34 லட்சம் கார்கள் போச்சே.. திடீர் திடீர்னு எரியுதாம்,புகையுதாம்! ஹூண்டாய், கியாவுக்கு பல கோடி இழப்பு
நியூயார்க்: அமெரிக்காவில் ஹூண்டாய் மற்றும் கியா கார் நிறுவனங்களின் எஸ்யுவி வகை கார்கள் திடீரென தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் அரங்கேறியுள்ள நிலையில், சுமார் 34 லட்சம் கார்களை திரும்பப் பெறுவதாக இரண்டு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
நீண்ட தூரம் பயணிப்பதற்கும், பாதுகாப்பான பயணத்திற்காகதான் பலரும் கார்களை வாங்குகிறார்கள். இப்படி இருக்கையில் காரை ஓட்டிக்கொண்டிருக்கும்போதே திடீரென அதன் என்ஜினிலிருந்து புகை கிளம்பி சாலையை மறைத்துவிட்டால் என்ன ஆகும்? அப்படியான சம்பவங்கள்தான் அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. அதுவும் குறிப்பாக ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் எஸ்யுவி வகை கார்களிலில்தான் இந்த பிரச்னை மேலெழுந்திருக்கிறது. கொஞ்ச நேரம் கழித்து இந்த கார்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன.

இது தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்த நிலையில், கடந்த 2010ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை விற்பனை செய்யப்பட்ட எஸ்யுவி வகை கார்களை சரி செய்து கொடுக்க திரும்பப் பெற்றுக்கொள்வதாக இந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இது குறித்து அந்நாட்டின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆன்டி-லாக் பிரேக் கட்டுப்பாட்டு அம்சத்தில் திரவ கசிவு ஏற்படுகிறது. இதன் காரணமாக மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்படுகிறது" என கூறியிருந்தது.
ஓடிக்கொண்டிருக்கும் கார்கள் மட்டுமன்றி வெறுமென பார்க்கிங் செய்து வைத்திருக்கும் கார்களிலும் இந்த பிரச்னை இருப்பதாகவும் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் கூறியிருந்தது. எனவே இந்த கார்களில் உள்ள பிரச்னைகளை சரி செய்யும் வரை வீட்டிற்குள் இருக்கும் ஷெட்களில் இதனை பார்க் செய்ய வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது. இந்த தொடர் புகார்களையடுத்து இலவசமாக ஆன்டி-லாக் பிரேக் ஃப்யூஸை மாற்றி தருவதாக ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன.
இது குறித்து ஹூண்டாய் நிறுவனம் கூறுகையில், "எங்களது எஸ்யுவி டைப் கார்களில் சுமார் 21 கார்கள் திடிரேன தீப்படிற்றி எரிந்திருக்கின்றன. 22 கார்களில் புகை கசிந்திருக்கிறது. இதன் காரணமாக என்ஜின் பகுதியில் உள்ள பாகங்களும் உருகியுள்ளன. எனவே சம்பந்தப்பட்ட பிரச்னையை நாங்கள் சரி செய்து தர முன்வந்திருக்கிறோம். இந்த பிரச்னை சரி செய்த பிறகு இயல்பாக கார்களை பயன்படுத்தலாம். பின்னர் எந்த பிரச்னையும் ஏற்படாது" என்று கூறியுள்ளது.
அதேபோல கியா ஆட்டோமொபைல் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் நிறுவனத்தை சேர்ந்த 10 கார்கள் இதே பிரச்னை காரணமாக தீப்பிடித்து எரிந்துள்ளன என்று கூறியுள்ளது. பிரேக் திரவத்தில் ஈரப்பதம் மற்றும் அழுக்கு சேர்வதால் இந்த திரவம் உருகுகிறது இதுவு கார் தீப்பிடிக்க முக்கிய காரணம். இவ்வாறு திரவம் கசிவதால் ஆன்டிலாக் பிரேக் மோட்டார் ஷாஃப்ட்டில் உள்ள O-ரிங் காலப்போக்கில் சீல் வலிமையை இழக்க வைக்கிறது. இங்கு ஷாட் சர்க்யூட் ஆகி தீப்பற்றி எரிகிறது.
என்னதான் ஹூண்டாய் மற்றும் கியா கார் நிறுவனங்கள் தங்களது 34 லட்சம் எஸ்யுவிக்களை திரும்பப் பெற்றுக்கொண்டு சரி செய்து கொடுப்பதாக அறிவித்திருந்தாலும், பல்வேறு தரப்பினரும் இந்த நிறுவனங்களின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். "தீ பிடிக்கும் பிரச்னை இருப்பதாக தொடர் புகார்கள் எழுப்பப்பட்ட பின்னரும் கூட இதனை திரும்ப பெறுவதற்கு ஏன் இவ்வளவு தாமதாம் ஆனது? தற்போது இந்த பிரச்னையை இலவசமாக சரி செய்தவதாக நிறுவனங்கள் கூறியுள்ளன. ஆனால் மீண்டும் இதே போன்ற பிரச்னை எழுவதற்கு வாய்ப்புள்ளது" என்று விமர்சித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications