சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சீனா தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சம்பந்தமே இல்லாமல் மற்ற நாடுகளுடன் மோதல் போக்கை கையாண்டு வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே சீனாவைக் காலி செய்யும் வகையில் இந்தியா மிக முக்கியமான ஒரு ராஜதந்திர நகர்வைச் செய்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!

தெற்காசியப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும் வகையில், இந்தியாவின் மிக அதிவேக பிரம்மோஸ் (BrahMos) சூப்பர்சோனிக் ஏவுகணைகளை வாங்குவதற்கு வியட்நாம் ஆர்வம் காட்டியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற 'ஷாங்ரி-லா டயலாக்' பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்ற இந்தியப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

India Vietnam BrahMos Missile Deal India China

ஒப்பந்தம்

இது தொடர்பாகப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் மேலும் பேசுகையில், "வியட்நாம் அரசுடன் பிரம்மோஸ் ஏவுகணைக்கான ஒப்பந்தம் ஏற்கனவே முறைப்படி கையெழுத்தாகிவிட்டது.. ஆனால் அது இன்னும் பொதுவெளியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட ₹5,800 கோடி மதிப்பிலான இந்த மெகா டீலில், கடற்கரை பாதுகாப்பு ஏவுகணை பேட்டரிகள், ஏவுகணைகள், பயிற்சி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் உதவிகளை இந்தியா வழங்கவுள்ளது. எதிர்காலத்தில் போர் விமானங்களில் இருந்து ஏவப்படும் ஏர்-லான்ச்டு பிரம்மோஸ் ஏவுகணைகளையும் இந்தியாவிடமிருந்து வாங்க வியட்நாம் திட்டமிட்டுள்ளது.

மோதல் போக்கு

தென்சீன கடல் எல்லையில் தனது அண்டை நாடுகளுடன் சீனா தொடர்ந்து மோதல் போக்கை கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளும் இந்தியாவின் பிரம்மோஸ் ஆயுதத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது. ஏற்கனவே, பல தென்கிழக்கு நாடுகள் பிரம்மோஸ் வாங்க ஆர்வம் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியா

இந்தோனேசியா நாட்டுடனான பேச்சுவார்த்தைகளும் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. மிக விரைவில் இந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகும் எனப் பாதுகாப்புச் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். பிலிப்பைன்ஸை பொறுத்தவரை கடந்த 2022ஆம் ஆண்டிலேயே கிட்டத்தட்ட 375 மில்லியன் டாலர் மதிப்பில் இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்கிய முதல் வெளிநாட்டு வாடிக்கையாளர் என்ற பெருமையைப் பிலிப்பைன்ஸ் ஏற்கனவே பெற்றுவிட்டது. மலேசியா & தாய்லாந்து ஆகிய நாடுகளும் பிரம்மோஸ் ஏவுகணைகளைத் தங்களின் ராணுவத்தில் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளைத் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.

ஒலியின் வேகத்தை விட 3 மடங்கு வேகமாகப் பாயக்கூடிய, உலகின் மிக அதிவேக குரூஸ் ஏவுகணைகளில் பிரம்மோஸ் முதன்மையானது. நிலம், நீர், வான் என மூன்று தளங்களில் இருந்தும் அசுர வேகத்தில் ஏவக்கூடிய இதன் துல்லியமான தாக்குதல் திறன் எதிரி நாட்டுக் கப்பல்களையும், ராணுவ முகாம்களையும் நொடிப் பொழுதில் சாம்பலாக்கிவிடும். தென் சீன கடலில் சீனாவின் அராஜகத்தை எதிர்கொள்ள பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு இதுவொரு ஆகச்சிறந்த தற்காப்பு கவசமாகும்.

அதிகரிக்கும் அத்துமீறல்

சீனாவின் அத்துமீறல் போக்கு கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. ஒரு பக்கம் இந்தியாவுடன் மோதல்.. எல்லையில் நம்மைச் சீண்டும் சீனா, நமது நாட்டின் பகுதிகளைச் சொந்தம் கொண்டாடி வருகிறது. இது மட்டுமின்றி பல தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனும் சீனா இதுபோல மோதல் போக்கையே கையாண்டு வருகிறது.

அப்படியிருக்கும்போது அதன் சொந்தப் பகுதியான தென் சீன கடலிலேயே செக் வைப்பதுதான் இந்தியாவின் இந்த புதிய வியூகம். சீனாவின் ஆதிக்கத்தை எதிர்க்கும் நாடுகளுக்கு இந்தியா ஏவுகணைகளை வாரி வழங்குவது மாஸ்டர் ஸ்ட்ரோக் என்றே சொல்ல வேண்டும். கடந்த 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், 2030க்குள் ₹50,000 கோடி ஏற்றுமதி என்ற இலக்கை அடைய இந்த பிரம்மோஸ் பெரியளவில் கை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+