Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாப்பாடு + 100 டாலர்.. அமெரிக்காவில் வேலையின்றி புலம்பும் இந்திய தொழிலாளர்கள்.. அதிர்ச்சி சம்பவம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: தொழில்நுட்ப துறையில் கணிசமான அளவில் வேலையிழப்பு நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்காவில் H-1B விசாவில் தங்கியுள்ள இந்தியர்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அவர்களுக்கு 60 நாட்களுக்குள் வேலை கிடைக்கவில்லையெனில் அமெரிக்காவில் தங்க முடியாது.

கொரோனா ஏற்படுத்திய சுகாதாரம் மற்றும் பொருளாதார நெருக்கடி போன்றவற்றிலிருந்து மீண்ட மக்கள் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தங்களை ஆசுவாசப்படுத்தி வருகின்றனர். 2023ம் ஆண்டு உலகம் முழுவதும் புதிய உத்வேகம் ஏற்படும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் யாருக்கு இந்த ஆண்டு புதிய விடியலை ஏற்படுத்தியுள்ளதோ இல்லையோ, ஆனால் தொழில்நுட்ப துறையில் இருப்பவர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமேசான், கூகுள் என பெருநிறுவனங்கள் தொடங்கி சிறிய நிறுவனங்கள் வரை ஏராளமான தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர். அமெரிக்காவில் மட்டும் கடந்த நவம்பர் முதல் தற்போது வரை சுமார் 2 லட்சம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 30-40 சதவிகிதம் வரை இந்தியர்களாவார்கள். இவர்கள் H-1B விசாவில் அமெரிக்காவில் தங்கியுள்ளனர்.

அமெரிக்கா

அமெரிக்கா


அமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு இந்த விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை வைத்திருப்பவர்கள் அமெரிக்காவின் நிரந்தர குடிமகன் அல்ல. வேலை செய்யும் வரை குடிமகன். வேலை இல்லையெனில் உடனடியாக வெளியேறிவிட வேண்டும். அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 85 ஆயிரம் H-1B விசாவை வழங்குகிறது. தற்போது வரை சுமார் 9 லட்சம் பேர் இந்த விசாவை கொண்டு அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர். இதில்தான் 2 லட்சம் பேர் வேலையிழப்பை சந்தித்துள்ளனர். பொதுவாக இப்படியான வேலையிழப்பு ஏதாவது ஒரு நிறுவனத்தில்தான் நடக்கும். எனவே மற்ற நிறுவனத்தை ஊழியர்கள் தேடி சென்றுவிடுவார்கள். ஆனால் இம்முறை பல்வேறு நிறுவனங்களில் இதுபோன்று வேலையிழப்பு ஒரே நேரத்தில் நடைபெறுவதால் ஊழியர்கள் புதிய வேலைகளை தேடுவதில் சிக்கல் எழுந்திருக்கிறது.

நெருக்கடி

நெருக்கடி

இவ்வாறு H-1B விசாவில் வரும் இந்தியர்கள் அமெரிக்காவிலேயே நிரந்தரமாக தங்க முயற்சிகளை மேற்கொள்வார்கள். எனவே தங்கள் குழந்தைகளை அமெரிக்காவில் உள்ள பள்ளியில் படிக்க வைப்பார்கள். அப்படி கடந்த ஓராண்டு முன்னர் வந்த இளம்பெண் ஒருவர் தனது மகனை பள்ளியில் சேர்த்துள்ளார். தற்போது இவருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. 60 நாட்களுக்குள் வேலை கிடைக்கவில்லையெனில் அவர் தனது மகனுடன் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புவதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை. இப்படியான நெருக்கடி காரணமாக பலரும் இந்த விசா கால அவகாசத்தை கூடுதலாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளனர்.

 உதவி

உதவி

உலகளாவிய இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் (ஜிஐடிபிஆர்ஓ) மற்றும் இந்தியா மற்றும் இந்திய புலம்பெயர் ஆய்வுகளுக்கான அறக்கட்டளை (எஃப்ஐஐடிஎஸ்) போன்ற அமைப்புகள் வேலைவாய்ப்பு குறித்த செய்திகளை வேலையிழந்தவர்களுக்கு பகிர்ந்து வருகிறது. மட்டுமல்லாது வேலையில்லாமல் இருக்கும் 800 இளைஞர் சேர்ந்து புதுப்புது வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கியுள்ளனர். இதில் வேலைவாய்ப்பு குறித்த செய்திகளை பதிவேற்றம் செய்து வருகின்றனர். ஆனால் இவையனைத்தும் எந்த அளவுக்கு பயன்தரும் என்பது குறித்து தெரியவில்லை.

 புலம்பெயர் தொழிலாளர்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள்

தற்போது வரை மைக்ரோசாப்ட் 12,000 கூகுள் 12,000(சமீபத்தில்), அமேசான் 18,000 பேஸ்புக்கின் மெட்டா 11,000 பேரை இதுவரை பணியிலிருந்து தூக்கியிருக்கிறது. இது இத்துடன் நிற்கவில்லை. இதனை நம்பியிருந்த சிறு சிறு கம்பெனியையும் பாதித்திருக்கிறது. இது இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்தியா திரும்பி வரும் நேரம் என்று பலரும் கூறி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+