கிரேட் எஸ்கேப்.. டிரம்ப் விதிக்கும் வரியில் இருந்து தப்பிக்க.. மோடி போட்ட மாஸ்டர்பிளான்! என்ன ஆகும்?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டது. இதை காரணம் காட்டி அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பட்ஜெட்டில் புற்றுநோய் மற்றும் சில அரிதான நோய்களுக்கான மருந்துகள் உட்பட 36 உயிர்காக்கும் மருந்துகள் அடிப்படை சுங்க வரியிலிருந்து (BCD) முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், அவை விலை குறைந்துள்ளன. ஆறு முக்கியமான மருந்துகளுக்கு 5% வரி மட்டுமே விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கோபால்ட் மற்றும் லித்தியம்-அயன் பேட்டரி ஸ்கிராப் போன்ற முக்கியமான தாதுக்களின் வரியை அரசாங்கம் அகற்றியுள்ளது, இதனால் தொழிற்சாலைகள் இந்த பொருட்களை உள்நாட்டில் பெறுவது எளிதாகும். இதில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் விலை குறையும்.

donald trump

ஜவுளி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் இரண்டு புதிய வகை தறிகளுக்கு தற்போது வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அதன் விலை குறையும். இதனால் ஆடைகள் விலை குறையும். எல்இடி/எல்சிடி டிவிகள் மற்றும் மொபைல் போன் பேட்டரிகள் தயாரிப்பதற்கான உதிரிபாகங்களின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது அல்லது உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மொபைல் போன் பேட்டரி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரி மீதான வரி குறைக்கப்பட்டு உள்ளது. கைவினைப் பொருட்களுக்கான ஏற்றுமதி வரி நீக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது, இதனால் ஏற்றுமதியாளர்கள் சரக்குகளை எளிதாக அனுப்ப முடியும். கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்ப்புக்கான மூலப்பொருட்கள் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.மேற்கண்ட பொருட்களில் அமெரிக்காவின் பொருட்களும் அடங்கும்.

இதை காரணம் காட்டி அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இந்தியா மாஸ்டர் பிளான்:

அமெரிக்காவின் சமாளிக்க இந்தியா பின்வரும் அஸ்திரத்தை கையில் எடுக்க முடிவு செய்துள்ளதாம் . டாலர் வர்த்தகத்தை விட்டு மாற மாட்டோம் என்று இந்தியா மீண்டும் உறுதி அளிக்கும் என்கிறார்கள் . ஏற்கனவே டாலரில் வர்த்தகம் செய்யவே விரும்புவதாகவும்.. பிரிக்ஸ் கரன்சி கொண்டு வருவதில் ஆதரவு இல்லை என்று பிரிக்ஸ் நாடுகளுக்கு இந்தியா தகவல் அனுப்பி உள்ளதாம். அதிகாரபூர்வமற்ற ஆலோசனைகளில் பிரிக்ஸ் நாடுகளிடம் இந்தியா இந்த தகவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் பொருட்களுக்கான வரியை குறைக்க ஆலோசனை செய்து வருகிறதாம்.

ரசாயனங்கள் கொள்முதலை இந்தியா அமெரிக்காவிடம் இருந்து அதிகம் மேற்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து கூடுதல் பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளதாம். சோயாபீன், பால், வாகனங்கள், மருத்துவ கருவிகள் மற்றும் விமானங்கள், எலக்ட்ரானிக்ஸ், ஹைடெக் இயந்திரங்கள், ஜவுளி உள்ளிட்ட துறைகளில் அமெரிக்காவிடமிருந்து அதிகமான பொருட்களை வாங்குவது குறித்து இந்தியா பரிசீலிக்கலாம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த வாரம் புதிய வரி விதிப்பு தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாடு அமெரிக்கா மீது விதிக்கும் வரிகளின் அதே அளவில் பரஸ்பர வரிகளை அல்லது அதைவிட அதிக வரிகளை விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். வாஷிங்டன் டி.சிக்கு அவர் செல்வதற்கு முன் டிரம்ப் இது தொடர்பான முடிவை வெளியிடுவார். இந்தியா மீதும் இதில் வரி விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+