அரசு ஆவணங்களை பதுக்கிய வழக்கு.. பிறந்த நாளில் கைதாகி விடுதலையானார் டிரம்ப்! அமெரிக்காவில் சலசலப்பு
நியூயார்க்: அதிபர் காலம் முடிந்த பின்னர் அரசு ஆவணங்களை சமர்ப்பிக்காமல், தன்னுடன் எடுத்துச் சென்ற வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், டிரம்ப் கைது செய்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
டொனால்ட் டிரம்ப் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக இருந்துள்ளார். இந்நிலையில் 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவர் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால் வெற்றிபெறவில்லை. இதனையடுத்து அவர் பதவி விலக கூடாது என அவரது ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இருப்பினும் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் இருந்த சில முக்கியமான ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து அந்நாட்டின் புலனாய்வுத்துறை விசாரணையை தொடங்கியது. அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது, காணாமல் போன ஆவணங்களை டிரம்ப்தான் எடுத்துச் சென்றார் என்று அவர் மீது விசாரணை அமைப்புகள் குற்றம்சாட்டின. இதனையடுத்து டிரம்புக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடைபெற்றது.
இந்த ரெய்டில், பாம் பீச்சில் உள்ள Mar-a-Lago எனும் டிரம்பின் விடுதியில் ஏராளமான அரசு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது குறித்து விசாரணை அமைப்புகள் கூறுகையில், "சுமார் 300 கோப்புகள் Mar-a-Lago விடுதியில் மறைக்க வைக்கப்பட்டிருக்கிறது. இதில் பல ஆவணங்கள் முக்கியமானவையாகும். அணு சக்தி திட்டங்கள், ராணுவ ரகசியங்கள் போன்ற ஆவணங்கள் இதில் இருக்கின்றன" என்று கூறியுள்ளனர். இதனையடுத்து மியாமி ஃபெடரல் நீதிமன்றத்தில் புலனாய்வுத்துறை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.
49 பக்க குற்றப்பத்திரிக்கையில் 37 குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் அதிபர் ஒருவருக்கு எதிராக முதல் முறையாக கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது அமெரிக்காவில் இதுதான் முதல்முறை. இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் டிரம்ப் சிறை செல்வது நிச்சயம். எதிர்வரும் 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், ஏற்கெனவே ஆபாச நடிகைக்கு தனது கட்சி நிதியிலிருந்து பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து தற்போது அரசு ஆவணங்களை பதுக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் தனது 77வது பிறந்தநாளை நேற்று கொண்டாட தயாரானார். ஆனால், மியாமி ஃபெரடல் நீதிமன்றம் அவரை ஆஜராக சொல்லியிருந்தது.
எனவே அவரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தின் முன்னர் நிறுத்தினர். அங்கு, தான் குற்றமற்றவர் என்றும், வழக்கை எதிர்கொள்ள தயார் என்றும் டிரம்ப் கூறினார். இதனையடுத்து அவரை பிணையில் நீதிமன்றம் விடுவித்துள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒருவர் கிரிமினல் வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது.
நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த டிரம்ப், "இது என் வாழ்நாளில் அற்புதமான பிறந்தநாள். ஆனால் நாங்கள் இதை எல்லாவற்றையும் விட சிறந்த பிறந்த நாளாக மாற்ற போகிறோம்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications