இப்போதே கண்டுபிடியுங்க.. இல்லைன்னா.. கோவிட் 26, 32 கூட உருவாகும்.. அமெரிக்க எக்ஸ்பர்ட்ஸ் எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கோவிட் 19 எப்படி உருவானது, இது எப்படி பரவியது என்பதை கண்டுபிடிக்கவில்லை என்றால் கோவிட் 26 அல்லது கோவிட் 32 உருவாக வாய்ப்புள்ளது என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2019 டிசம்பரில் மக்கள் இடையே பரவ தொடங்கிய கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த கேள்விகள் தற்போது அதிகரித்துள்ளது. இரண்டாம் அலை பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்தும் பலரும் விவாதிக்க தொடங்கி உள்ளனர்.

அதிலும் இந்த வைரஸ் இயற்கையாக தோன்றி இருக்க வாய்ப்பு இல்லை என்று பல மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் தற்போது சந்தேகம் எழுப்பி வருகிறார்கள். இது தொடர்பாக நிறைய கருத்துக்கள் இணையத்தில் வைக்கப்பட்டு வருகிறது.

கருத்துக்கள்

கருத்துக்கள்

அதன்படி இந்த கொரோனா வைரஸ் சீனாவின் வுஹன் ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்டு, அங்கிருந்து பரவி இருக்கலாம் அல்லது கசிந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அதே சமயம் 9 வருடங்களுக்கு முன் சீனாவின் யானன் பகுதியில் குகை ஒன்றில் பணியாற்றிய சிலருக்கு கொரோனா ஏற்பட்டதாகவும், அவர்களின் உடலில் இருந்து வைரஸை எடுத்து வுஹன் ஆராய்ச்சி மையம் ஆராய்ச்சிகளை செய்து, அதை பின் வெளியிட்டதாகவும் புகார்கள் வைக்கப்படுகின்றன.

புகார்

புகார்

இன்னொரு பக்கம் சீன ராணுவத்தின் உதவியோடு இந்த வைரஸ் வுஹனில் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் இயற்கையாக தோன்றவே அதிக வாய்ப்புள்ளது என்று ஹு குழு நடத்திய விசாரணை முடிவுகளை பலரும் சந்தேகிக்க தொடங்கி உள்ளனர். அமெரிக்க அதிபர் பிடனும் இது தொடர்பாக 90 நாட்களுக்குள் விசாரித்து முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

சிக்கல்

சிக்கல்

இந்த நிலையில்தான் கோவிட் 19 எப்படி உருவானது, இது எப்படி பரவியது என்பதை கண்டுபிடிக்கவில்லை என்றால் கோவிட் 26 அல்லது கோவிட் 32 உருவாக வாய்ப்புள்ளது என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டு துறையின் முன்னாள் கமிஷனர் ஸ்காட் கொட்லேப் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர் பீட்டர் ஹாட்ஸ்லாப் இருவரும் இது தொடர்பாக அமெரிக்க அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 எச்சரிக்கை

எச்சரிக்கை

அதில், இந்த கொரோனா வைரஸ் ஆராய்ச்சி கூடத்தில் இருந்து வெளியேறி இருக்க அதிக வாய்ப்புள்ளது. இதன் மூதாதையர்கள் கண்டிப்பாக இயற்கை தொடர்பான ஒன்று கிடையாது. வுஹன் ஆராய்ச்சி மையத்தை விசாரிக்க வேண்டும். அமெரிக்கா இதில் கடுமையாக செயல்பட வேண்டும்.

 6 மாதம்

6 மாதம்

அடுத்த 6 மாதமோ 1 வருடமோ சீனாவில் தங்கி விசாரிக்க வேண்டும். சீனா இதற்கு ஒத்துழைக்கவில்லை என்றால் சீனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது பொருளாதார தடை விதிக்க வேண்டும். கொரோனா வைரஸின் தோற்றத்தை கண்டுபிடிப்பது மிக முக்கியம். இல்லையென்றால் மீண்டும் இது ஏற்படும். இப்போதே இதன் தோற்றத்தை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் 2026, 2032ல் மீண்டும் தொற்று பரவல் ஏற்படலாம்.

மீண்டும் வரும்

மீண்டும் வரும்

கோவிட் 26 அல்லது கோவிட் 32 போன்ற பரவல் மீண்டும் ஏற்படலாம். இதே வைரஸ் மாற்றம் அடைந்து மீண்டும் பரவல். அல்லது புதிய கொரோனா வைரஸ் போன்ற வேறு வகை கொரோனா குடும்ப வைரஸ் உருவாகலாம். இப்போதே அமெரிக்க அரசு இதில் வேகம் காட்ட வேண்டும். இல்லையென்றால் ஆபத்துகள் அதிகரிக்கும், என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+