பல லட்சம் கோடி பஸ்பம் ஆகும்.. இந்தியாவின் ஐடி துறையையே.. அழிக்க பார்க்கும் டிரம்ப்.. பெரிய திட்டம்
சென்னை: அமெரிக்காவில் தயாராகி வரும் புதிய சட்டம் இந்திய ஐடி துறைக்கு ஒரு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளுக்கு வேலைகளை அவுட்சோர்ஸ் செய்யும் நிறுவனங்களுக்குக் கூடுதல் வரி விதிக்கும் இந்தச் சட்டம், இந்திய ஐடி சேவைத் துறையின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கலாம்.
அமெரிக்காவில் வலதுசாரி கருத்துடைய விமர்சகர்கள், இந்தியாவுக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் கடுமையான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். வர்த்தகப் பதற்றங்கள் மற்றும் குடிவரவு போன்றவற்றை மையப்படுத்தி இந்த விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

இந்தியத் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் "கால் சென்டர்களை" குறிவைத்து விமர்சனங்களை முன்வைத்துள்ளன. அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் கால் சென்டர்களை திறக்க அனுமதிக்க கூடாது. அதோடு அவர்களின் ஐடி ஏற்றுமதிக்கு கடும் வரி விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வைக்க தொடங்கி உள்ளனர். இந்தியாவின் ஐடி துறை ஏற்றுமதிகளுக்கு கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இந்தியா அமெரிக்கா மோதல்
அமெரிக்கா இந்திய ஏற்றுமதிகளுக்கு அதிக வரி விதித்த பிறகு, தற்போது அதன் தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் மீது வரி விதிக்க பரிசீலித்து வருகிறது. வெளிநாட்டு ரிமோட் பணியாளர்களுக்கு வரி விதிக்கும் இச்செயல், இந்தியாவின் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முக்கியமான H-1B விசா திட்டத்தின் மீதான கடுமையான நடவடிக்கைகளுக்கு மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் உலகளாவிய நிலைக்கு மையமான ஒரு துறையை அச்சுறுத்துவதாக உள்ளது.
இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், இந்திய ஐடி நிறுவனங்களின் மிகப்பெரிய பலங்களாகக் கருதப்படும் ஆர்டர் வரத்து மற்றும் விலை பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்க நிறுவனங்கள் இந்திய ஐடி நிறுவனங்களின் முக்கிய வாடிக்கையாளர்களாக இருப்பதால், இது ஒப்பந்தங்கள் கிடைப்பதைத் தாமதப்படுத்தலாம்.
இந்திய ஐடி நிறுவனங்கள்
குடியரசுக் கட்சியால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா இன்னும் சட்டமாகவில்லை. எனினும், அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் தொழில்நுட்ப பட்ஜெட்டை மறுபரிசீலனை செய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பை இது உருவாக்கியுள்ளது. ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள் நீக்கப்படும் வாய்ப்புகள் இதனால் ஏற்படுகின்றன.
இந்தியர்களுக்கு எச்சரிக்கை
இந்தக் கருத்துகளை டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளரும், டேர்னிங் பாயிண்ட் USA நிறுவனருமான சார்லி கிர்க் உடனடியாக வழிமொழிந்துள்ளார். இந்திய நிபுணர்கள் அமெரிக்கத் தொழிலாளர்களின் இடத்தைப் பிடித்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 2024 அமெரிக்கத் தேர்தலில் இந்திய-அமெரிக்க வாக்காளர்கள் கணிசமான அளவில் குடியரசுக் கட்சிக்கு ஆதரவளித்தனர். அவர்களுக்கு டிரம்பிற்கு ஆதரவு தருவது இல்லை. இதனால் டிரம்ப் அவர்களுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்க தொடங்கி உள்ளன.
தீவிர வலதுசாரி விமர்சகர் ஜாக் போசோபியெக், இந்தியாவின் அவுட்சோர்சிங் தொழில்துறையில் ஆதிக்கம் செலுத்தும் துறைகளுக்கு பெரும் வரிகளை விதிக்கக் கோரினார். "கால் சென்டர்களுக்கு வரி போடுங்கள். எல்லாவற்றுக்கும். அனைத்து வெளிநாட்டு கால் சென்டர்களுக்கும் வெளிநாட்டு ரிமோட் தொழிலாளர்களுக்கும் 100% வரி விதிக்கவும்," என்று அவர் இரண்டு தனித்தனிப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் வலதுசாரி கருத்துடைய விமர்சகர்கள், இந்தியாவுக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் கடுமையான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். வர்த்தகப் பதற்றங்கள் மற்றும் குடிவரவு போன்றவற்றை மையப்படுத்தி இந்த விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
இந்தியா ஐடி துறை டிரம்ப்
டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் மீது வரி விதிக்க பரிசீலித்து வருகிறது. இந்தியப் பொருட்களின் மீது கடும் கட்டணங்களை விதித்த பிறகு, அமெரிக்கா தகவல் தொழில்நுட்ப சேவைகள், வெளிநாட்டு ரிமோட் பணியாளர்கள் மற்றும் அவுட்சோர்சிங் வணிக செயல்முறைகள் மீது வரி விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் பொருளாதாரத்தை, ஐடி துறையை பெரிய அளவில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
ஐடி துறை பாதிக்கும்
இந்த புதிய வரி விதிப்பு, H-1B விசா அமைப்பை மாற்றியமைக்கும் திட்டங்கள் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள், தற்காலிக விசா பணியாளர்கள் அனுப்பும் பணம் மீதான அதிகரித்த வரி விதிப்பு ஆகியவற்றுடன் இணைந்து, இந்திய பொறியாளர்கள் மற்றும் மாணவர்களை பாதிக்கக்கூடும். இவர்கள் சிலிக்கான் வேலி மற்றும் அமெரிக்காவில் உள்ள ITES துறையை ஆதரிக்கின்றனர். ஏற்கனவே இந்தியாவின் டாப் ஐடி நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் ஆகியவை கடுமையான வருவாய் இழப்பை சந்தித்துள்ளன. உலக அளவில் வர்த்தக போர் காரணமாக பொருளாதாரம் சார்ந்துள்ள நிலையில் இந்தியாவின் ஐடி நிறுவனங்களும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது.












Click it and Unblock the Notifications