நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகம் முழுவதும் வறுமையையும் போக்க நான் ரெடி.. ஆனால்.. எலான் மாஸ்க் பரபரப்பு சவால்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: மொத்த உலக வறுமையையும் ஒழிக்க நான் ரெடி.. ஆனால் ஒரு கண்டிஷன் என்று உலகின் நம்பர் 1 பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் ட்வீட் சவால் விட்டுள்ளார்.

மனித குல வரலாற்றில் இதுவரை யாரிடமும் இல்லாத அளவிற்கு அதிக சொத்து படைத்த நபராக எலான் மஸ்க் உருவெடுத்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 335 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. மனித குல வரலாற்றில் இதற்கு முன் யாரிடமும் இவ்வளவு சொத்து இருந்தது கிடையாது.

பெரும் கோடிஸ்வரர்களில் ஒருவரான வாரன் பப்பெட் கடந்த 90 ஆண்டுகளில் உருவாக்கிய சொத்துக்களை இவர் வெறும் 90 நாட்களில் உருவாக்கி அசத்தி இருக்கிறார். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன பங்குகள் விண்ணை தொட்ட நிலையில் இவரின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த டிஎஸ்பி ஜெயராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி ரெய்டுபொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த டிஎஸ்பி ஜெயராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி ரெய்டு

மதிப்பு

மதிப்பு

பிஎம்டபிள்யு, ரிலையன்ஸ் போன்ற பல தனி பெரு நிறுவனங்களின் கூட்டு சொத்து மதிப்பை விட இவரிடம் அதிக அளவு சொத்து இருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இவர் 24 பில்லியன் டாலர் சொத்துக்களை சேர்த்து இருக்கிறார். 10வது இடத்தில் உள்ள வாரன் பப்பெட் சொத்து மதிப்பு 104 பில்லியன் டாலர். அதைவிட மூன்று மடங்கு சொத்து எலான் மஸ்க்கிடம் உள்ளது.

டெஸ்லா

டெஸ்லா

முக்கியமாக இவரின் டெஸ்லா பங்குகள் புதிய உச்சம் தொட்டுள்ளது. நேற்று மட்டும் இவரின் டெஸ்லா பங்குகள் 8.5 சதவிகிதம் உயர்ந்தது. இரண்டாவது இடத்தில் இருக்கும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஃசோஸை விட இவர் இரண்டு மடங்கு அதிக சொத்து வைத்துள்ளார். ஜெஃப்பிடம் 143 பில்லியன் டாலர் சொத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐநா

ஐநா

இந்த நிலையில் ஐநாவின் World Food Programme எனப்படும் வறுமை மற்றும் பட்டினி ஒழிப்பு அமைப்பின் தலைவர் டேவிட் பெஸ்லி எலான் மஸ்கிற்கு முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்து இருந்தார். அதில், எலான் நினைத்தால் உலக வறுமையை எளிதாக போக்க முடியும். அவரின் 2% சதவிகித சொத்து இதற்கு போதும். உலகின் பட்டினியை எலான் வெறும் 6 பில்லியன் டாலர் கொடுத்து சரி செய்ய முடியும்.

பணக்காரர்கள்

பணக்காரர்கள்

உலக பணக்காரர்கள் இதற்காக களமிறங்க வேண்டும் என்று டேவிட் பெஸ்லி குறிப்பிட்டு இருந்தார். அதோடு ஜெஃப் பெஸோஸிடம் இதே கோரிக்கையை டேவிட் பெஸ்லி வைத்து இருந்தார். இதற்கு எலான் தற்போது பதில் அளித்துள்ளார். அதில், உலக பட்டினியை ஒழிக்க நான் ரெடி. இந்த ட்வீட்டர் பின்னூட்டத்தில் உலக பட்டினியை எப்படி ஒழிப்பார்கள் என்று விளக்கம் அளிக்கட்டும்.

ஐநா

ஐநா

6 பில்லியன் டாலரை வைத்து ஐநாவின் World Food Programme எப்படி பட்டினியை ஒழிக்கும் என்று விளக்கம் அளிக்கட்டும். நான் உடனே என்னுடைய டெஸ்லா பங்குகளை விற்று உங்களுக்கு பணம் தருகிறேன். ஆனால் இதற்கான கணக்கு வழக்கு வெளிப்படையானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் எல்லோரும் கணக்கு வழக்குகளை பார்க்கக் முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Elon Musk's Open Challenge to UN: Elon Musk says he will sell $6 billion worth of Tesla stock and donate it to the United Nations’ food agency if it could show how the money would solve world hunger.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X