டிரம்ப் முடிவால்.. இந்தியாவில் உள்ள ஐடி ஊழியர்களுக்கு பெரிய சிக்கல்? TCS, Infosys முக்கிய முடிவு?
நியூயார்க்: அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் எடுத்த இரண்டு முடிவால் இந்தியாவில் உள்ள ஐடி ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் விசா கட்டுப்பாடுகள் தீவிரம் ஆகி உள்ளன. இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதனால் இந்தியர்கள் அங்கே ஆன்சைட் வேலைகளுக்கு செல்வது சிக்கலாகி உள்ளது.
டிரம்ப் விசா
எச்.1 பி விசா உள்ளிட்ட விசாவின் ரினீவல் காலத்தை குறைத்து டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார். அங்கே வேலை அனுமதி வாங்கி விசா பெற்று பணியாற்றுபவர்களின் விசா காலாவதியாகிவிட்டால்.. 540 நாட்களுக்குள் அதை புதுப்பிக்க வேண்டும்.

அதுவரை தானாகவே அந்த விசா செயல்பட தொடங்கி விடும். எச்.1 பி விசா உள்ளிட்ட விசாவின் ரினீவல் காலத்தை குறைத்து டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார். இதை 180 நாட்களாக டிரம்ப் குறைத்துள்ளார். அங்கே வேலை அனுமதி வாங்கி விசா பெற்று பணியாற்றுபவர்களின் விசா காலாவதியாகிவிட்டால் இனிமேல் 180 நாட்களுக்குள் அதை புதுப்பிக்க வேண்டும் என்று டிரம்ப் புதிய விதி கொண்டு வந்துள்ளார். இதனால் அங்கே விசா பெறுவது கடினம் ஆகி உள்ளது.
டிரம்ப் வரி
இரண்டாவதாக.. என்ன நடந்தாலும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது பதில் வரி விதிக்காமல் விட மாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வரி தொல்லையில் இருந்து அமெரிக்காவை விடுவிக்காமல் விட மாட்டேன். கண்டிப்பாக வரி தொல்லையில் இருந்து அமெரிக்காவை விடுவிப்பேன்.
அமெரிக்கா மீது கூடுதல் வரி விதிக்கும் நாடுகள் மீது நாங்களும் வரி விதைப்போம். ஏப்ரல் 2 வரைதான் டைம். அதற்குள் வரியை குறைக்காத நாடுகள் மீது நாங்கள் கண்டிப்பாக கடுமையான வரிகளை விதைப்போம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் கணித்து உள்ளது. Reciprocal tariffs என்று அழைக்கப்படும் பரஸ்பர கட்டணங்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இதன் மூலம் இந்தியா நேரடியாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐடி ஊழியர்களுக்கு சிக்கல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி மற்றும் கடுமையான விசா குடியேற்றக் கொள்கைகள் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களை பாதிக்கலாம் என்று மூடிஸ் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. இவை நேரடியாக ஐடி துறையை பாதிக்கவில்லை என்றாலும் மறைமுகமாக பாதிக்கும்.
அதாவது அமெரிக்க குடியேற்ற விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்ட இந்திய ஊழியர்களை நம்பியிருக்கும் IT நிறுவனங்கள் சவால்களை சந்திக்கும். கடுமையான குடியேற்றக் கொள்கைகள் காரணமாக இந்தியர்கள் ஆன்சைட் போக முடியாத நிலை ஏற்படும்.
இதை நிவர்த்தி செய்ய, TCS மற்றும் Infosys போன்ற நிறுவனங்கள் இந்தியர்களை ஆன்சைட் அனுப்பாமல் அமெரிக்காவிலேயே ஊழியர்களை பணிக்கு எடுக்கும் திட்டத்தில் உள்ளதாம். அதாவது விசா பிரச்சனைகளை சமாளிக்க TCS மற்றும் Infosys போன்ற நிறுவனங்கள் இந்தியர்களை ஆன்சைட் அனுப்பாமல் நிறுத்தலாம். அமெரிக்காவிலேயே உள்ளவர்களை பணிக்கு எடுக்கலாம் என்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications