேச்சை கேட்டு ட்விட்டர் செயல்படுவது எதுவும் மஸ்க்கிற்கு பிடிக்கவில்லை. இதனால் ட்விட்டருக்கு பதில் தனியாக புதிய சமூக வலைத்தளம் ஒன்று தொடங்கலாம் என்று கூட மஸ்க் நினைத்தார்.

ஷேர் வாங்கினார்
இந்த நிலையில்தான் ஏன் புதிதாக வீடு கட்டி குடியேறிக்கொண்டு.. முன்பே கட்டி இருக்கும் வீட்டை வாங்கிவிடலாம் என்ற முடிவிற்கு வந்துவிட்டார் மஸ்க். அதாவது ட்விட்டர் நிறுவனத்தையே கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம் என்ற முடிவை மஸ்க் எடுத்துவிட்டார். அதன் பொருட்டே ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவிகித பங்குகளை மஸ்க் வாங்கினார். அதோடு ட்விட்டர் நிறுவனத்தின் போர்ட் உறுப்பினர்களில் ஒருவராக இவர் இணைவார் என்றும் கூறப்பட்டது.

செட்டாகவில்லை
ஆனால் அப்போது ட்விட்டர் நிறுவனத்தில் மிக அதிக அளவில் ஷேர் வைத்து இருந்தும் கூட அவரால் உள்ளே முக்கிய கருத்துக்களை வைக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது இவர் சொன்ன மாற்றங்களை மற்ற போர்ட் உறுப்பினர்கள் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை முன்னிட்டே ட்விட்டர் நிறுவனத்தில் நாம் போர்டில் இருந்தால் எதையும் சாதிக்க முடியாது என்பதை மஸ்க் உணர்ந்து கொண்டார். இதனால் போர்டில் இணையும் வாய்ப்பையும் நிராகரித்துவிட்டார்.

மொத்தமாக வாங்க பிளான்
இந்த நிலையில்தான் போர்ட் சொல்லி நான் என்ன கேட்பது.. மொத்தமாக கம்பெனியை நானே வாங்குகிறேன் என்று முடிவு எடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவிற்கு வந்து இருக்கிறார் மஸ்க். அதன்படி ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு ஷேரை இந்திய மதிப்பில் ரூபாய் 4120 ரூபாய்க்கு வாங்க முடிவு செய்துள்ளார். மொத்தமாக 100 ஷேரையும் வாங்கும் முடிவை எடுத்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த மதிப்பில் கிட்டத்தட்ட 37 பில்லியன். இதை மொத்தமாக 43 பில்லியனுக்கு வாங்கும் ஆபரை மஸ்க் கொடுத்துள்ளார்.

என்ன சொன்னார்?
அதாவது மொத்தமாக கம்பெனியை நான் வாங்குகிறேன். கம்பெனியை நான் பிரைவேட் ஆக்க போகிறேன் என்று மஸ்க் கூறியுள்ளார். தற்போது ட்விட்டர் நிறுவனம் பப்ளிக்கில் உள்ளது. எலான் மஸ்க் இதை பிரைவேட் ஆக்கும் பட்சத்தில் பங்குதாரர்கள் பற்றி கவலைப்படாமல் முடிவுகளை எடுக்க முடியும். அதோடு நிறுவனத்தில் அதிரடி மாற்றங்களை செய்ய முடியும். இதனால்தான் ட்விட்டர் நிறுவனத்திற்கு நிறைய திறமைகள் இருக்கிறது.. அதை நான் அன்லாக் செய்வேன் என்றும் மஸ்க் தெரிவித்துள்ளார்.

சான்ஸ் கம்மி
ஆனால் இது அவ்வளவு ஈஸி கிடையாது. ஏனென்றால் ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள வான்கார்ட் போன்ற மற்ற பங்குதாரர்கள் அவ்வளவு எளிதாக இதை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். ஏதாவது செய்து இதை தடுக்க நினைப்பார்கள். ஏன் சிஇஓ பராக் அக்ரவால் கூட இதை விரும்ப மாட்டார். எனவே ட்விட்டர் நிறுவனத்தை இப்போதே மஸ்க் வாங்கும் வாய்ப்புகள் குறைவே. ஆனாலும் ட்விட்டர் நிறுவனம் இந்த ஆபரை போர்ட் மீட்டிங்கில், முதலீட்டாளர்கள் மீட்டிங்கில் சோதனை செய்ய வேண்டும்.

பிளான் பி
இந்த நிலையில்தான் மஸ்க் தன்னிடம் பிளான் பி ஒன்று இருப்பதாக தெரிவித்துள்ளார். நேற்று ட்விட்டர் நிறுவனத்தை அவர் வாங்குவதாக அறிவித்த சில நிமிடங்களில் டெட் டாக் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அதில், நான் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஆபரை கொடுத்துள்ளேன். அதுதான் கடைசி ஆபர். ஆனால் ட்விட்டர் நிறுவனம் என்னிடம் கொடுக்கப்படுமா என்பது சந்தேகம்.. இருக்கட்டும்.. இருந்தாலும் என்னிடம் ஒரு பிளான் பி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

என்ன பிளான்?
அதே சமயம் அந்த பிளான் பி என்ன என்று மஸ்க் நேற்று தெரிவிக்கவில்லை. டெக் உலகையும், வால் ஸ்டிரீட் உலகையும் இந்த அறிவிப்பு வியக்க வைத்துள்ளது. மஸ்க் போட்டு இருக்கும் அந்த பிளான் பி என்ன. அவர் வைத்து. இருக்கிறார் வேறு எதுவும் நிறுவனம் தொடங்கபோகிறாரா அல்லது சிறிய முதலீட்டர்களின் பங்குகளை 51 சதவிகித பங்குகளை கைப்பற்ற போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications