371 நாட்கள் விண்வெளியில் இருந்த நபர்.. பூமிக்கு திரும்பியதும் சொன்ன "ஒரு வாக்கியம்".. உலகமே மிரளுதே
நியூயார்க்: நாசாவின் பிராங்க் ரூபியோ உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பி உள்ளனர். விண்வெளியில் மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட ஆராய்ச்சிக்கு பின் நேற்று இவர்கள் பூமிக்கு திரும்பினார்கள்.
நாசாவை சேர்ந்த ரூபியோ மற்றும் இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்கள் செர்ஜி புரோகோபியேவ் மற்றும் டிமிட்ரி பெட்லின் ஆகியோர் நேற்று பூமிக்கு திரும்பினார்கள். ரஷ்யாவின் சோயஸ் எம்எஸ் 23 கேப்ஸ்யூல் உதவியுடன் பூமிக்கு இவர்கள் தரையிறங்கினார்கள்.

நேற்று இரவு பூமி வளிமண்டலத்திற்குள் தீ பிடித்தபடி நுழைந்து, தீ அணிந்ததும், பாராசூட் விரிக்கப்பட்டு இந்த கேப்ஸ்யூல் பூமியில் இறங்கியது. இந்த பயணம் மூலம் நாசாவின் பிராங்க் ரூபியோ மிக நீண்ட காலத்திற்கு பின் பூமிக்கு திரும்பி உள்ளார்.
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையமான ஐஎஸ்எஸ் அமைப்பில் விண்வெளியில் 6 மாதம் மட்டுமே ஆய்வு செய்வதற்காக நாசாவின் பிராங்க் ரூபியோ சென்று இருந்தார். ஆனால் அவர் அங்கே மேலும் 6 மாதங்கள் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்பின் மேலும் 2 மாதங்கள் கூடுதலாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கிட்டத்தட்ட 14 மாதங்கள் இவர் விண்வெளியில் இருந்து சாதனை படைத்துள்ளார். அதாவது 371 நாட்கள் இவர் ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்து சாதனை படைத்து இருக்கிறார். ஸ்பேஸ் ஸ்டேஷனில் ஏற்பட்ட கூலண்ட் எனப்படும் குளிர் சாதன லீக்கை சரி செய்வதற்காக இவர் 371 நாட்களுக்கு முன்.. அதாவது கடந்த வருடம் சென்றார்.
இதன் மூலம் விண்வெளியில் அதிக காலம் இருந்த அமெரிக்க வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். ஒரு முழு காலண்டர் ஆண்டை பூமிக்கு வெளியே குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் பதிவு செய்த முதல் அமெரிக்கர் என்ற பெருமையையும் பெற்றார். முதலில் 6 மாதம்தான் இருக்கும் என்று நினைத்து இவர் ஸ்பேஸ் ஸ்டேஷன் சென்றுள்ளார்.
ஆனால் அது ஒரு வருடத்திற்கு மேல் சென்றதை இவரே எதிர்பார்க்கவில்லை. ஒரு வருடத்திற்கு மேல் பணிகள் நீடிக்கும் என்று தெரிந்திருந்தால் கண்டிப்பாக இதை நான் மறுத்திருப்பேன் என்று ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்து முன்பு இவர் கொடுத்த பேட்டியில் கூட தெரிவித்து இருந்தார்.
12 மாத பணிகளை முடித்துவிட்டு நேற்று அவர் பூமிக்கு திரும்பினார். கஜகஸ்தானில் உள்ள Dzhezkazgan நகருக்கு அருகில் இறங்கும் தளம் பகுதியில் இவர்கள் தரையிறங்கினார்கள். முதலில் டிஜெஸ்கஸ்கனுக்கு வடகிழக்கே சுமார் 330 மைல் (530 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள கரகண்டாவுக்குப் இவர்கள் சென்றனர். பின்னர் அங்கிருந்து ஹூஸ்டனுக்கு விமானத்தில் சென்றனர்.
அங்கே இவர்களுக்கு மருத்துவ சோதனைகள், சிறிய சிறிய சிகிச்சைகள், வைரஸ் சோதனைகள் செய்யப்படும். தன்னுடைய இந்த நீண்ட பயணம் தொடர்பாக அவர் அளித்த சிறிய பேட்டியில், பூமிக்கு வந்தது சிறப்பாக இருக்கிறது. இத்தனை காலம் ஸ்பேசில் இருப்பேன் என்று நினைக்கவில்லை. பூமியின் திடீர் ஈர்ப்பு விசையை உணர வித்தியாசமாக இருக்கிறது. இந்த ஈர்ப்பு விசை ஒரு விதமான உணர்வை தருகிறது, என்று கூறியுள்ளார்.
ஒரு வருடத்திற்கும் மேலாக அவர் பூமி ஈர்ப்பு விசை இன்றி இருந்ததால் இப்படி உணர்ந்துள்ளார். சில கால மருத்துவ பரிசோதனைகள், ஆய்வுக்கு பின் அவர் குடும்ப உறுப்பினர்களை சந்திக்க அனுமதிக்கப்படுவர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications