ஆப்கான் நிலைமை தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டரெஸுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை!
நியூயார்க்: ஆப்கானிஸ்தான் நிலைமைகள் தொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறிய நிலையில் அந்நாடு முழுவதும் தற்போது தாலிபான்கள் வசமாகி உள்ளது. இதனையடுத்து உலக நாடுகள் ஆப்கான் நிலைமை தொடர்பாக தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டமும் நேற்று ஆப்கானிஸ்தான் நிலைமைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தியது. பின்னர் சர்வதேச சமூகத்தின் கவலையையும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளிப்படுத்தி இருந்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு நடப்பு ஆகஸ்ட் மாதம் இந்தியாதான் தலைமை வகித்து வருகிறது.

இதில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நியூயார்க் சென்றிருந்தார். இதனிடையே ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து ஆப்கான் நிலைமைகள் குறித்து விவாதித்தார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தைத் தொடர்ந்து ஐ.நா. பொதுச்செயலாளருடனான சந்திப்பு சுமூகமானதாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கென்னுடனும் ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். அப்போது காபூல் விமான நிலையத்தில் விமான சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டியதன் அவசியத்தை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தி இருந்தார்.
அண்மையில் பிரதமர் மோடி தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உயர்நிலை கூட்ட விவாதம் நடைபெற்றது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகித்த முதல் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications