அமெரிக்க அதிபர் தேர்தல்.. ஜனநாயக கட்சியின் வேட்பாளரானார் கமலா ஹாரிஸ்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
நியூயார்க்: அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜனநாயக கட்சி சார்பில், ஜோ பைடனுக்கு மாற்றாக இந்திய வம்சாவளியான தமிழத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக மாறியுள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அதேபோல ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் கடந்த சில நாட்களாக நடந்த சம்பவம் வேட்பாளரை மாற்ற செய்திருக்கிறது.

அதாவது தேர்தலின் ஒருபகுதியாக தற்போதைய அதிபரும், அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளவரும் நேரடி விவாதங்களில் பங்கேற்பது வழக்கம். இந்த விவாதங்கள் பல கட்டங்களாக நடைபெறும். மட்டுமல்லாது அதிபர் தேர்தலில் இது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த விவாதம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இப்படி இருக்கையில் கடந்த மாதம் ஜோ பைடனுக்கும், டொனால்ட் டிரம்புக்கும் இடையே விவாதம் நடந்தது. இதனை சிஎன்என் தொலைக்காட்சி நேரடியாக தொகுத்து வழங்கியது. விவாதத்தில் ஜோ பைடனின் நடவடிக்கைகள் அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
ஏனெனில் விவாதங்களில் பங்கேற்க பைடனின் உடல் ஒத்துழைக்கவில்லை. கடந்த சில நாட்களாகவே பைடன் தன்னுணர்வு இல்லாம் நடந்துக்கொண்டிருக்கிறார். பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது எங்கோ பார்த்த மாதிரி நிற்பதும், அவரது உதவியாளர் நினைவுப்படுத்திய பின்னர் திரும்பி நிற்பதும் வீடியோக்களாக வெளியாகி விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி இருக்கையில் இந்த விவாத நிகழ்ச்சியில் ட்ரம்பின் கேள்விக்கு பைடனால் பதில் சொல்ல முடியாமல் திக்கி திணறினார். பணவீக்கம், சீனா ரஷ்யா பிரச்னைகள், ஆப்கானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியது, உக்ரைன் போருக்கான நிதியுதவி உள்ளிட்ட விவகாரங்களில் பைடன் நிர்வாகத்தை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பைடனால் உடனடியாக பதிலடி கொடுக்க முடியவில்லை.
இருப்பினும் தனது பாணியில், கருக்கலைப்பு விஷயம் மற்றும் வெள்ளை மாளிகை தாக்குதல் குறித்து ட்ரம்புக்கு எதிராக பைடன் தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். ஆனாலும் பைடனின் வாதங்கள் செல்ஃப் எடுக்கவில்லை. மட்டுமல்லாது விவாத நிகழ்ச்சி குறித்து பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களில், பைடனைவிட டிரம்புக்குதான் ஆதரவு குவிந்தது. இப்படியே போனால் வேலைக்கு ஆகாது என்பதை உணர்ந்த ஜனநாயக கட்சியின் தலைமை வேட்பாளரை மாற்ற முடிவெடுத்தது.
இதற்கு சரியான ஆளாக இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் கருதப்பட்டார். இருப்பினும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவுக்கும் சிலர் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் கமலா ஹாரிஸுக்கு ஏற்கெனவே அதிபராக இருந்த அனுபவம் இருக்கிறது. அதாவது, கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் பைடனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. எனவே அவருக்கு சிகிச்சைக்காக 1.25 மணி நேரம் மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருந்தது.
அந்த சமயத்தில் துணை அதிபராக இருந்த கமலா, அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் அதிபராக கமலா ஹாரிஸ் மாறினார். இது தவிர இந்திய வம்சாவளி என்பதால் கருப்பின மக்களிடையே கமலாவுக்கு ஆதரவு இருக்கிறது. இதையெல்லாம் வைத்து ஜனநாயக கட்சியின் தலைமை கமலாவை அதிபர் வேட்பாளர் லிஸ்ட்டில் முதல் இடத்தில் வைத்திருந்தது.
இந்நிலையில் இன்று அதிபர் வேட்பாளருக்கான அதிகாரப்பூர்வ ஆவணங்களில் தான் கையெழுத்து போட்டிருப்பதாக கமலா ஹாரிஸ் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலின் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் மாறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications