3 பக்கத்தில் இருந்தும் வரப்போகிறோம்! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் பகிரங்க வார்னிங்! போரில் திருப்பம்
நியூயார்க்: இஸ்ரேல் - பாலத்தீன போரில் தங்கள் நாடு தாக்கப்பட்டால் அதற்கு கடுமையான பதிலடி கொடுப்போம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - பாலத்தீன போர் தற்போது சர்வதேச போராக உருவெடுத்து வருகிறது. முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் மிகப்பெரிய போராக மாறும் நிலை ஏற்பட்டு உள்ளது. இஸ்ரேல் - பாலத்தீன ஆக்கிரமிப்பு பிரச்சனையில் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

இதில் தற்போது மறைமுகமாக சவுதி - ஈரான் உள்ளிட்ட நாடுகளின் தலையீடும் தொடங்கி உள்ளது. ஒரு பக்கம் சவுதி - இஸ்ரேல் இடையே பொருளாதார ஒப்பந்தம் நடக்கப்பட உள்ளது. இதை மத்திய கிழக்கு நாடுகள் எகிப்து, ஈரான் போன்றவை விரும்பவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு இடையே தற்போது இஸ்லாமியர்களின் பாலஸ்தீனத்தை இஸ்ரேல் தாக்கி வருகிறது.
இதனால் மேற்கொண்டு ஒப்பந்தத்தை முன்கொண்டு செல்வதில் சவுதிக்கு பெரிய நெருக்கடி உள்ளது. இன்னொரு பக்கம் ஹமாஸ் இயக்கத்திற்கு ரகசியமாக உதவி செய்வதே ஈரான்தான் என்ற புகாரும் உள்ளது. அதன்படி ஹமாஸ் இயக்கத்திற்கு ஆயுதங்கள், உளவு தகவல்கள், இந்த மோதலுக்கு திட்டம் போட்டு கொடுத்ததே ஈரான்தான் என்றும் அமெரிக்கா குற்றச்சாட்டு வைக்கிறது.
எச்சரிக்கை: இதனால் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு பின் வேறு ஒரு முக்கியமான காரணமும் உள்ளது. ஹிஸ்புல்லா, ஹிஸ்பெல்லா என்று பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இயக்கம் லெபனானில் ஹெஸ்புல்லா என்ற பெயரில் இயங்கி வருகிறது
லெபனானில் ஆயுதப்படை குழுவாகவும், அரசியல் கட்சியாகவும் இந்த ஹெஸ்புல்லா இயங்கி வருகிறது. ஷியா பிரிவு இயக்கமான இது , அந்நாட்டு அரசுக்கு மிகவும் நெருக்கமானது. அதேபோல் ஈரான் போன்ற மற்ற ஷியா நாடுகளுக்கும் நெருக்கமாக இருக்கிறது. இந்த அமைப்புதான் சிரியாவில் அரசுக்கு ஆதரவாகவும் இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராகவும் போராடி வருகிறது. அதேபோல் ஈரான் உடன் இணைந்து லெபனானில் இஸ்ரேல் ஆதிக்கத்தை தடுக்க போராடி வருகிறது.

சிரியா போர், லெபனான் போர் 2008 என்ற பல்வேறு போர்களில் ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல், அமெரிக்காவிற்கு எதிராக போராடி இருக்கிறது. இந்த நிலையில்தான் தற்போது இவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ஈரான் ஆதரவு கொடுப்பதால்.. இதற்கு பின் ஈரானும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஈரான் எச்சரிக்கை: இதன் காரணமாகவே ஈரான் மீது ஆக்சன் எடுப்போம்.. அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில்தான் அமெரிக்காவிற்கு ஈரான் பதில் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதற்கு நாங்கள் 3 வகைகளில் பதிலடி கொடுப்போம். நேரடியாக இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்துவோம்.
ஏமன், ஈரான், லெபனானில் இருக்கும் எங்களிம் ஆதரவு படையான ஹெஸ்புல்லா மூலம் நேரடியாக தாக்குதல் நடத்துவோம். மூன்றாவது சிரியாவில் இருந்தும் நாங்கள் படைகளை அனுப்பி தாக்குதல் நடத்துவோம் மறக்க வேண்டாம். நாங்கள் 3 பக்கங்களில் இருந்தும் மாறி மாறி தாக்குவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications