"பதில் சொல்ல கூட தகுதியில்லை".. ஐநாவில் பாகிஸ்தானை அதிரவைத்த இந்திய தூதர் .. பேச்சு மூச்சே காணோமே
பாகிஸ்தானுக்கு நேரடியாக கூட பதில் கொடுக்காமல், அங்கே யாரோ ஏதோ பேசிட்டு போறாங்க.. நாம நம்ம வேலைய பார்ப்போம் என சொல்வதை போல அந்நாட்டை அசால்ட்டாக டீல் செய்திருக்கிறார் ருச்சிரா கம்போஜ்.
நியூயார்க்: ஐநாவில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அண்மையில் அடிக்கடி காரசார விவாதங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் பாகிஸ்தானுக்கு தரமான பதிலடிகளை தர இந்தியா தவறுவதில்லை.
அந்த வகையில், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியப் பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் கொடுத்த பதிலடியை மற்ற நாட்டு பிரதிநிதிகள் மிரண்டு போய் பார்த்தனர்.
அதாவது, பாகிஸ்தானுக்கு நேரடியாக கூட பதில் கொடுக்காமல், அங்கே யாரோ ஏதோ பேசிட்டு போறாங்க.. நாம நம்ம வேலைய பார்ப்போம் என சொல்வதை போல அந்நாட்டை அசால்ட்டாக டீல் செய்திருக்கிறார் ருச்சிரா கம்போஜ்.

காஷ்மீர் விவகாரமும் பதிலடிகளும்..
இந்தியாவை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குகிறோம் என நினைத்துக் கொண்டு ஐநா போன்ற சர்வதேச தளங்களில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவதும், பின்னர் இந்தியா கொடுக்கும் பதிலடிகளை வாங்கிக் கொள்வதும் பாகிஸ்தானுக்கு வழக்கமாகிவிட்டது. காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும், அங்குள்ள மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் பழைய பஞ்சாங்கத்தையே பேசி வருகிறது பாகிஸ்தான். பாகிஸ்தான் இவ்வளவு குற்றச்சாட்டுகளை கூறிய போதிலும், எந்தவொரு நாடும் இந்தியாவிடம் இதுகுறித்து கேள்வி கேட்டதில்லை. ஏனெனில், காஷ்மீர் முழுக்க முழுக்க இந்தியாவுக்கு சொந்தமானது என்றும், அங்கு எந்தவித மனித உரிமை மீறல்களும் இல்லை என்பது உலக நாடுகளுக்கு தெரியும்.

"பாடம் நடத்த தேவையில்லை"
இதனிடையே, சமீபகாலமாக ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுக்கும் பதிலடிகள் உலக நாடுகளையே மிரள வைத்திருக்கின்றன. உதாரணமாக, கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஐநா ஆலோசனைக் கூட்டத்தில் வழக்கம் போல காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது. மேலும், இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டு வருவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இதற்கு பதிலளித்த இந்தியாவுக்கான ஐ.நா. நிரந்தரத் தூதர் ருசிரா கம்போஜ், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயக முறையை கடைப்பிடித்து வரும் நாடு இந்தியா என்றும், ஜனநாயகம் குறித்து தீவிரவாதத்தை போதிக்கும் பாகிஸ்தான் எங்களுக்கு பாடம் நடத்த தேவையில்லை எனவும் கூறி அனைவரையும் மிரள வைத்தார்.

அசால்ட்டாக டீல் செய்த இந்தியா
இந்நிலையில், ஐநா பாதுகாப்புக் கவுன்சில் சார்பில் "பெண்கள்: அமைதி - பாதுகாப்பு" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, வழக்கம் போல காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். அப்போது, இந்தியாவுக்கான ஐநா பிரதிநிதி ருசிரா கம்போஜ், "இன்றைக்கு பெண்கள் சம்பந்தமான முக்கிய விவாதத்தை நாம் முன்னெடுத்திருக்கிறோம். பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான அனைத்து முயற்சிகளை நாம் ஒன்றுசேர்ந்து எடுக்க வேண்டும். அதுகுறித்து விவாதம் நடத்தி ஆக்கப்பூர்வமான முடிவை எடுக்க வேண்டியது அவசியம். இந்த நேரத்தில் சில ஆதாரமற்ற, அறிவற்ற, அரசியல் பின்னோக்கம் கொண்ட கேள்விகளுக்கு நாம் கவனம் செலுத்த வேண்டியதில்லை. பதிலளிக்கக் கூட தகுதியற்ற கேள்வி அது. நாம் இந்த தலைப்புக்கான விவாதத்தை தொடருவோம்" என்றார்.

தர்மசங்கடம்
ருச்சிரா கம்போஜின் இந்த பதிலை கேட்டதும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி வாயடைத்து போனார். அவர் மட்டுமல்ல, சிறிது நேரம் மற்ற நாடுகளின் பிரதிநிதிகளும் அமைதியானார்கள். ருச்சிரா கம்போஜின் இந்த அணுகுமுறை பிலாவல் பூட்டோவுக்கு கடும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. பின்னர், சிறிது நேரத்தில் வழக்கமான விவாதங்கள் நடைபெற்றன.












Click it and Unblock the Notifications