Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குவாட் அமைப்பில் இந்தியா சேரவே இதுதான் காரணம்.. நடந்தது என்ன? "சீக்ரெட்டை" சொன்ன அமெரிக்க புள்ளி!

மைக் பாம்பியோ எழுதியுள்ள 'நெவர் கிவ் அன் இன்ச்: ஃபைட்டிங் ஃபார் தி அமெரிக்கா ஐ லவ்' எனும் புத்தகத்தில் இந்தியா குறித்து பல்வேறு தகவல் வெளியாகியுள்ளன.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையே இந்தியாவை 'குவாட்' அமைப்புடன் இறுக்கமாக சேர உந்தி தள்ளியது என்று அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.

மைக் பாம்பியோ எழுதியுள்ள 'நெவர் கிவ் அன் இன்ச்: ஃபைட்டிங் ஃபார் தி அமெரிக்கா ஐ லவ்' ('Never Give an Inch: Fighting for the America I Love') எனும் புத்தகத்தில் இந்தியாவுக்கும் அண்டை நாடுகளுக்கும் ஏற்பட்ட மோதல்கள் குறித்து சில தகவல்களை விரிவாக குறிப்பிடடுள்ளார். தற்போது இந்த புத்தகம் வெளியாகியுள்ள நிலையில், அதிலுள்ள தகவல்கள் பேசுபொருளாகியுள்ளன. அதில் கால்வான் பள்ளத்தாக்கு மோதல் மற்றும் இந்தியா-சீனா உறவு குறித்தும் அவர் எழுதியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, "இந்திய உருவானபோது அது சோசலிச சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அது அமெரிக்காவுடன் பனிப்போரில் ஈடுபட்டு ரஷ்யாவுடன் இணைய விரும்பியது. ஆனால் காலப்போக்கில் இந்த பாணியை கைவிட்டு எந்த கூட்டணியும் இல்லாமல் தனது சொந்த பாதையில் இந்தியா பயணிக்க தொடங்கியது. இவ்வாறு இருக்கும்போதுதான் சீனாவின் ஆக்கிரமிப்பு இந்தியாவின் போக்கை மாற்றியமைத்தது.

குவாட்

குவாட்

சொல்லப்போனால் சீனாவின் ஆக்கிரமிப்பு காரணமாகதான் இந்தியா குவாட் அமைப்பில் இணைந்தது. இதனை அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் சிறப்பாக செய்து முடித்தது. கடைசியாக சீனாவின் அராஜகத்தை எதிர்கொள்ள அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்தன. இந்த கூட்டணி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும். இதற்கு ஏற்றார் போல சீனாவானது இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தானுடன் நெருக்கத்தை காட்ட தொடங்கியது. இதற்கு சீனா பயன்படுத்திய திட்டம்தான் 'பெல்ட் அண்ட் ரோடு'(Belt and Road Initiative). இது சீனாவை பாகிஸ்தானுடன் நெருக்கமாக்கியது" என்று கூறியுள்ளார்.

சில்க் ரோடு

சில்க் ரோடு

ஆசிய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே காலங்காலமாக இருந்த வந்த வர்த்தக பாதைகளை மேம்படுத்துவதுதான் இந்த 'பெல்ட் அண்ட் ரோடு' திட்டமாகும். பெல்ட் அண்ட் ரோடு என்பது ஒரு பெரிய திட்டத்தின் நான்கில் ஒரு அங்கம் மட்டுமே. அதாவது உலகம் முழுவதும் சீனாவிலிருந்தான் பட்டு பரவியது. இந்த பட்டு பயணித்த பாதையை 'சில்க் ரோடு' என்று அழைக்கப்படுகிறது. இந்த பழமையான பாதைகளின் வழியே வர்த்தகத்தை மேம்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. அதன்படி சீனாவின் வான், கப்பல், ரயில் மற்றும் சாலை போக்குவரத்துகள் இந்த பாதையில் இணைக்கப்படும்.

மேரிடைம் சில்க் ரோடு

மேரிடைம் சில்க் ரோடு

சீனா அமைந்திருக்கும் கிழக்கு ஆசியாவிலிருந்து பசிபிக் கடல் வழிகா பயணிக்காமல் இந்திய பெருங்கடல் வழியாக பயணித்து மேற்காசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவை அடைந்து அங்கிருந்து ஐரோப்பா நோக்கி கடல் பாதை ஒன்றை சீன திட்டமிட்டுள்ளது. இது 'மேரிடைம் சில்க் ரோடு' என்று அழைக்கப்படுகிறது. அதேபோல, சீனாவிலிருந்து ரஷ்யா, ஜப்பான், கொரியா மற்றும் ஆர்டிக் பகுதிகளுக்கு ஒரு பாதை உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பாதை 'ஜஸ் சில்க் ரோடு' என்று அழைக்கப்படும். ஆக இந்த பாதைகள் வழியாக உள்ள துறைமுகங்கள் மேம்படுத்தப்படும். ஒருவேளை இது சாலை மார்க்கமாக இருப்பின் அந்த சாலைகள் உலக தரம் வாய்ந்த அளவில் மேம்படுத்தப்படும்.

பெல்ட் அண்ட் ரோடு

பெல்ட் அண்ட் ரோடு

இதற்காக சீனா சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு கடன் கொடுக்கும். தற்போது இந்த 'பெல்ட் அண்ட் ரோடு' திட்டத்தில் பாகிஸ்தானில் சாலை அமைக்கப்பட உள்ளன. இதற்காக பாகிஸ்தானுக்கு சீனா அதிக அளவில் பொருளாதார நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளும் நெருக்கம் காட்டியுள்ளன. இதைத்தான் மைக் பாம்பியோ சுட்டிக்காட்டியுள்ளார். முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை சம்பவத்தையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் அணு ஆயுத உற்பத்தியில் இறங்கின என்று பாம்பியோ கூறியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+