பூமியில் எங்கிருந்தாலும் வேட்டையாடப்படுவீர்கள்.. FBI இயக்குநராக பொறுப்பேற்ற காஷ் படேல் எச்சரிக்கை!
நியூயார்க்: அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான FBI-ன் இயக்குநராக இந்திய வம்சாவளியினர் காஷ் படேல் பொறுப்பேற்றிருக்கிறார். இந்நிலையில், அமெரிக்காவுக்கு தீங்கு நினைப்பவர்கள் பூமியில் எங்கு இருந்தாலும் வேட்டையாடப்படுவீர்கள் என்று அவர் எச்சரித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
FBI-ன் இயக்குநராக காஷ் படேலை நியமிக்க அமெரிக்காவின் செனட் அவையில் நேற்றிரவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பின்னர், காஷ் படேலை அவர் இந்த பொறுப்பில் நியமித்தார். இதற்கு முக்கிய காரணம் 2016ல் காஷ் படேல் செய்த வேலைதான். 2016ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது. இதனை படேல் கண்டுபிடித்தார். படேலின் குற்றச்சாட்டை CIA, FBI மற்றும் NSA ஆகியவை உறுதி செய்தன. இந்த தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவாகத்தான் ரஷ்யா வேலை செய்தது. இருந்தாலும், உள்நாட்டு விவகாரங்களில் ரஷ்யா தலையிடுவதை டிரம்ப் விரும்பவில்லை.
ஆக படேல் செய்த தரமான சம்பவத்திற்கு பரிசாகத்தான் அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. என்னதான் டிரம்ப், இவரை இயக்குநராக நியமித்திருந்தாலும் செனட் அவையில் வாக்கெடுப்பு நடத்திதான் இதனை உறுதி செய்ய முடியும். அந்த வகையில் நேற்றிரவு வாக்கெடுப்பு நடந்தது. அதில், படேலுக்கு ஆதரவாக 51 ஓட்டுகளும், எதிர்ப்பாக 49 வாக்குகளும் விழுந்தன. இறுதியாக பெரும்பான்மை அடிப்படையில் படேல் இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இயக்குநரான பின்னர் அவர் தனது x தளத்தில் பதிவிட்டிருந்த விஷயம் உலகம் முழுவதும் கவனம் பெற்றிருக்கிறது. அதாவது, தன்னை இயக்குநராக்கிய டிரம்ப்புக்கு நன்றி சொன்ன படேல், அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிப்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் வேட்டையாடப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.
படேல் இயக்குனராக வந்திருக்கக் கூடிய காலம் மிகவும் சவாலானதாக இருக்கிறது. குறிப்பாக ஈரான் மற்றும் அதன் ஆதரவு நாடுகள் இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்கா மீது பயங்கர கடுப்பில் இருக்கின்றன. இவை தீவிரவாத தாக்குதல்களாக எதிரொலிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆயுதம் தாங்கிய போராட்டம் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் சைபர் தாக்குதல்கள், வர்த்தக ரீதியான தாக்குதல்கள் ஆக்கிவற்றை அமெரிக்கா எதிர்கொள்ள நேரிடும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இந்த பிரச்சனைகள் எல்லாம் எதிர்கொண்டு தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா இருக்கும் சூழலில்தான் FBI இயக்குனராக பட்டியல் பொறுப்பேற்று இருக்கிறார். வெளிநாட்டு சக்திகளின் அச்சுறுத்தல்கள் குறித்த கணிப்புகள் ஏற்கெனவே தெரிந்ததுதான். ஆனால், உள்நாட்டில் ஜனநாயக கட்சியினரே படேலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மறுபுறம் டிரம்ப்பின் நிர்வாக உத்தரவுகள் அமெரிக்காவுக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கருகலைப்பு தடுப்பு, அரசு ஊழியர்கள் குறைப்பு, பொதுத்துறை நிறுவனங்களை சுருக்குவது, சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது, நட்பு நாடுகளுக்கு வரி உள்ளிட்டவை அமெரிக்காவுக்கு எதிரான சவாலாக மாறியிருக்கிறது.
ஆளும் ஜனநாயக கட்சியினர் இதனை ஆதரித்தாலும், எதிர்ப்புகளும் பலமாக இருக்கத்தான் செய்கிறது. இவையெல்லாம் சட்டம் - ஒழுங்கு பிரச்சனையாக மாறாமல் பார்த்துக்கொள்வதும், அப்படி மாறினாலும் அது பூதாகரமாக வெடிக்காமல் கட்டுப்படுத்துவதும் FBI செய்ய வேண்டிய முக்கியமான வேலை. காஷ் படேல் இதனை எந்த அளவுக்கு சமாளிக்கப்போகிறார் என்பது போகப்போக தெரிந்துவிடும்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications