அடுத்தடுத்து வரும் லே ஆஃப் அறிவிப்பு.. திணறும் மைக்ரோசாப்ட்..10 ஆயிரம் பேர் வேலை இன்று முதல் காலி
நியூயார்க்: சமீப நாட்களாக பேஸ்புக், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆட்குறைப்பை அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த வரிசையில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் இணைந்திருக்கிறது. இந்நிறுவனத்திலிருந்து இன்றைய தினம் 10 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1ம் தேதியிலிருந்து 7ம் தேதி வரை உலகம் முழுவதும் பல நிறுவனங்களில் சுமார் 30,000 பேர் வேலையை விட்டு அனுப்பப்பட்டுள்ளனர்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பொறுத்த அளவில் ஏற்கெனவே கடந்த அக்டோபர் மற்றும் ஜூலை மாதங்களில் ஆட்குறைப்பை அறிவித்தது. இந்நிலையில் இதனையடுத்து மீண்டும் ஆட்குறைப்பை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது குறித்து மைக்ரோசாப்ட் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை. தற்போதுவரை மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மொத்தம் 2 லட்சத்திற்கு அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட ஆட்குறைப்பு இந்த எண்ணிக்கையில் 1 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களையே பாதித்தது. ஆனால் இம்முறை அதிக அளவில் பாதிப்புகள் இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அதன் ஊழியர் ஒருவர் கூறுகையில், "தொழில்நுட்ப உலகத்திற்கு இது போதாத காலம். நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிக அளவில் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த முறை பொறியியல் பிரிவுகளிலிருந்து ஆட்குறைப்பு செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.

மூன்றில் ஒரு பங்கு
கடந்த அக்டோபரில் சுமார் 1,000 பேர் வரை நிறுவனம் பணி நீக்கம் செய்தது. அதன் பின்னர் கூடுதலாக ஆட்கள் எடுக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தது. ஆனால் அப்படி எந்த ஆட்களையும் நிறுவனம் எடுக்கவில்லை. இனி வரும் காலங்களில் வேலைக்கு எடுக்கப்படும் ஆட்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு குறையலாம். எங்கள் பணி நிச்சயமற்றதாக, சமூக பாதுகாப்பற்றதாக இருக்கிறது" என்று கூறியுள்ளார். வரும் 24ம் தேதியன்று மைக்ரோசாப்ட் இரண்டாவது காலாண்டு குறித்து தனது அறிக்கையை வெளியிடும். இந்நேரத்தில் ஆட்குறைப்பில் ஈடுபட்டிருப்பது ஊழியர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

லாபம்
இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில் கடந்த 2017 வரை கடுமையான நஷ்டத்தில் இயங்கி வந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் 2017க்கு பிறகு ஓரளவு லாபத்தை நோக்கி பயணிக்க தொடங்கியிருந்தது. 2022ம் ஆண்டு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு 'கிளவுட்-கம்ப்யூட்டிங்' மூலம் கணிசமான அளவு லாபத்தை நிறுவனம் பார்த்திருந்தது. இப்படி இருக்கும் நிலையில்தான் தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் மட்டுமல்லாது சர்வதேச அளவில் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான 'அமேசான்' 18 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்ற இருப்பதாக அறிவித்துள்ளது.

அமேசான்
மட்டுமல்லாது முழுநேர பணிகளுக்கும் ஆட்களை எடுப்பதை குறிப்பிட்ட நாட்கள் வரை நிறுவனம் நிறுத்தி வைத்திருக்கிறது. அதே போல பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் 'ஷேர் சேட்' நிறுவனமும் சமீபத்தில்தான் தனது ஆட்குறைப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி மொத்த ஊழியர்களில் 20 சதவிகித ஊழியர்களை நிறுவனம் வேலையை விட்டு அனுப்பியுள்ளது. இதில் சுமார் 2,000க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வந்திருந்தனர். இதிலிருந்து சுமார் 500 பேர் வரை வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கான ஊதியம், நிலுவைத்தொகை உள்ளிட்டவை முறையாக கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு
இதற்கு முன்னதாக ஓலா நிறுவனமும் இதேபோல சுமார் 200 ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பியது. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இந்த Lay Off படலம் தொடர்வதால் தொழிலாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். புத்தாண்டு பலருக்கு புதிய வாய்ப்புகளை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 1ம் தேதியிலிருந்து 7ம் தேதி வரை உலகம் முழுவதும் சுமார் 30,000 பேர் வேலையை விட்டு அனுப்பப்பட்டுள்ளனர். இது 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆட்குறைப்பு நடவடிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications