நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இந்த போராளிகள் நாய்கள்".. கருத்து சொன்ன டிரம்ப்.. "வாயை மூடுங்க" செம டோஸ் விட்ட போலீஸ் அதிகாரி!

அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து குறித்து போலீஸ் அதிகாரி காட்டமான பேட்டி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

நியூயார்க்: "இந்த போராளிகள் நாய்கள், திருடர்கள்" என்று அதிபர் ட்ரம்ப் சொல்லி உள்ளதற்கு அமெரிக்க போலீஸ் அதிகாரிகளே கடுப்பாகி உள்ளனர்.. "இந்த நேரத்தில், உங்களால் ஆக்கபூர்வமாக பேசமுடிந்தால் பேசுங்கள், இல்லையென்றால் வாயை மூடிக்கொண்டு சும்மா இருங்கள்" என்று கோபத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

    அமெரிக்காவில் ஜார்ஜ் மரணம்.. மீண்டும் திரும்பி வந்த Anonymous Hacker குழு

    அமெரிக்காவில் மின்னெபோலிஸ் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் பிளாய்ட்.. வயசு 46 ஆகிறது.. கருப்பின இளைஞரான இவர் கடந்த 27-ம் தேதி 20 டாலருக்கு கள்ள நோட்டு பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டதுடன், காருக்கு வெளியே தள்ளிவிட்டு கழுத்தில் தங்களது காலையும் அழுத்தி வைத்து இறுக்கினர்.

    இதில் துடிதுடித்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார் ஜார்ஜ்.. இது தொடர்பான வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி இன்னமும் அதிர்ச்சி விலகாமல் உள்ளது.

    தாங்க முடியவில்லை.. ஜார்ஜ் தாங்க முடியவில்லை.. ஜார்ஜ்

    நிறவெறி

    நிறவெறி

    இந்த சம்பவம் உள்நாட்டு பிரச்சனையாகவும் விஸ்வரூபமெடுத்துள்ளது. போராட்டம் மற்றும் வன்முறையை கட்டுப்படுத்த பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா போல வளர்ந்த நாட்டில் இன்னமும் இப்படி நிறவெறியா என்று உலக மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆங்காங்கே போராட்டங்களும் நடந்து வருகின்றன.

    கண்ணீர் புகை

    கண்ணீர் புகை

    போலீசார் லத்தியால் அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை சுட்டும், போராட்டக்காரர்களை துரத்தியடிக்கின்றனர்... ஜார்ஜ் மரணத்துக்கு நீதிகேட்டு போராடுபவர்களில் வெள்ளை இனத்தவர்களும் அதிகம் பங்கேற்றுள்ளனர்.. இதனால் அதிபர் ட்ரம்ப் "நேரத்தை வீணடிக்காதீர்கள்... போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்குங்கள்" என்று போலீசாருக்கு அட்வைஸ் சொல்லி உள்ளது போராட்டக்காரர்களை மேலும் கொதிப்படைய செய்துள்ளது..

    அதிகாரிகள்

    அதிகாரிகள்

    ஏற்கனவே "இந்த போராளிகளை நாய்கள், திருடர்கள்" என்று அதிபர் ட்ரம்ப் சொல்லி உள்ளது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்திய நிலையில், போலீசாருக்கு இவ்வாறு அட்வைஸ் தந்துள்ளார். ஆனால் அதிபரின் இந்த வெறியேற்றும் பேச்சு தேவையில்லாத ஒன்று என்று அமெரிக்க போலீஸ் அதிகாரிகள் சிலரே வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டனர். ஆர்ட் அகவதோ என்ற ஹவுஸ்டன் நகர போலீஸ் கமிஷனர் சிஎன்என் டிவிக்கு ஒரு பேட்டி தந்துள்ளார்.

    வாயை மூடுங்கள்

    வாயை மூடுங்கள்

    அதில், "அமெரிக்காவின் அனைத்து காவல்துறை தலைவர்களின் சார்பாகவும், இதை அதிபர் டிரம்ப்புக்கு தெரிவிக்க விரும்புகிறேன்... இது மக்களை அடக்கி ஒடுக்கும் நேரம் கிடையாது.. மக்கள் மனங்களை வெல்ல வேண்டிய நேரம்.. அதனால் இந்த நேரத்தில், உங்களால் ஆக்கபூர்வமாக பேசமுடிந்தால் பேசுங்கள், இல்லையென்றால் வாயை மூடிக்கொண்டு சும்மா இருங்கள்" என்று கோபத்துடன் தெரிவித்துள்ளார். இன்னும் எத்தனை பேரிடம்தான் இப்படி அதிபர் வாங்கி கட்டிக் கொள்வாரா?!

    English summary
    george floyd: please, keep your mouth shut if you can't be constructive, houston police chief to trump
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X