உலகிற்கே ஆபத்து.. டிரம்ப் ரொம்ப விவகாரமா இருக்கிறாரே.. அமெரிக்காவால் உலக நாடுகளுக்கே சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள டிரம்ப் கடந்த சில நாட்களாக எடுத்து வரும் முடிவுகள் உலக நாடுகளுக்கே சிக்கலாக மாறி உள்ளது. முக்கியமாக உலக சுகாதாரத்திற்கும், காலநிலை மாற்றத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் டிரம்ப் முடிவுகளை எடுத்து வருகிறார்.

உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது. மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம்.

donald trump

இது மனித குலத்திற்கான "கோட் ரெட்" எச்சரிக்கை மணி. உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.... கடந்த சில நாட்களுக்கு முன் ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை.

ஆம், காலநிலை மாற்றம் மிக மோசமான நிலையை அடைந்துவிட்டதாகவும், நாம் காலநிலை மாற்றத்தின் கோட் ரெட் காலத்தில் இருப்பதாகவும் இந்த ஆய்வு அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் இந்த நூற்றாண்டு முழுக்க கடலோர பகுதிகளில் கடல் மட்டம் தொடர்ந்து உயரும். இதனால் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து வெள்ளங்கள், புயல்கள் ஏற்படலாம். கடலோரத்தை ஒட்டி இருக்கும் சிறு சிறு கிராமங்கள் மொத்தமாக அழிந்து போகவும் வாய்ப்புகள் உள்ளன. பல கடல் கரைகள் காணாமல் போகும். முன்பு 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பட்டு வந்த கடல் சார்ந்த வெள்ளம், கடல் சார்ந்த பேரிடர்கள் இனி எல்லா வருடமும் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன.

டிரம்ப் முடிவுகள்:

இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள டிரம்ப் கடந்த சில நாட்களாக எடுத்து வரும் முடிவுகள் உலக நாடுகளுக்கே சிக்கலாக மாறி உள்ளது.

காலநிலை மாற்றம், சுற்றுசூழல் பாதிப்பு மீது டிரம்ப் நம்பிக்கை கொண்டவர் இல்லை. இதன் காரணமாகவே பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. அவரும் அவரின் கட்சியும் காலநிலை மாற்றத்தை தவறான கருத்து, பொய்யான பிரச்சாரம் என்று மறுப்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக இதற்கு எதிரான நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார்.

donald trump

விவகாரமான முடிவு 1:

டொனால்ட் டிரம்ப் மீண்டும் கச்சா எண்ணெய் வர்த்தகம், பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளார்.

உலகம் முழுக்க மக்கள் இடையே இவி கார், பைக் வாங்கும் மோகம் அதிகரித்து வருகிறது. இந்த மோகத்திற்கு மார்க்கெட் மாறியதே காரணம். உலகம் முழுக்க வெப்பமயமாக்கலுக்கு எதிராக பிரச்சாரம் நடக்கிறது. இதன் காரணமாக உலகின் பல நாடுகள் இவி வாகனங்களை வாங்க ஊக்குவிக்கின்றன.

இந்தியாவிலும் கூட கடந்த மாதம் வரை இவி வாகனங்களை வாங்க வரி விலக்கு, சலுகைகள், நிதி உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. இது போக காற்று மாசை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஐநா பல நாடுகளுக்கு உத்தரவிட்டு உள்ளது. அதற்கு இவி வாகனங்கள் முக்கிய கருவியாக பார்க்கப்படுகிறது.

இதெல்லாம் போக மத்திய கிழக்கு நாடுகளில் கச்சா எண்ணெய் காலியாக தொடங்கி உள்ளது. உலக அளவில் பெட்ரோல் டீசல் விலை உச்சம் அடைந்து உள்ளது. ரஷ்யாவின் எண்ணெய்யை உலக நாடுகள் பல வாங்குவது இல்லை. இதெல்லாம் போக இவி வாகனங்களால் ஏற்படும் செலவு குறைவு. அதுதான் இப்போது டிரெண்டும் கூட. இப்படி பல காரணங்களால் இவி வாகனங்கள் அதிகம் விற்கப்படுகிறது.

தற்போது அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்ட் டிரம்ப் மீண்டும் கச்சா எண்ணெய் வர்த்தகம், பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளார். பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. இந்த உடன்படிக்கையில் பிடன் கையெழுத்திட்ட காரணத்தால் அமெரிக்காவில் பல இடங்களில் சிஎன்ஜி எடுக்க தடை விதிக்கப்பட்டது. அதேபோல் கச்சா எண்ணெய் இறக்குமதி, ஏற்றுமதியும் குறைக்கப்பட்டது. இதற்கு பதிலாக இவி வாகனங்கள் களமிறக்கப்பட்டன.

ஆனால் டிரம்ப் இது இரண்டையும் நிராகரித்து உள்ளார். டிரம்ப் உத்தரவின் பெயரில் பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. அதோடு கச்சா எண்ணெய், சிஎன்ஜி ஆலைகளை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதோடு சிஎன்ஜி எடுக்க ஊக்குவிக்கப்படும், ஏற்கனவே மூடப்பட்ட கிணறுகள், ஆலைகளை அரசு மீண்டும் திறக்கும் என்று கூறி உள்ளார்.

விவகாரமான முடிவு 2:

அந்த வகையில்தான் மீண்டும் பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்பாட்டை கொண்டு வர முடிவு செய்துள்ளார். அதேபோல் அமெரிக்காவில் பிளாஸ்டிக் பயன்பாட்டை மீண்டும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவில் இதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கான கட்டுப்பாடுகள் வரும் நாட்களில் குறைக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+