"பேசாம பதுங்கு குழிக்கே போய் படுத்துக்குங்க".. பல்பு வாங்கிய டிரம்ப்.. சியாட்டில் மேயர் சுளீர்!
அதிபருக்கு எதிராக கருத்தை சொன்ன சியாட்டில் மேயர்
நியூயார்க்: "ஒன்னு செய்யுங்க, பேசாம நீங்க அந்த பதுங்கு குழியிலேயே போய் படுத்துக்குங்க.. எங்களை கொஞ்சம் பாதுகாப்பா இருக்க விடறீங்களா?" என்று அதிபர் டிரம்ப்பை பார்த்து சியாட்டில் நகர மேயர் செம டென்ஷனில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
ஜார்ஜ் கழுத்தை முட்டியால் அமுக்கி கொன்றதையடுத்து அமெரிக்கா பற்றிக் கொண்டு எரிகிறது.. ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்து வருகின்றன.
ஆனாலும் போராட்டக்காரர்களை அடக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும்தான் அவர்களை போலீசார் கலைக்க முயன்று வருகின்றனர்.. சில இடங்களில் மிளகு பொடியை கூட மக்கள் மீது தூவினார்கள்.

வெள்ளை மாளிகை
ஆங்காங்கே நடந்து கொண்டிருந்த இந்த போராட்டம், டிரம்ப் வசிக்கும் வெள்ளை மாளிகை அருகேயும் சில தினங்களுக்கு முன்பு நடந்தது.. திடீரென ஆயிரக் கணக்கானோர் கூடிவிட்டனர்.. இதனால் வெள்ளை மாளிகையில் உள்ள பதுங்கு குழியில், அதிபர் கொஞ்ச நேரம் பதுங்கியிருந்ததாக செய்திகள் தெரிவித்தன.. அவருடைய மனைவி மெலினாவும், மகனும்கூட பதுங்கு குழியில் பாதுகாப்புக்காக பதுங்கியிருந்ததாக கூறப்பட்டது.. இந்த செய்திகள் சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பை தந்தது.

நகரம்
இந்நிலையில், கேபிடல்ஹில் தன்னாட்சி மண்டலம் என்று சியாட்டில் மாகாணத்தின் ஒரு பகுதியை ட்ரம்ப் அறிவித்திருந்தார்... அத்துடன் சும்மா இல்லாமல், "உங்கள் நகரத்தை எடுத்துக்குங்க.. நீங்க செய்யவில்லை என்றால், நான் செய்வேன்" என்று சியாட்டில் மேயரை மிரட்டினார் டிரம்ப்... அவரை போலவே வாஷிங்டன் கவர்னர் ஜேய் இன்ஸ்லி-யையும் மிரட்டினார்.. இதற்கு அடிப்படை காரணம் 2 பேருமே ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் என்பதுதான்.

நாய்கள்
ஆர்ப்பாட்டக்காரர்களை "நாய்கள்" என்றார், "உள்நாட்டு பயங்கரவாதிகள்" என்றெல்லாம் வர்ணித்ததுடன், சியாட்டிலை நாங்கள் எடுத்து கொண்டுள்ளோம் என்று ஒரு ட்வீட்டையும் போட்டு அவர்களுக்கு டென்ஷனை எகிற செய்தார்.. உலகிலேயே தன்னுடைய நாடுதான் கொரோனா தொற்றில் முதலில் உள்ளது என்று தெரிந்தும், கொத்து கொத்தாக உயிர்கள் மடிந்து விழுவது தெரிந்தும், அதை பற்றி கொஞ்சமும் அதிபர் கவலையேபடவில்லை.

ஜார்ஜ்
கொரோனா மட்டுமில்லை, ஜார்ஜ் கொலை விவகாரம், தன்னுடைய எதிர்கால அரசியலுக்கே கேள்விகுறியாகிறது என்று தெரிந்துகூட அதையும் சட்டை செய்யவில்லை.. மாறாக, வாஷிங்டன் கவர்னரை சீண்டி கொண்டே இருந்தார்.. தீவிர இடது சாரி கவர்னர் என்று ஒரு வர்ணனையும் செய்து அவரை சூடு ஏற்றினார்.

காட்டம்
இதெல்லாம் பொறுத்து பொறுத்து போன சியாட்டில் மேயர் ஜென்னி டுர்கன், தற்போது பொங்கி எழுந்துவிட்டார்.. "'கொஞ்சம் எங்கள் எல்லாரையும் பாதுகாப்பாக இருக்க விடுங்க.. நீங்க அந்த பதுங்கு குழிக்கே திரும்பவும் போய்விடுங்கள்" என்று காட்டமாக தெரிவித்துள்ளார். வாஷிங்டன் கவர்னர் இன்ஸ்லீ, "இப்படி ஒட்டுமொத்தமாக நிர்வாகத்திறமை இல்லாத ஒரு நபர் வாஷிங்டன் மாநில விவகாரத்துக்குள் தலையிடவே கூடாது" என்று தெரிவித்துள்ளார்.. இதற்கும் டிரம்ப் ஏதாவது பதில் வைத்திருப்பார்.. பார்ப்போம்!
-
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications