"அது" இருந்துச்சாமே.. 10 வருடம் கழிச்சி பாட்டியின் சவக்குழியை தோண்டினால்.. ஐயோ, அலறிட்டாங்க எல்லாரும்
86 வயது பாட்டியின் கல்லறையை மீண்டும் தோண்டி எடுத்தபோது அதிசயம் நடந்துள்ளது
நியூயார்க்: இதுவரை நடக்காத ஒரு அதிசயம் நடந்துள்ளது.. 10 வருடம் கழித்து கல்லறையில் உள்ள சடலத்தை தோண்டி எடுத்து பார்த்த உறவினர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
நெஞ்சை தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சில நேரத்தில், வித்தியாசமான அல்லது அரிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் போட்டோக்களும், இணையவாசிகளை கவர்ந்துவிடும்..
அப்படித்தான் 4 நாட்களுக்கு முன்பு ஒரு சம்பவம் உலக மக்களையே உறைய வைத்தது.. அமெரிக்காவில் மேரிலாண்ட் என்ற பகுதியை சேர்ந்தவர் ஜெசிக்கா லோகன்.. 31 வயதாகிறது.. இவர் டாக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்டார்..

நெளிந்த பாம்பு
ஆனால், குடும்பத்தில் வறுமை காரணமாக, டாக்டருக்கு படிக்க முடியவில்லை. அதனால், போஸ்ட் மார்ட்டம் வேலை செய்வது இவருக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், கடந்த 9 வருடங்களாகவே, பிரேத பரிசோதனை செய்யும் வேலையை செய்தும் வருகிறார்.. பொதுவாக, இறந்துபோன மனித உடம்பை ஒருநாள் இவர், போஸ்ட் மார்ட்டம் செய்து கொண்டிருந்தபோது, அப்போது, அந்த சடலத்தின் தொடைப்பகுதியில் உயிரோடு இருக்கும் பாம்பு ஒன்று நெளிந்துள்ளது. இதனை பார்த்ததுமே பதறி அடித்துக் கொண்டு போஸ்ட் மார்ட்டம் ரூமில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளார் ஜெசிக்கா..

தொடைக்குள் பாம்பு
இறந்த நபரின் உடலுக்குள் ஒரு பாம்பு எப்படி உயிருடன் இருந்திருக்கும்? என்ற குழப்பமும், பீதியும் பலருக்கும் சேர்ந்துவிட்டது.. இறந்த அந்த நபரின் உடல், ஒரு ஓடையில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாம். இறந்த பிறகு அந்த உடலுக்குள் பாம்பு புகுந்து இருக்கலாம் என்கிறார்கள்.. உடல்கள் சூடாகவும் ஈரமாகவும் இருந்ததால் பூச்சிகள் ஊர்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்குமாம்.. அப்போதுகூட, இறந்தவர் உடலில் பாம்பு எப்படி உள்ளே போயிருக்கும் என்ற சந்தேகம் நிலவி கொண்டே வருகிறது. இப்போதும் ஒரு சம்பவம் உறைய வைத்து வருகிறது.

கல்லறை
டொமினிக்கன் குடியரசில் மார்கரிட்டா ரொசாரியா என்ற பாட்டி வாழ்ந்து வந்தார்.. இவர் 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.. அப்போது இவருக்கு வயது 86.. இவரை கொண்டு போய் குடும்பத்தினர் கல்லறையில் அடக்கம் செய்துவிட்டார்கள்.. இப்போது, மார்கரிட்டா சடலத்தை தோண்டி எடுத்து, வேறொரு இடத்தில் புதைக்க, குடும்பத்தினர் திட்டம் போட்டுள்ளனர்.. அதற்காக 10 வருடம் முன்பு புதைக்கப்பட்ட மார்கரிட்டா கல்லறைக்கு போனார்கள்.. பாட்டியின் சடலத்தையும் குடும்பத்தினர்கள் தோண்டி எடுத்துள்ளனர். அப்போதுதான் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

உருவம் + முடி
மார்கரிட்டா உடல் புதைக்கப்பட்டு 10 வருடங்கள் ஆன பிறகும், அவரது தலைமுடி கொட்டாமல் அப்படியே இருந்ததாம்.. அவரது தோலின் நிறமும், வடிவமும் அப்படியே இருக்கிறதாம்.. கொஞ்சம்கூட பாதிப்பு இல்லையாம். அதாவது, அவரை புதைக்கப்படும்போது எந்த உருவத்தில் இருந்தாரோ, இப்போதும் அச்சுஅசல் அப்படியேதான் இருக்கிறார் என்கிறார்கள்.. இதைவிட இன்னொரு ஷாக், மார்கரிட்டாவின் உடலை நேராக நிற்க வைக்க முடிந்ததாம்.. இதையெல்லாம் குடும்பத்தினரே ஆச்சரியப்பட்டு சொல்கிறார்கள்.

புதைக்குழி
தொடர்ந்து அவர்கள் சொல்லும்போது, "மார்கரிட்டா உயிருடன் இருக்கும்போதே, நிறைய தான தர்மங்களை செய்து வந்தார்.. ஊருக்கெல்லாம் கேட்காமலேயே உதவினார்.. எல்லார் மத்தியிலும் நல்லவர் என்ற பெயரை எடுத்தவர்.. சிறந்த மனிதாபிமானி என்று எல்லாருமே அவரை சாகும்வரை போற்றினார்கள்.. இப்படியான நற்குணம் கொண்டவராக வாழ்ந்துவந்ததால்தான், அவரது உடல் சேதமடையாமல் இருக்கிறது போலும் என்று வியந்து சொல்கிறார்கள் குடும்பத்தினர்.

சவக்குழி
பொதுவாக, ஒருவர் இறந்த உடனேயே அவருடைய உடலை பதப்படுத்துவதால் அது சேதமடையாமல் இருக்க வாய்ப்புள்ளது.. ஆனால், மார்கரிட்டாவுக்கு அப்படி எதுவுமே செய்யவில்லை.. எல்லாரையும்போல், கல்லறையில் கொண்டுபோய் அடக்கம் செய்துவிட்டார்கள்.. இப்போது வேறு இடத்துக்கு கொண்டு சென்று உடலை புதைக்கலாம் என்று குழியை தோண்டியபோதுதான், புதைத்த தினத்தன்று எப்படி இருந்தாரோ, அதுபோலவே 10 வருடம் கழித்தும் உருவம் உள்ளதாம்.. பாட்டியின் இந்த செய்தியை கேட்டு பலரும் திகைத்து கொண்டிருக்கிறார்கள்..!!
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications