மோடி அமெரிக்கா போயும்.. இப்படி ஆயிடுச்சே! சொதப்பிவிட்ட டொனால்ட் டிரம்ப்! இந்தியாவுக்கு சிக்கல்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் டிரம்ப்பை, பிரதமர் மோடி சந்திருந்தார். இந்த சந்திப்பு மூலம் வரி விஷயத்தில் இந்தியாவுக்கு சில சலுகைகள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

இந்தியாவில் அமெரிக்க பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு அமெரிக்காவில் இந்திய பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

US Donald Trump

மோடியை பக்கத்தில் வைத்துக்கொண்டு பேசிய டிரம்ப், "எங்கள் பொருட்களுக்கு இந்தியா 30, 40, 60 மற்றும் 70 சதவீத வரியை விதிக்கிறது, சில சந்தர்ப்பங்களில், வரி அதை விட அதிகமாகவும் உள்ளது. இந்தியாவுடன் எங்களின் வர்த்தக பற்றாக்குறை கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர்களாக உள்ளது. எனவே இந்த நீண்டகால ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய பிரதமர் மோடியும் நானும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளோம்.

பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் ஷார்ப்பாக இருப்போம். அதே நேரம், பொருளாதார உறவுகளை வலுப்படுத்தி, வர்த்தக உறவுகளில் சமத்துவத்தை கொண்டுவருவோம்" என்று பேசியிருக்கிறார்.

மோடி-டிரம்ப் சந்திப்பி8ல், F-35 விமானம், அணு சக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட விஷயங்களில் இந்தியாவுக்கு சில சாதகங்கள் இருந்தாலும், இந்த வரி விஷயத்தில் அமெரிக்கா நமது காலை வாரிவிட்டிருக்கிறது.

டிரம்ப் பேசியிருப்பது reciprocal tariffs எனும் பரஸ்பர வரி குறித்துதான். இது குறித்து சிம்பிளாக சொல்வதெனில், அமெரிக்க ஆப்பிளுக்கு இந்தியாவில் 5% வரி விதிக்கப்படுகிறது என்றால், இந்திய மாம்பழத்திற்கு அமெரிக்காவில் 5% வரி விதிக்கப்படும். அதாவது இரு நாடுகளுக்கும் சரிசமமான வரி என்பதைதான் reciprocal tariffs என்று சொல்லப்படுகிறது.

தற்போது இப்படியான வரிகள் இல்லை. அமெரிக்காவில் இந்திய பொருட்களுக்கு வரி குறைவு. குறிப்பாக ஜவுளி மற்றும் ஆடைக்கு 10-30% வரை வரி விதிக்கப்படுகிறது. அதேபோல எலக்ட்ரானிக் மற்றும் இயந்திரங்களுக்கு 0-5% மட்டுமே வரி விதிக்கப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி அதிகமாக இருக்கிறது. எலக்ட்ரானிக் மற்றும் இயந்திரங்களுக்கு 10-20% வரையும், ஆம்பரப்பொருட்களுக்கும், ஆட்டோமொபைல் பொருட்களுக்கும் 100%க்கும் அதிகமாகவும் வரி விதிக்கப்படுகிறது. இதைதான் டிரம்ப் எதிர்க்கிறார்.

ஆனால் இப்படியான மாறுபட்ட வரி மூலமாக இந்தியாவுக்கு லாபம் இருக்கிறது. மறுபுறும் அமெரிக்காவுக்கு நஷ்டம் கிடையாது. இந்தியாவை பொறுத்தவரை டாலர் தேவை அதிகம். எனவேதான் நாமும் அதிக வரியை விதிக்கிறோம். அமெரிக்காவுக்கு இந்த பிரச்சனையே கிடையாது. எனவே குறைந்த வரியை விதிக்கிறது.

இப்படி இருக்கையில் நாங்களும் இந்தியாவுக்கு சரிசமமாக வரியை விதிப்போம் என்று டிரம்ப் பேசியிருப்பது, நமது வர்த்தகத்தை காலி செய்துவிடும். டிரம்பின் கூடுதல் வரி காரணமாக இந்திய பொருட்களின் விலை அமெரிக்காவில் உயரும். எனவே அந்த ஊர் மக்கள் நமது தயாரிப்புகளை வாங்க மாட்டார்கள். இந்தியாவுக்கு லாபம் கடுமையாக குறைந்துவிடும். எனவேதான் நாம் reciprocal tariffsக்கு எதிராக இருக்கிறோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+