டிரம்ப் கண் காட்டிய நொடி! மொத்த வெனிசுலா முழுக்க மின்சாரம் போனது எப்படி? அரண்டு நிற்கும் உலக நாடுகள்
நியூயார்க்: ஒரு நாட்டின் அதிபர் நினைத்தால்.. உங்கள் நாட்டின் மின்சாரத்தை மொத்தமாக துண்டிக்கலாம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அமெரிக்க அதிபர் டிரம்ப் அதைத்தான் செய்துள்ளார். வெனிசுலா நாட்டின் மின்சாரத்தை மொத்தமாக ஒரே நடவடிக்கை மூலம் துண்டித்துள்ளார். அதாவது மொத்த நாடும்.. துல்லியமாக அங்கே இருளில் மூழ்கி உள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மொத்த உலக நாடுகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அப்படி என்னதான் நடந்தது?

மின் விநியோகத்தைத் துண்டிக்க உத்தரவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை பிடிக்கும் நடவடிக்கைகளின் போது, வெனிசுலா தலைநகர் காரகாஸில் மின் விநியோகத்தைத் துண்டிப்பதற்கு அமெரிக்கா சைபர் தாக்குதல்கள் அல்லது பிற தொழில்நுட்ப திறன்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று சனிக்கிழமையன்று தெரிவித்தார். ஆனால் என்ன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினோம் என்று சொல்லவில்லை.
இது உண்மையாக இருந்தால், அமெரிக்காவின் இணையவழித் திறனை வேறொரு நாட்டிற்கு எதிராகப் பயன்படுத்திய மிக வெளிப்படையான சந்தர்ப்பங்களில் ஒன்றாகக் கருதப்படும். முக்கியமாக அதிபர் டிரம்ப் நினைத்தால் எந்த நாட்டின் மின்சாரத்தையும் அவர் மொத்தமாக துண்டிக்க முடியும், பொதுவாக, இத்தகைய செயல்பாடுகள் அதி ரகசியமானவை; உலக அளவில் இணையவழி நடவடிக்கைகளில் அமெரிக்கா மிகவும் மேம்பட்ட நாடாகும்.
மார்-ஏ-லாகோவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த நடவடிக்கையை விவரிக்கையில் டிரம்ப் கூறியதாவது: மொத்தமாக வெனிசுலா நாடு இருளில் மூழ்கியது. எங்களிடம் உள்ள ஒரு குறிப்பிட்ட நிபுணத்துவம் உள்ளது. இதன் காரணமாக வெனிசுலா நகரின் விளக்குகள் மொத்தமாக அணைக்கப்பட்டன. அது இருண்டிருந்தது, இதனால் நாங்கள் உள்ளே நுழைந்து எங்கள் ஆபரேஷனை செய்ய முடிந்தது, என்றார்.
அதே பத்திரிகையாளர் சந்திப்பில், கூட்டுப் படைகளின் தளபதி ஜெனரல் டான் கெய்ன், அமெரிக்க சைபர் அமைப்பு , அமெரிக்க விண்வெளி அமைப்பு மற்றும் போர் கட்டளை அமைப்பு, சனிக்கிழமை அதிகாலையில் இருந்து இதற்கான பணிகளை செய்தன. அமெரிக்கப் படைகளுக்கு என்று சிறப்பு வழித்தடத்தை உருவாக்க நாங்கள் நடவடிக்கைகளை செய்தோம். மின்சாரத்தை துண்டிப்பது, இணையத்தை துண்டிப்பது, மொபைல் கனெக்சனை துண்டிப்பது என்று நிறைய நடவடிக்கைகளை செய்தோம், என்று கூறி உள்ளார்.
இதன் மூலம் அமெரிக்க அதிபர் நினைத்தால்.. உங்கள் நாட்டின் மின்சாரத்தை மொத்தமாக துண்டிக்கலாம் என்பது நிரூபணம் ஆகி உள்ளது. அந்த அளவிற்கு அமெரிக்காவிடம் சைபர் பலம் இருப்பது இதன் மூலம் புலனாகிறது.
வீட்டிற்குள் புகுந்து தூக்கிய தலைகள்
வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸும் அமெரிக்கப் படைகளால் காரகாஸில் நடந்த இரவு நேரத் தாக்குதலில் கைது செய்யப்பட்டு, நியூயார்க் நகரத்திற்கு கொண்டுவரப்பட்டனர். மன்ஹாட்டனில் உள்ள அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு நிர்வாக (டி.இ.ஏ) தலைமையகத்தில் அதிகாரிகளை "குட் நைட், ஹேப்பி நியூ இயர்" என மதுரோசிரித்த முகத்துடன் வாழ்த்தினார். இந்த கைது உலக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
மதுரோவை கைது செய்ய, அமெரிக்கப் படைகள் நேற்று அவரது காரகாஸ் இராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தின. வெனிசுலா தலைவர் விலங்கிடப்பட்ட நிலையில், மன்ஹாட்டனில் உள்ள டி.இ.ஏ தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, தன்னுடன் வந்த அதிகாரிகளுக்கு அவர் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மதுரோவை இரு டி.இ.ஏ அதிகாரிகள் உள்ளே அழைத்துச் செல்லும் காணொளியில் அவர் புன்னகையுடன் வாழ்த்தியுள்ளார்.
நியூயார்க் மாநிலத்தில் உள்ள ஸ்டீவார்ட் ஏர் நேஷனல் கார்டு தளத்தில் மதுரோவும் அவரது மனைவியும் தரையிறங்கினர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மன்ஹாட்டன் டி.இ.ஏ அலுவலகத்திற்கும், பின்னர் புரூக்ளினில் உள்ள மெட்ரோபொலிட்டன் தடுப்பு மையத்திற்கும் மாற்றப்பட்டனர். நியூயார்க் வந்தடைந்தவுடன், மன்ஹாட்டனில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்திற்கு அவர் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
-
B1/B2 Visa: காசு கொடுத்த 10 நாளில் அமெரிக்கா செல்ல விசா.. ப்ரீமியம் சேவையாம்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு!












Click it and Unblock the Notifications