புதின் தப்புவாரா? ரஷ்யா தலைநகரை தாக்க முடியுமா? உக்ரைன் கைக்கு போகும் மிசைல்! டீல் பேசிய டிரம்ப்
நியூயார்க்: உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது. இந்நிலையில் தான் அமெரிக்காவின் நீண்டதூர ஏவுகணையை பயன்படுத்தி ரஷ்யா தலைநகர் மாஸ்கோவை தாக்க முடியுமா? என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியிடம், டொனால்ட் டிரம்ப் கேட்டுள்ளார். இதன்மூலம் ரஷ்யாவின் முக்கிய இடங்களை உக்ரைன் மூலம் தாக்க டிரம்ப் திட்டமிட்டு வரும் நிலையில் அதில் தப்பிப்பாரா விளாடிமிர் புதின் என்ற கேள்வி எழுந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது. இந்த போர் கடந்த 3 ஆண்டுகளை கடந்து நடந்து வருகிறது. போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சி எடுத்தார். இருநாடுகளின் பிரதிநிதிகளுடனும் அமெரிக்கா தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து பேசினார். அதேபோல் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உள்ளிட்டவர்கள் ரஷ்யாவின் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஆனால் இன்னும் போர் நிறுத்தம் வரவில்லை. ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீது கடும் கோபமடைந்துள்ளார். இதனால் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவை தாக்க முடியுமா? என்று அவர் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியிடம் கேட்டுள்ளார்.
அதாவது கடந்த 4ம் தேதி டொனால்ட் டிரம்ப் - விளாடிமிர் ஜெலன்கி ஆகியோர் தொலைபேசியில் உரையாடினர். அப்போது டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவின் முக்கிய இடங்களை குறிவைத்து தாக்க வேண்டும். குறிப்பாக தலைநகர் மாஸ்கோ உள்பட ரஷ்யாவின் உள்பகுதியில் தாக்குதல் நடத்த வேண்டும். அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தி இந்த தாக்குதல்களை நடத்த முடியுமா? என்று கேட்டுள்ளார். இது ரஷ்யாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், டொனால்ட் டிரம்ப் அவ்வப்போது தொலைபேசியில் பேசி வருகிறார். ஆனால் புதின் போரை நிறுத்த இழுத்தடிக்கிறார். இதனால் அவர் மீது டிரம்ப் கோபமாகி உள்ள நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் ரஷ்யாவின் உள்பகுதிகளை குறிவைத்து தாக்க முடியுமா? என்று கேட்டுள்ளார். மேலும் தற்போது அமெரிக்காவின் தயாரிப்பான ATACMS ஏவுகணையை உக்ரைனுக்கு வழங்க அந்த நாடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நடவடிக்கைகள் ரஷ்யா மற்றும் அதன் அதிபர் விளாடிமிர் புதினுக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது. அமெரிக்கா வைக்கும் குறியில் உக்ரைன் சிக்கி, அந்த நாடு ரஷ்யாவை தாக்குமா? அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போடும் திட்டத்தில் ரஷ்யா அதிபர் தப்பிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒருவேளை அமெரிக்கா ஆயுதத்தால் உக்ரைன் ரஷ்யா தலைநகர் மாஸ்கோ மீது தாக்குதல் நடத்தும் பட்சத்தில் இந்த போர் இன்னும் வீரியமாக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications