எல்லாரையும் மன்னிச்சீங்க! உங்களை மன்னிக்க மறந்துடீங்க! பிடன் காதில் சொன்ன டிரம்ப் மகன்.. கைதாகிறாரா?
நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பிடனை அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது செய்ய உத்தரவிடுவாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது . அவர் மற்றும் அவரின் மகனின் சமீபத்திய பேச்சுக்கள் இந்த விவாதத்தை எழுப்பி உள்ளன.
பொதுவாக அமெரிக்க அதிபர்கள்.. அவர்கள் ஆட்சி காலத்தில் கடைசியில் யாரையாவது மன்னிக்கலாம். அதாவது அவர்கள் செய்த குற்றங்களில் இருந்து மன்னிப்பு வழங்கி செல்லலாம். சமயங்களில் செய்யாத குற்றங்களையும், செய்திருக்க வாய்ப்புள்ள குற்றங்களையும் குறிப்பிட்டு மொத்தமாக தண்டிக்கலாம். இதன் மூலம் அதிபர்கள் வழக்கில் இருந்து தப்பிக்க முடியும். அதேபோல் அதிபர்களுக்கு நெருக்கமானவர்கள் வழக்கில் இருந்து தப்பிக்க முடியும். மேலும் சில சமயங்களில் பழி வாங்கும் நடவடிக்கையாக புதிய அதிபர்கள் செயல்படுவதையும் தடுக்க முடியும். அந்த வகையில்

முன்னாள் அதிபர் ஜோ பிடன் நேற்று கடைசி நிமிடத்தில் முக்கியமான நபர்களுக்கு மன்னிப்பு வழங்கினார். தனது குடும்ப உறுப்பினர்கள், ஜனவரி 6ல் நடந்த கேபிடல் கட்டிட தாக்குதல் விசாரணைக் குழுவின் உறுப்பினர்கள் ( இவர்கள்தான் டிரம்பிற்கு எதிராக விசாரணை செய்து குற்றவாளி என்றனர், இதனால் டிரம்ப் மீது வழக்கு போடப்பட்டது). இந்த குழுவின் முன்னாள் தலைவர் மார்க் மில்லி, தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் அந்தோனி பவுச்சி , மற்றும் முன்னாள் குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் தலைவர் லிஸ் செனி ஆகியோருக்கு ஜோ பிடன் மன்னிப்பு வழங்கி உள்ளார்.
அதோடு தனது குடும்ப உறுப்பினர்கள் எல்லோருக்கும் அவர் மன்னிப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். தனது சகோதரர் ஜேம்ஸ் பிடன், ஜேம்ஸின் மனைவியான சாரா ஜோன்ஸ் பிடன், அவரது தங்கை, வலேரி பிடன் ஓவன்ஸ்; வலேரியின் கணவர், ஜான் டி ஓவன்ஸ்; மற்றும் அவரது சகோதரர், பிரான்சிஸ் பிடன் ஆகியோருக்கு முழுமையான மன்னிப்பு வழங்கி பிடன் உத்தரவிட்டு உள்ளார். அமெரிக்கர்கள் பலரையும் பிடனின் இந்த நடவடிக்கை கடுப்பாக்கி உள்ளது.
மன்னிப்பு:
இந்த நிலையில்தான் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பிடனை அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது செய்ய உத்தரவிடுவாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது . அவர் மற்றும் அவரின் மகனின் சமீபத்திய பேச்சுக்கள் இந்த விவாதத்தை எழுப்பி உள்ளன.
எல்லோரையும் மன்னித்தீர்கள்.. ஆனால் உங்களை மன்னிக்க மறந்துவிட்டீர்களா என்று டிரம்ப் பிடனை எச்சரித்துள்ளார் . அதோடு பிடன் காதில் இதே விஷயத்தை டிரம்ப் மகன் கூறியதாகவும் கூறப்படுகிறது. இதை கேட்டு டிரம்ப் முகம் மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
டிரம்ப் நடவடிக்கை:
இப்படிப்பட்ட நிலையில்தான் பிடன் மகன் ஹண்டர் பிடன் மீதான வழக்கில் பொய்யான சாட்சி கூறியதாக புகார் வைக்கப்பட்ட 51 உளவு அதிகாரிகளின் ப்யூசை பிடுங்கி உள்ளார் டொனால்ட் டிரம்ப். ஒபாமா ஆட்சி காலத்தில் துணை அதிபராக இருந்த பிடன் செய்த முறைகேடு தொடர்பான ஆவணங்கள் பிடன் மகன் ஹண்டர் பிடன் லேப்டாப்பில் இருந்ததாக புகார் வைக்கப்பட்டதே இந்த வழக்கின் பிரதானம்.
இந்த லேப்டாப் மர்ம நபர் ஒருவர் மூலம் அமெரிக்க ஊடகங்களுக்கு வழங்கப்பட அதில் இருந்த பல தகவல்கள் கசிந்தன. முதல் விஷயம் உக்ரைன் நாட்டுடன் அரசியல் ரீதியாக பிடன் தவறான ஒப்பந்தங்களை செய்தார், நிறைய பிஸ்னஸ் டீலிங்கை செய்தார், இதன் மூலம் அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் செய்தார் என்பது புகார்.
அதோடு ஹண்டர் பிடன் அந்த கணினியில் சிறுமிகளின் அந்தரங்க வீடியோக்களை வைத்து இருந்தார். பல சிறுமிகளின், பெரிய தலைவர்களின் வீடியோக்கள் இருந்ததாகவும் புகார் வைக்கப்பட்டது.
இந்த புகார்களை பிடன் - ஹண்டர் பிடன் இருவரும் மறுத்தனர்.
இந்த வழக்கில் அந்த லேப்டாப் ஹண்டர் பிடன் லேப்டாப் என்று உறுதி செய்யப்பட்டது.
ஆனால் பிடன் செய்த முறைகேடு தொடர்பான ஆவணங்கள் அதில் இல்லை என்றும் உக்ரைன் நாட்டுடன் அரசியல் ரீதியாக பிடன் தவறான ஒப்பந்தங்களை செய்தார், நிறைய பிஸ்னஸ் டீலிங்கை செய்தார் என்பதை நிரூபிக்கும் ஆவணங்கள் இல்லை என்றும் கூறப்பட்டது.
இந்த வழக்கில் நிறைய சாட்சிகள் வைக்கப்பட்டன. பிடன் அதிபராக இருந்த சமயத்திலேயே வழக்கு விசாரணை 2024ல் நடந்தது. இதில் அவர் விடுதலை செய்யப்பட்டார். அதன்பின் ஜோ பிடன் தனது மகனை அதிபர் அதிகாரத்தை பயன்படுத்தி மன்னித்தார். அமெரிக்க அதிபராக இருக்கும் ஒருவர் ஆட்சியை விட்டு செல்லும் முன் பொதுவாக சில குற்றவாளிகளை தண்டிக்க முடியும். என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications