Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிர்பார்த்ததை விட அதிக நேரம் ஆகிடுச்சி! வாக்னர் தலைவர் மரணம்.. எலான் மஸ்க் சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ரஷ்யா அரசின் கூலிப்படையாக இருந்த வாக்னர் குழு சமீபத்தில், அந்நாட்டுக்கு எதிராகவே திரும்பியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த கூலிப்படையின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் நேற்று விமான விபத்தில் உயிரழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து எலான் மஸ்க் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோவுடன் இணைய முன்வந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. என்னதான் இந்த போரை ரஷ்யா அறிவித்திருந்தாலும், ரஷ்ய ராணுவம் இந்த போரில் பேக்கப்தான். அதற்கு மாறாக முன்னணி களத்தில் இருந்து சண்டை செய்தது வாக்னர் குழுதான். ரஷ்யாவில் கூலிப்படைகளுக்கு அனுமதி கிடையாது. ஆனால் வாக்னர் எனப்படும் இந்த கூலிப்படை தங்களை தனியார் ராணுவம் என்று அறிவித்துக்கொண்டு ரஷ்ய நாட்டிற்காக சில பல வேலைகளை தொடர்ந்து செய்து வந்தது.

Elon Musk suspicious of Wagner CEO Evgeny Prigogs death

இதன் காரணமாக ரஷ்ய அரசாங்கமே இந்த கூலிப்படையை ஊட்டி வளர்த்தது. உக்ரைனுடனான போரில் வாக்னர் குழு சுமார் 30 ஆயிரம் பேரை பலி கொடுத்திருக்கிறது. தற்போதைய சூழலில் உக்ரைனின் கணிசமான பகுதிகளை ரஷ்யா வசம் இருக்க வாக்னர் குழுதான் காரணம். இப்படி இருக்கையில் "போரின் போது ரஷ்யா தாங்கள் கேட்ட ஆயுதங்களை கொடுக்கவில்லை, எங்கள் ஆட்கள் போர் முனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் போது ரஷ்யா அதை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறது. இதற்கு ரஷ்ய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்" என்று கூறி வாக்னர் படை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை முற்றுகையிட முயன்றது.

ஆனால் அதற்குள் பெலாரஸ் அதிபரின் பேச்சுவார்த்தை காரணமாக உடன்பாடு ஏற்பட்டு இந்த முற்றுகை திட்டத்தை கைவிட்டது. இருப்பினும் தான் ஊட்டி வளர்த்த கூலிப்படை தனக்கு எதிராக திரும்பியதால் அதிர்ந்துபோன ரஷ்ய புதின், ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக ஆயுதமேந்துபவர்கள் அனைவரும் துரோகிகள். அவர்கள் அழித்தொழிக்கப்படுவார்கள் என்று கூறினார். இந்த பிரச்னைக்கு பின்னர் வாக்னர் குழு தலைவர் பெலாரஸுக்கு சென்றுவிட்டார்.

இருப்பினும் இவர் பாதுகாப்பாக இருக்க வேண்டும், திறந்த வெளியிலோ, அல்லது ஜன்னல் அருகிலோ போகக்கூடாது என்று அமெரிக்காவின் சிஐஏ எச்சரித்திருந்தது. இந்நிலையில் நேற்று ரஷ்யாவில் விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் உயிரிழந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் அவரது உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்பதால் இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ரஷ்ய அதிபருடன் மோதல், அதன் பின்னர் மாஸ்கோ நோக்கி படையெடுத்தது என இதற்கு முன்னர் வாக்னர் குழு தலைவர் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஒன்றோடு ஒன்றுடன் தொடர்புப்படுத்தி பார்க்கும்போது தற்போது ஏற்பட்டுள்ள விமான விபத்து, திட்டமிட்ட படுகொலை என அமெரிக்க தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் X சோஷியல் மீடியா தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், "நான் எதிர்பார்த்ததைவிட அதிக நேரம் எடுத்திருக்கிறது. இது ஒரு திட்டமிட்ட SPY OPஆக இருப்பதற்கு கொஞ்சம் வாய்ப்பிருக்கிறது" என்று ட்வீட் செய்துள்ளார்.

அமெரிக்காவை பொறுத்த அளவில் SPY OP என்பது Psychological operations என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு செய்தி திட்டமிட்டு உருவாக்கப்பட்டு அது பரப்பப்படும். அந்த வகையில் வாக்னர் குழு தலைவர் பிரிகோஜின் மரணமும் திட்டமிட்டு விமான விபத்து என்று பரப்பப்படுவதாக எலான் மஸ்க் சந்தேகித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+