உங்களுக்கு 40 வயது ஆகிடுச்சா? டிரம்ப் வர்த்தக போரால்.. வந்த மிகப்பெரிய சிக்கல்.. இப்படி ஆகிடுச்சே
நியூயார்க்: உலக அளவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக பங்குச்சந்தைகள் சரிய தொடங்கி உள்ளன. 90 நாட்களுக்கு இந்த வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தி இருந்தாலும்.. உலக அளவில் மார்க்கெட் கடுமையான பாதிப்பை அடைந்தது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கையால் இந்த வருடம் அமெரிக்காவில் recession தொடங்கும் என்று ஜேபி மோர்கன் கணித்துள்ளது. பரஸ்பர வரிவிதிப்பால், 2வது நாளாக அமெரிக்க பங்குச்சந்தை கடும் சரிவு அடைந்து உள்ளது. மார்க்கெட் கடந்த சில மாதங்களாக மிக மோசமான ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

எச்சரிக்கை
இந்த நடவடிக்கைகள் காரணமாக recession நடக்கும். அப்படி நடக்கும் பட்சத்தில் இன்னும் சில மாதங்களில் 40 வயதுக்கு மேற்பட்ட பலர் வேலை இழப்புகளை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்து உள்ளனர்.
1. 40 வயதுக்கு மேற்பட்ட பலர் வேலை இழப்புகளை சந்திக்கலாம்.
2. இவர்கள் பெரும்பாலும் அதிக வருமானம் வாங்குவார்கள். அதே சமயம் இவர்களிடம் புதிய ஸ்கில் இருக்காது.
3. பொருளாதார சரிவு காரணமாக நிறுவனங்கள் காஸ்ட் கட்டிங் செய்யலாம். இவர்களின் முதல் டார்கெட் 40 வயதுக்கு மேற்பட்டோர்தான்.
4. டிரம்ப் வர்த்தக போர், ஏஐ வருகை காரணமாக 40 வயதுக்கு மேற்பட்டோர்தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.
5. பொதுவாக recession வந்தால் சீனியர் ரோல்கள் தேவை இல்லை என்று நீக்கப்படும். அந்த வகையில் இந்த முறையும் சீனியர் ரோல்களில் உள்ள 40 வயதுக்கு மேற்பட்டோர்தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.
பல துறைகள் பாதிப்பு
முக்கியமாக டிரம்ப் விதித்த வரி காரணமாக ஆட்டோமொபைல் துறை தொடங்கி ஐடி துறை வரை எல்லாம் மொத்தமாக வீழ்ந்து உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கையால் இந்த வருடம் அமெரிக்காவில் recession தொடங்கும் என்று ஜேபி மோர்கன் கணித்துள்ளது. ஜே.பி. மோர்கன் 2025 ஆம் ஆண்டில் அமெரிக்க மந்தநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து முதல் பெரிய வோல் ஸ்ட்ரீட் நிறுவனமாக மாறியுள்ளது. ஜனாதிபதி டிரம்பின் புதிய வரி கட்டணங்கள் காரணமாக அமெரிக்கா பெரிய இழப்புகளை சந்திக்கும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அழியும் உலக பொருளாதாரம்
அமெரிக்க மார்க்கெட் தினம் தினம் சரியும் நிலையில்.. உலக பொருளாதாரம் அழிய போகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் அமெரிக்க மற்றும் உலக மார்க்கெட் சரிவு குறித்து முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார். உலக மார்க்கெட் தினம் தினம் கடுமையாக சரிந்து வரும் நிலையில் அவர் வெளியிட்டு உள்ள தகவல் பலரின் புருவங்களை உயர்த்தி உள்ளது.
அமெரிக்க பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த அமெரிக்காவின் டாப் நிறுவனங்கள் உள்ள எஸ்பி 500 பங்குகள் 10% சரிந்து உள்ளது. இதை மார்க்கெட் Market Correction என்று அழைப்பார்கள். இப்படியே போனால் அடுத்து Bear Market ஏற்படும். அதாவது 20% சரிவு ஏற்படும். அது நீடித்தால் Market Crash அதாவது மார்க்கெட் வீழும். அதை தொடர்ந்து recession, depression எனப்படும் மிகப்பெரிய அளவிலான பொருளாதார சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அமெரிக்க பங்கு சந்தை விழுந்தால் அதை தொடர்ந்து இந்திய பங்குசந்தையும், இங்கிலாந்து பங்குசந்தையும் கடுமையாக வீழ்ச்சி அடையும்.
கணிப்பு
சர்வதேச மார்க்கெட் மிக மோசமாக உள்ளது. 100 வருடங்களில் இல்லாத மிக மோசமான சம்பவம் சர்வதேச மார்க்கெட்டில் நடக்க போகிறது என்று புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி உலக அளவில் மிகப்பெரிய பங்குச்சந்தை வீழ்ச்சி நடக்க போவதாக எச்சரித்து உள்ளார்.
2025 இல் வரலாற்றில் மிகப்பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சியைத் சந்திக்கும் என்று கணித்துள்ளார். முதலீட்டாளர்களை எச்சரிக்கும் அதே வேளையில், குறைந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கான பொன்னான வாய்ப்பு இது என்றும் அவர் கூறுகிறார். 1992ல் சர்வதேச மார்க்கெட் கவிழ்ந்தது. இதனால் மிகப்பெரிய பொருளாதார சரிவு ஏற்பட்டது. அதை Great Depression என்று அழைப்பார்கள்.
இப்போது அதே போன்ற கொடூர சம்பவம் நடக்க போகிறது என்று ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி என்று எச்சரித்து உள்ளார். பங்குச்சந்தை உலக வரலாற்றில் இல்லாத மிக மோசமான சரிவை அடையும். தயாராக இருங்கள். இப்படிப்பட்ட நேரத்தில் உண்மையான பணமான தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யுங்கள். முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கும் சம்பவம் அடுத்த சில மாதங்களில் நடக்கும், என்றுள்ளார்.
பதிலடி வரிகள் என்றால் என்ன?
முதலில் இது என்ன வர்த்தக போர் என்று பார்க்கலாம். அமெரிக்க அதிபர் டிரம்ப் reciprocal tariff எனப்படும் வரிகளை விதிக்க உள்ளார். அதாவது பதிலடி வரி. அதாவது இந்தியா அமெரிக்கா மீது விதிக்கும் வரியை அப்படியே இந்தியா மீது அமெரிக்கா விதிக்கும். அதாவது ஒரு துறையில் உள்ள ஒரு பொருளுக்கு இந்தியா 30 சதவிகிதம் வரி விதிக்கிறது. அமெரிக்கா 10 சதவிகிதம்தான் வரி விதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த புதிய விதிப்படி அமெரிக்காவும் அதே 30% வரியை இனி விதிக்கும். வர்த்தக போர் காரணமாக டாலர் மதிப்பு சரியலாம். இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக மார்க்கெட்டில் இருந்து வெளியேறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications