பூமியில் மேலும் ஒரு மர்ம பகுதி.. இங்கே போனால்! விடை தெரியாமல் திணறும் ஆய்வாளர்கள்.. என்ன ஆகும் தெரியுமா
வாஷிங்டன்: உலகின் மர்ம பகுதிகளில் ஒன்றான மெக்சிகோவில் 'மௌன மண்டலம்' உள்ளது. இங்கு சென்றால் மின்னணு கருவிகள் எதுவுமே வேலை செய்யாது. வானொலி சமிக்ஞைகளும் கிடைக்காது. இப்படி எதுவுமே கிடைக்காத பகுதியாக உள்ள இந்த இடத்தில் மர்மங்களை அவிழ்க்க பல ஆண்டுகளாக ஆய்வாளர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இன்று வரை விடை கிடைத்தபாடில்லை. இந்த 'மௌன மண்டலம்' பற்றிய முழுமையான விவரங்களை பார்க்கலாம்.
நிலவில் தண்ணீர் உள்ளதா? செவ்வாய் கிரகத்தில் மனிதன் வசிக்க முடியுமா? போன்ற ஆய்வுகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பிரபஞ்சத்தில் பூமியைப் போல வேறு ஏதேனும் கிரகங்களில் உயிர்கள் வசிக்கிறதா? வேற்று கிரகவாசிகள் உண்மையில் உள்ளனரா? இல்லை வெறும் கட்டுக்கதையா? என்றெல்லாம் ஆய்வில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

மெக்சிகோவில் மர்ம மண்டலம்
பூமிக்கு அப்பால் பல மைல் தொலைவில் விண்வெளியில் என்னவெல்லாம் இருக்கிறது என்று ஆய்வு வரை விஞ்ஞான உலகம் நடத்தினாலும், நாம் வசிக்கும் பூமியிலே இன்னும் பல மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் உள்ளன. பெர்முடா முக்கோணம் போன்ற சில இடங்கள் உள்ளன. இந்த நிலையில்தான், மெக்சிகோவில் விடை தெரியாத ஒரு மர்ம மண்டலம் உள்ளது. இது 'மௌன மண்டலம்' என்று அழைக்கப்படுகிறது.
இந்த பகுதிக்கு சென்றால் எந்த ஒரு மின்னணு கருவியும் செயல் இழந்து விடுகிறதாம். அப்படி என்னதான் இருக்கிறது என்பது பற்றியும் இந்த மௌன மண்டலம் குறித்த விவரங்களையும் இங்கே பார்க்கலாம். மெக்சிகோவின் சிஹுவாஹுவா பாலைவனத்தில் அமைந்துள்ள 'மௌன மண்டலம்' என்ற பகுதி, மின்னணு சாதனங்கள் மற்றும் வானொலி சமிக்ஞைகள் செயலிழக்கச் செய்கிறது.
மௌன மண்டலம் பெயர் ஏன்
இது விஞ்ஞானிகளை தொடர்ந்து குழப்பி வருகிறது. குடியிருப்புப் பகுதிகளிலிருந்து 25 மைல் தொலைவில் உள்ள இந்த இடம், உலகத்துடனான தொடர்பை துண்டிக்கிறது. தொலைக்காட்சி, வானொலி, ஷார்ட்வேவ் மற்றும் செயற்கைக்கோள் சமிக்ஞைகள் இங்கு அடைவதில்லை.
1970 ஆம் ஆண்டில் அமெரிக்க ஏவுகணை விபத்துக்குள்ளான போது 'மௌன மண்டலத்தைப்' பற்றிய ஆராய்ச்சி தொடங்கியது. விசாரணைக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க விமானப்படை குழு, ஜிபிஎஸ் கருவிகள் உட்பட அனைத்து மின்னணு உபகரணங்களும் செயலிழந்திருந்ததை கண்டது. இதனால் அந்த குழு இதற்கு 'மௌன மண்டலம்' என்று பெயரிட்டது.
ரகசிய ஆராய்ச்சி நடக்கிறது
இந்த பாலைவனம் நீண்ட காலமாக 'இருண்ட மண்டலம்' என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்த நிகழ்விற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. அமெரிக்க ஆய்வுக்குப் பிறகு, மெக்சிகோ அரசு சிஹுவாஹுவா பாலைவனத்தில் ஒரு பெரிய ஆய்வகத்தை நிறுவியது. இது 'தி ஜோன்' என அறியப்படுகிறது.
அரசாங்கம் இங்கு ரகசிய ஆராய்ச்சிகளையும் நடத்துவதாக ஒரு ஊகம் உள்ளது. மௌன மண்டலத்திற்கு காந்தப் பண்புகள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இது மின்னணுவியல் செயலிழப்புக்கு காரணமாக இருக்கலாம், இருப்பினும் இந்த பண்புகளின் தோற்றம் மர்மமாகவே உள்ளது.
பாலைவனத்தின் மர்மங்கள்
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதி 'தெதிஸ் கடல்' என்று அழைக்கப்பட்ட கடலாக இருந்தது என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. இந்த பாலைவனத்தின் தற்போதைய மேற்பரப்பு, பண்டைய கடற்பரப்பின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
உள்ளூர்வாசிகள் இந்த பாலைவனத்தில் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் அல்லது ஏலியன்கள் இருப்பதாகக் கூறுகின்றனர். அவர்கள் வானத்தில் அசாதாரண ஒளிரும் காட்சிகளையும், தானாகவே தீப்பிடித்து எரியும் தாவரங்களையும் கண்டதாக தெரிவித்துள்ளனர். மௌன மண்டலம் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சாகசப் பிரியர்கள் என அனைவரையும் கவர்ந்து வருகிறது. இது உலகின் மிகவும் மர்மமான மற்றும் விளக்கப்படாத பகுதிகளில் ஒன்றாகவே நீடிக்கிறது.
-
Iran-US war LIVE: போர் நிறுத்தம் அறிவித்தாலும் தொடரும் தாக்குதல் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications