போர் கைமீறி போகுதே! உள்ளே புகுந்த சீனா! கண்கள் சிவந்த ஜீ ஜின்பிங்! அரண்டு பார்த்த இஸ்ரேல், அமெரிக்கா
நியூயார்க்: இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரத்தில் தற்போது சீனா மூக்கை நுழைத்து உள்ளது. சீனா இந்த போர் பற்றி தெரிவித்து இருக்கும் கருத்துக்கள் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான மோதல் உச்சம் அடைந்துள்ளது. காஸாவை சேர்ந்த ஹெஸ்புல்லா இயக்கம் நடத்திய இஸ்ரேல் மீதான தாக்குதல் காரணமாக தற்போது போர் உச்சம் அடைந்து உள்ளது. இந்த மோதல் தற்போது உலகப்போராக உருவெடுக்குமோ என்ற அச்சமும் கூட எழுந்துள்ளது. அதற்கு காரணம் ஏற்கனவே இந்த விவகாரத்தில் ஹெஸ்புல்லா, ஈரான், லெபனான், அமெரிக்கா களமிறங்கி உள்ளது.
அமெரிக்கா இங்கே போர் கப்பல்களை அனுப்ப உள்ளது. அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான USS Gerald R. Ford தலைமையிலான குழு இஸ்ரேலுக்குச் சென்று கொண்டிருக்கிறது. இதுவே உலகின் மிகப்பெரிய விமான தாங்கி போர் கப்பல் ஆகும். அமெரிக்காவின் வலிமையான போர் ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களும் இதில் உள்ளன. இதனால் இந்தப் போர் நீண்ட காலம் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்கா - இஸ்ரேல் vs பாலஸ்தீனம்,ஹமாஸ் , ஈரான், லெபனான், எகிப்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான போராக இது நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் இதில் ரஷ்யா, சீனா இணையலாம். ஏற்கனவே உக்ரைன் - ரஷ்ய போரில் உலக நாடுகள் பிரிந்து கிடக்கின்றன. அமெரிக்கா உள்ளே வருவதால் தற்போது இதில் சீனாவும் கருத்து தெரிவித்துள்ளது.

சீனா கருத்து: இந்த நிலையில் போரில் ஹமாஸ் படைக்கு ஆதரவாக சீனா பேச தொடங்கி உள்ளது. முதல்முறையாக நேரடியாக இதில் சீனா கருத்து சொல்லி உள்ளது. அதன்படி, பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே தற்போது அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் வன்முறைகள் குறித்து சீனா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினர் அமைதியாக இருக்கவும், நிதானத்தை கடைப்பிடிக்கவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும், நிலைமை மேலும் மோசமடைவதைத் தவிர்க்கவும் விரோதப் போக்கை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
( 3 பக்கத்தில் இருந்தும் வரப்போகிறோம்! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் பகிரங்க வார்னிங்! போரில் திருப்பம்)
கண்டிக்க முடியாது: அதே சமயம் இதில் நாங்கள் யாரையும் கண்டிக்க முடியாது. இந்த மோதலில் இருந்து வெளியேறுவதற்கான அடிப்படை வழி, இரு நாடுகள் தீர்வை நடைமுறைப்படுத்து வேண்டும், பாலஸ்தீனத்தின் சுதந்திர நாட்டை தனியாக நிறுவ வேண்டும். அவர்களுக்கு தனி நாடு வேண்டும். ஹமாஸ் இயக்கத்தை நாங்கள் எதிர்க்க முடியாது. ஹமாஸ் அமைப்பிற்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்க முடியாது.

ஆனால் அதே சமயம் பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதலில், சீனா எப்போதும் சமத்துவம் மற்றும் நீதியின் பக்கம் உள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்கும் ஒரு நண்பன் என்ற முறையில், இரு நாடுகளும் அமைதியுடன் வாழ்வதைக் காண நாங்கள் எதிர்பார்க்கிறோம். இரண்டு நாடுகளும் மோதலை நிறுத்த வேண்டும். அமைதியை நிலைநாட்ட வேண்டும் . இதில் வேறு விதமாக கருத்து சொல்ல நாங்கள் விரும்பவில்லை. உடனடியாக இரு நாடுகள் தீர்வை நடைமுறைப்படுத்து வேண்டும். அதாவது இஸ்ரேல் தனி நாடு இருப்பது போல பாலஸ்தீனத்தின் சுதந்திர நாட்டை தனியாக நிறுவ வேண்டும்., என்று சீனா கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications