இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்!
இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை, சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் குடும்ப நலன் சார்ந்த தற்போதைய நிலவரங்களைத் துல்லியமாகக் கணக்கிடுவதற்காக மத்திய அரசால் நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய ஆறாவது சுற்று டிஜிட்டல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ், மும்பையிலுள்ள சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனம் (IIPS) இந்த மெகா ஆய்வை ஒருங்கிணைத்துள்ளது நேற்று தேசிய குடும்ப நல ஆய்வு 6 (NFHS-6) அறிக்கையை வெளியிட்டது. இதில் பல அதிர்ச்சி அளிக்கும் விஷயம் இருந்தாலும், சில மிகழ்ச்சி அடையும் விஷயங்களும் உள்ளது.
கடந்த 2023-2024 காலகட்டத்தில், இந்தியாவின் 715 மாவட்டங்களில் உள்ள சுமார் 6.79 லட்சம் குடும்பங்களிடம் நேரடியாக நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், இந்தியர்களின் வாழ்க்கை முறையிலும் ஆரோக்கியத்திலும் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. இதற்கு முன்பு மத்திய அரசு 2019-21 காலக்கட்டத்தில் இத்தகைய ஆய்வை நடத்தியது.

எதற்காக இந்த ரிப்போர்ட்?
மத்திய அரசு இந்த தேசிய குடும்ப நல ஆய்வு 6 (NFHS-6) தரவுகளை வெளியிடுவது மூலம் இந்தியப் பொருளாதாரத்திலும், கொள்கை உருவாக்கத்திலும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அரசாங்கம் புதிய சுகாதாரத் திட்டங்களைத் தீட்டுவதற்கும், தற்பொழுது நடைமுறையில் இருக்கும் ஆயுஷ்மான் பாரத், போஷன் அபியான் போன்ற மெகா மக்கள் நலத்திட்டங்களை மேலும் மேம்படுத்துவதற்கும் இந்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களே முதன்மை அடிப்படையாக அமைகின்றன.
நாட்டின் எந்தெந்த மாவட்டங்கள் அல்லது மாநிலங்கள் மருத்துவ வசதிகளிலும் உள்கட்டமைப்புகளிலும் பின்தங்கியுள்ளன என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து, அங்கு கூடுதல் நிதி மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு இது பயன்படுகிறது. மேலும், முந்தைய ஐந்தாவது சுற்று கணக்கெடுப்புடன் (NFHS-5) ஒப்பிட்டு, இந்தியாவின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நிலைகளில் ஏற்பட்டுள்ள உண்மையான வளர்ச்சியை அளவிடவும் இது உதவுகிறது.
பெண்களின் டிஜிட்டல் புரட்சி
அண்மையில் வெளியாகியுள்ள இந்த தேசிய குடும்ப நல ஆய்வு 6 (NFHS-6) ஆய்வறிக்கையின்படி, இந்தியர்களின் வாழ்க்கை முறையில் பல சாதகமான மற்றும் மகிழ்ச்சியான தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, பெண்களின் அதிகாரமளித்தல் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி அசுர வேகத்தில் உயர்ந்துள்ளது.
சொந்தமாக வங்கி கணக்கு வைத்துள்ள பெண்களின் எண்ணிக்கை 89 சதவீதமாகவும், தனிப்பட்ட முறையில் மொபைல் போன் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை 63.6 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. மிக முக்கியமாக, பெண்களின் இணையப் பயன்பாடு (Internet usage) 33.3 சதவீதத்திலிருந்து 64.3 சதவீதமாக, அதாவது இரண்டு மடங்குக்கும் மேலாக எகிறி டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம், ஆயுஷ்மான் பாரத் போன்ற மத்திய அரசின் திட்டங்களால், குடும்ப அளவில் மருத்துவக் காப்பீடு பெற்றவர்களின் விகிதம் 41 சதவீதத்திலிருந்து 60.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
குழந்தைகளின் ஊட்டச்சத்து முன்னேற்றமும்
இந்தியாவில் மருத்துவமனை பிரசவங்கள் (Institutional Deliveries) 90.6 சதவீதமாகப் பதிவாகியுள்ளன. அதேபோல, 12 முதல் 23 மாதக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முழுமையான தடுப்பூசி செலுத்தும் வீதம் 87.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் காணப்படும் நாள்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு (Stunting) 35.5 சதவீதத்திலிருந்து 29.3 சதவீதமாகக் குறைந்து, ஆரோக்கியமான தலைமுறை உருவாகி வருவதை உணர்த்துகிறது.
எகிறும் உடல் பருமன் பிரச்சனை
இந்த மகிழ்ச்சியான விஷயங்களுக்கு மத்தியில், 2 மற்றும் 3-ஆம் நிலை நகர மக்கள் கட்டாயம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய சில தீவிரமான புதிய எச்சரிக்கைகளையும் இந்த அறிக்கை தந்துள்ளது. இந்தியாவில் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் உடல் பருமன் (Obesity) பிரச்சனை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. 15 முதல் 49 வயதுடைய பெண்களில் உடல் பருமன் உடையவர்கள் 24 சதவீதத்திலிருந்து 30.7 சதவீதமாகவும், ஆண்களில் 22.9 சதவீதத்திலிருந்து 27.3 சதவீதமாகவும் அதிகரித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, இரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு கொண்ட அல்லது அதற்கான மருந்து உட்கொள்ளும் சர்க்கரை நோய் (Diabetes) அபாயம் ஆண்களிடம் 20.9 சதவீதமாகவும், பெண்களிடம் 17.8 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளின் சிசேரியன் அதிகம்
அனைத்தையும் விட அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், இந்தியாவில் சிசேரியன் (C-Section) பிரசவங்கள் 21.5 சதவீதத்தில் இருந்து 27.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு நாட்டின் சிசேரியன் பிரசவங்களின் அளவு வெறும் 10 முதல் 15 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறது.
ஆனால், இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இது 54.1 சதவீதம் என்ற திகைப்பூட்டும் மற்றும் அபாயகரமான அளவில் கார்ப்பரேட் மயமாக மாறியுள்ளது இந்த ஆய்வில் அம்பலமாகியுள்ளது. 2019-21 காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட அறிக்கையில் இது வெறும் 47.4 சதவீதமாகதான் இருந்தது.
இதுவே அரசு மருத்துவமனையில் சிசேரியன் (C-Section) பிரசவங்கள் 14.3 சதவீதத்தில் இருந்து 16.9 சதவீதமாக மட்டுமே உயர்ந்துள்ளது.
எச்சரிக்கை
சுருக்கமாகச் சொன்னால், இந்த NFHS-6 தரவுகள் இந்திய மக்கள் தங்களது நவீன வாழ்வியல் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை (Lifestyle) மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதை எச்சரிக்கிறது.
அரசு வழங்கும் இலவச தடுப்பூசிகள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளைச் சாமானிய மக்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்வதோடு, உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் போன்ற தொற்றா நோய்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முறையான உடற்பயிற்சி மற்றும் பாரம்பரிய ஆரோக்கியமான உணவு முறையைக் கடைப்பிடிப்பதே மக்கள் இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கிய பாடமாகும்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications