போர் முடிந்த மறுநாளே.. பென்டகன் சொன்ன சீக்ரெட்.. அப்படியே ஸ்டன் ஆன டிரம்ப்.. அப்போ ஈரான் அணுகுண்டு?
நியூயார்க்: அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றில், ஈரான் மீது டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் அந்நாட்டின் மூன்று அணு ஆயுத தளங்களையும் முழுமையாக அழிக்கவில்லை என்று கூறி உள்ளது. ஈரானின் அணு ஆயுத திட்டத்தை இந்த தாக்குதல் சில மாதங்கள் மட்டுமே தாமதப்படுத்தி இருக்கலாம் .. ஆனால் மொத்தமாக ஈரானின் அணு ஆயுத திட்டத்தை காலி செய்யவில்லை என்றும் நியூயார்க் டைம்ஸ் மற்றும் சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க பென்டகன் அறிக்கை
பென்டகன் கீழ் வரும் பாதுகாப்பு உளவுத்துறை அமைப்பால் (DIA) தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில், ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் ஆகிய இரண்டு முக்கிய அணு ஆயுத தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. DIA என்பது பென்டகனின் உளவுத்துறை பிரிவாகும். இது அமெரிக்க மத்திய கட்டளையுடன் இணைந்து செயல்பட்டு, அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை மத்திய கிழக்கில் மேற்பார்வையிடுகிறது. இந்த அமைப்பு, தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட்டது.

இருப்பினும், டிரம்ப் தனது கருத்தை மாற்றிக்கொள்ளாமல், மூன்று அணு ஆயுத தளங்களையும் அழித்ததாகக் கூறி உள்ளார். மேலும் நியூயார்க் டைம்ஸ் மற்றும் சிஎன்என் ஆகியவை "பொய்யான செய்திகளை" பரப்புவதாகவும் சாடினார். "ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன! டைம்ஸ் மற்றும் சிஎன்என் ஆகிய இரண்டு ஊடகங்களையும் மக்கள் விமர்சித்து வருகின்றனர்," என்று அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையும் இந்த அறிக்கையை மறுத்து உள்ளது. உளவுத்துறை அமைப்பில் உள்ள ஒரு கீழ்மட்ட ஊழியர் டிரம்ப்பை குறைத்து மதிப்பிடுவதற்காக இந்த அறிக்கையை கசியவிட்டுள்ளார் என்று தெரிவித்தது. ஊடக செயலாளர் கரோலின் லெவிட் தெரிவித்தார்.
மீண்டும் தொடங்க வாய்ப்பு
இந்த உளவுத்துறை அறிக்கையின்படி, யுரேனியத்தை செறிவூட்டப் பயன்படும் முக்கிய உபகரணங்களை ஈரான் சில மாதங்களில் மீண்டும் இயக்க முடியும். இதன் பொருள், ஈரான் எதிர்பார்த்ததை விட விரைவில் தனது அணு ஆயுத திட்டத்தை மீண்டும் தொடங்க முடியும்.
மேலும், அமெரிக்காவின் வான்வழி தாக்குதல்களுக்கு முன்னதாக ஈரான் 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட 400 கிலோ யுரேனியத்தை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஃபோர்டோ மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முன்பு எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், தளத்தின் நுழைவாயிலில் 16 சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன. இவை யுரேனியத்தை இரகசிய இடங்களுக்கு கொண்டு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஈரானின் அணு ஆயுத திட்டம் முழுமையாக அழிக்கப்பட்டது என்ற டிரம்ப்பின் கூற்றை இது மறுக்கிறது. தற்போது ஈரானிடம் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது. முன்பு 200 கிலோ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இருந்த ஒப்பந்தம் நீக்கப்பட்ட நிலையில் அணு ஆயுதம் செய்ய தயாரான தரத்தில் இருக்கும் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது.
ஈரான் இப்போது யுரேனியத்தை 60-70 சதவிகிதம் தூய்மைக்கு செறிவூட்டுகிறது, மேலும் செறிவூட்டப்பட்டால், அது அணு ஆயுதம் தயாரிக்க ஏதுவாகும். விரைவில் இதனால் ஈரான் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவும் முடியும். அவசரமாக தேவைப்பட்டால் உடனே அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்கவும் முடியும்.












Click it and Unblock the Notifications